G MusicDirector

G MusicDirector

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from G MusicDirector, Musician/Band, Manama.

18/06/2026

தகரம்

"தமிழகத்தின் நிதிநிலையைச் சீரமைத்த பின்னர்தான் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முடியும் என்றால், தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தின் உண்மையான நிதிநிலையை அறிந்திருந்தும் மக்களை ஏமாற்றும் நோக்கில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவீசியது ஏன்? இன்றைய அரசு தயாரித்த ஆளுநர் உரை தங்க முலாம் பூசிய தகரமாகவே இருந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." - டி.டி.வி.தினகரன்

| | |

16/06/2026

With Behind Cinemas – I just earned their Behind Star badge! 🎉

16/06/2026

With Shweta Mohan – I just got recognized as one of their top fans! 🎉

11/06/2026

படைப்பாளிகள் மறைவது இல்லை....
இந்த உலகில் படைப்பாளிகள் மட்டுமே மறைவதில்லை, அவர்கள் இந்த உலகை விட்டு சென்றாலும், அவர்கள் படைத்தவை இந்த உலகில் இருக்கும் வரை அவர்களும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று அர்த்தம், சிலரின் படைப்புக்கள் இமயம் போல உயர்ந்து இருக்கும், அப்படி படைப்பால் இமயம் போல உயர்ந்தவர் இயக்குனர் இமயம் ஐயா பாரதிராஜா அவர்கள்.

அவர் எடுத்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று படங்களை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

அலைகள் ஓய்வதில்லை 1981 - உலகம் எங்கும் காதல் அலைகள் ஓய்வதில்லை என்பது தான் இந்த படம். இந்து மதத்து பையனுக்கும் கிறிஸ்தவ மத பெண்ணிற்கும் ஏற்படும் முதல் காதலை, ஒரு கள்ளம் கபடம் இல்லாத, மத நம்பிக்கைகள் தாண்டிய இயற்கையின் ஈர்ப்பை, அலைகளில் உள்ள மோதல்களாகவும், உயர்வு தாழ்வுகளாகவும் சொல்லி இருப்பார்.

இதே படத்தில் எதிர்மறையாக காதலுக்கு மட்டும் இல்லை, காமத்திற்கும், வக்கிரத்திற்கும் கூட ஜாதி மதம் இல்லை என்று ஒரு காட்சியில் சொல்லி இருப்பார். இந்த படத்தில் எனக்கு பிடித்த வசனம் ' மேரி உங்க அண்ணன் நெருப்பு, அவர் விருப்பத்தோடு உன் விருப்பம் சண்டை போட்டா, அதுல நீ தான் எரிஞ்சிருவேன்னு சொன்னேன், ஆனா சண்டை போடாமலே என்ன எரிச்சிட்டாருமா ' என்ற சில்க் அவர்களின் வசனம் தான்.

புதுமைப்பெண் 1984 - பெண் விடுதலை, பெண்களின் உரிமை, பெண் சுதந்திரம் என்று இன்றைய பெண்களுக்கு தேவைப்படும் புரட்சிகரமான செயல்களை காட்சிகளாக அன்றே உள்ளடக்கிய படம்.

எனக்கு பிடித்த காட்சி. சிறையில் இருந்து வந்த கணவன் பாண்டியன் தன் நடத்தையை சந்தேகப்பட்டு விட்டான் என்ற கோபத்தில் பெண்ணடிமை மட்டும் பேசும் ஆண்கள் மட்டுமே எழுதிய வேதங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் எல்லாவற்றையும் மனைவி ரேவதி கொல்லைப்புறத்தில் குழி வெட்டி அதில் போட்டு சமாதி கட்டி விட்டு செல்லும் காட்சி.

வேதம் புதிது 1987 - பழைய வேதங்கள் பயன்படாமல் போனால் தான் புதிய வேதம் தேவைப்படும், இந்த தலைப்பு பழைய வேதங்களை வைத்து பயனில்லை, இதோ புதியதொரு வேதம் என்பது தான். இந்தப் படத்தில் ஜாதி மதம் வர்ணம் மூன்றிற்கும் காரணமாக நிற்கும் வேதங்கள் எல்லாம் பொய் என்று நிதர்சனமான உண்மைகளை வைத்து மட்டும் புதியதோர் வேதம் சொல்லி இருப்பார்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்த வசனம் "பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் வாங்கிய பட்டமா" என்பதுதான்.

இன்னும் நாடோடித் தென்றல் கருத்தம்மா போன்ற வித்தியாசமான கதைக்களங்களோடு புரட்சி செய்த படங்கள் உண்டு.

ஒரு படத்தை எழுதி இயக்கும் இயக்குனருக்கு பொழுதுபோக்கை தாண்டிய சமூக பொறுப்பும், கடமையும், சீர்திருத்த நோக்கங்களும் வேண்டும். அதை நிரம்ப பெற்றிருந்தவர் இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்கள்.

அவர் இன்று இந்த உலகில் இல்லை என்றாலும் அவரின் படைப்புகள் தமிழ் படம் பார்ப்பவர்கள் இருக்கும் வரை நிலைத்திருக்கும். நாளைய உலகில் அவரின் புரட்சிகரமான படங்களில் உள்ள கருத்துக்கள் முழுமையாக ஏற்கப்பட்டு இருக்கும்.

- கவின் சிவசோமன்

Want your public figure to be the top-listed Public Figure in Manama?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Manama