TMMK MEDIA
this page was TMMK MMK page this page was trichy tmmk mmk .media page
20/06/2025
திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் M.A.காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கத்தை குறித்தும்,மாநாட்டின் வெற்றிக்கு மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் ஜூலை 6 அன்று மதுரையில் நடைபெற உள்ள இரட்டை கோரிக்கை மாநாடு சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு மாநாட்டின் விளம்பரங்களை மேம்படுத்தவும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை, அணி,பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றினர்.
#மமகமாநாடு #மதுரைமாநாடு
பதிவு நாள்: 20.06.25
20/12/2024
சட்டமேதையை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம் தபால் நிலையம் அருகில்மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமதுராஜா முன்னிலையில் நடைபெற்றது.
மாநில தலைமை கழக பேச்சாளர் கோவை சையது மாநில இஸ்லாமிய பிரச்சார பேரவை துணைச் செயலாளர் முஹம்மது ரபிக் மற்றும் மகளிர் அணி மாநில பொருளாளர் ஷான்ராணி ஆலிமா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப் அலி,இலியாஸ் மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் மேற்கு மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் சமூக நீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர் ஆபீஸ் கான் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இப் போராட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட துணை அணி பகுதி கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
#அம்பேத்கர்
10/10/2023
இறைவன் நாடினால்...!!!
திருச்சி (கி) மாவட்டம் சார்பாக இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
இடம் : சுமங்கலி மஹால்,மதுரை ரோடு.நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில்,திருச்சி
22/07/2023
மணிப்பூர் வன்கொடுமைக்காக மலைக்கோட்டை மாநகரில் ஆர்ப்பாட்டம்..!!!
மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மணிப்பூரில் நடைபெற்ற பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு வன்கொடுமைக்கு எதிராக பிரதமர் மோடி வாய் திறக்காததை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC ஆகியோர் தலைமை தாங்கினார்.
மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA, திராவிட இயக்க பேச்சாளர் வே.மதிமாறன், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் ஷான்ரானி ஆலிமா, ஏ ஐ டி யூ சி பொதுச் செயலாளர் கே.சுரேஷ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Area
620008