Salem Rj Kutty Prakash
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salem Rj Kutty Prakash, Public Figure, Chennai.
22/06/2026
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த சுவாரசிய சம்பவம். இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் மனநலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இறப்பதற்கு முன்பு எழுதி வைத்துவிட்டு எனக்கு உறவுகள் என்று சொல்லிவிட்டு இறந்து விட்டார் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கும் என்னுடைய அன்பு அண்ணன் வீரமணி அவர்கள் எனக்கு தொடர்பு கொண்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் இவர் உடல் இருக்கிறது இவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆனால் தொடர்பு எண் இல்லை..... உடனடியாக பல்வேறு சமூக வலைதளங்களில் நாம் பதிவு செய்தேன் விடிவதற்குள் நபர்கள் வந்தார்கள். தொடர்பு கொண்டார்கள் இறுதி சடங்கு மாலை அங்கு நடத்தப்பட்டது அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் அதேசமயம் இதற்காக உடன் இருந்த உதவியஅனைத்து நண்பர்களுக்கும் நன்றி... அன்புடன் சேலம் ஆர் ஜே குட்டி பிரகாஷ்....
23/05/2026
இந்த பதிவு ஓட்டுனர் ஒருவர் முக நூல் பதிவில் இருந்து சமூக வலைத்தளங்களில் 'லைக்'குகளுக்காக எதையும் செய்யலாம் என்ற நிலை இன்று ஆபத்தான உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, லாரி ஓட்டுநராக இருக்கும் ராஜாமணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் செய்யும் செயல்கள் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, கடும் தண்டனைக்குரியது!
ஏன் இவர்களைக் கண்டிக்க வேண்டும்?
❌ உயிருடன் விளையாட்டு: ஒரு கனரக வாகனத்தை (Lorry) ஓட்டும்போது 100% கவனம் சாலையில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் கேமராவைப் பார்த்து சிரிப்பதும், சைகை செய்வதும், பாட்டுப் பாடுவதும் மிகப்பெரிய விபத்திற்கு வழிவகுக்கும். இவர்கள் செய்யும் ஒரு சிறு தவறு சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிரைப் பறிக்கக் கூடும்.
❌ தவறான முன்னுதாரணம்: இவர்களைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், "வண்டி ஓட்டும்போது வீடியோ எடுப்பது ஒரு மாஸ்" என்று தவறாக நினைக்கத் தொடங்கியுள்ளனர். இது சமூகச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.
❌ சட்டத்தை ஏமாற்றுதல்: ஹெல்மெட் போடாதவர்களுக்கே அபராதம் போடும் காவல்துறை, பகிரங்கமாக வண்டி ஓட்டும்போது வீடியோ எடுத்து பதிவிடும் இவர்களை ஏன் இன்னும் கவனிக்காமல் இருக்கிறது?
எங்களது கோரிக்கை:
📍 - உடனடியாக இவர்களது ஓட்டுநர் உரிமத்தை (Driving License) ரத்து செய்ய வேண்டும்.
📍 வாகனம் ஓட்டும்போது வீடியோ எடுக்கும் இவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களை முடக்க வேண்டும்.
📍 இனி எவரும் இது போன்ற ஆபத்தான காரியங்களைச் செய்யாதவாறு இவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
நண்பர்களே!
லைக்குகளை விட மனித உயிர்கள் மேலானது. இவர்களின் இந்த ஆபத்தான போக்கை அனைவரும் கண்டிப்போம்! இந்தப் பதிவைப் பகிருங்கள், அதிகாரிகளின் கவனத்திற்குச் செல்லட்டும்.
பழனி மற்றும் உடுமலைப்பேட்டை நண்பர்கள் இதை கண்டிப்பாக பார்த்து அங்குள்ள தன்னார்வலர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏
விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளியை கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது எப்போது மாறும் இந்த நிலை தமிழ்நாட்டில் முதல்வர் அவர்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் போராட்டம் நடக்கும்... கடுமையான தண்டனையை விட சுட்டு தள்ள உத்தரவு செய்ய வேண்டும்.....
Click here to claim your Sponsored Listing.