Azwan News

Azwan News

Share

Social media share only useful update
[email protected]

30/07/2021
09/06/2020

23/05/2020

பாகிஸ்தானில் பயணிகள் விமான விபத்து 107 பேர் வரையில் பலி என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

பாகிஸ்தானில் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 99 பயணிகள் மற்றும் எட்டு ஊழியர்களுடன் கராச்சி விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது, ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் இன்று பிற்பகல் தரையிறங்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் இந்த விபத்தில் சிக்கியுள்ளது என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பயணம் செய்த யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதியான மாலிரில் மாடல் காலனிக்கு அருகிலுள்ள ஜின்னா கார்டன் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

அதாவது ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு சற்று தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.
மேலும் குடியிருப்பில் இருந்த 35 பேர் வரையில் படுகாயமடைந்தனர் என்ற முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு பயணிகள் விமானங்கள் இயக்குவதற்கு பாகிஸ்தான் அனுமதியளித்து சில நாட்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் விபத்தில் சிக்கிய விமானம் PIA Flight PK-8303 என்பது தெரியவந்துள்ளது.

26/02/2020

Want your business to be the top-listed Media Company in Dubai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dubai