Jet Media

Jet Media

Share

Global Breaking News | Fast Updates | Cinema News | Entertainment

10/05/2026

C ஜோசப் விஜய் எனும் நான்.... முதல்வராக பதவியேற்றார் தமிழக முதல்வர் விஜய்

09/05/2026

TVK விஜய் முதல்வராகும் நிலையில் விஜய்க்காக நண்பன் வெளியிட்ட காணொளி

08/05/2026

வதந்திகளுக்கு மத்தியில் த்ரிஷா கோபமான பதிவு!

கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

இதில் நடிகை த்ரிஷாவின் பெயரும் இழுக்கப்பட்டு, இருவரும் ஒரு திருமண நிகழ்வில் ஜோடியாகப் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானபோது சர்ச்சைகள் இன்னும் அதிகரித்தன.

இதுவரை இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வந்த த்ரிஷா, தற்போது ஒரு வித்தியாசமான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், பல மனிதர்கள் ஒன்றாக அமர்ந்து ரகசியமாக எதையோ கிசுகிசுப்பது போன்ற சித்திரம் இடம்பெற்றுள்ளது.

"எப்போதும் பிறரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பவர்கள்" என்பதைக் குறிக்கும் விதமாக இந்தப் பதிவு அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் பெரும்பான்மைச் சிக்கல் நீடித்து வரும் நிலையில், த்ரிஷாவை மையப்படுத்தி மீண்டும் வதந்திகள் கிளம்பியுள்ளன.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே த்ரிஷா இந்த 'சைலன்ட்' அட்டாக்கைப் பயன்படுத்தியுள்ளாரா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

08/05/2026

டிரைவர் இல்லாமல் கார் ஓட பயணம் செய்த நடிகை மீனா...

தனது 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'அன்புள்ள ரஜினிகாந்த்' படம் மூலம் நம் அனைவரின் மனதை வென்றவர் நடிகை மீனா.

ரஜினி, கமல், அஜித் எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்த மீனா, தற்போது துபாய்க்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவர் ஓட்டுநர் எவரும் இல்லாமல் தானாகவே இயங்கும் (Autonomous Vehicle) காரில் பயணித்துள்ளார். ஸ்டீயரிங் தானாகவே திரும்புவதையும், கார் சிக்னல்களைக் கவனித்துச் செல்வதையும் பார்த்து அவர் வியந்துள்ளார்.

"டிரைவரும் இல்லை, நானும் ஓட்டவில்லை.. ஆனாலும் கார் மிகச் சரியாகச் செல்கிறது" என ஆச்சரியத்துடன் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார் மீனா. திரையில் எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர், நிஜ வாழ்க்கையில் இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பார்த்து ஒரு குழந்தையைப் போல குதூகலித்துள்ளார்.

Website