Sun Suresh

Sun Suresh

Share

திமுக ஈரோடு மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்- உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஈரோடு மாவட்ட தலைவர்

20/02/2026

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருக்கிறது. நாளை (பிப்ரவரி 20) முதல் தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தொகுதிதோறும் பாகவாரியாக பெண்களின் பரப்புரை, பாக நிர்வாகிகளின் மண்டல மாநாடு எனத் தொடர்ச்சியாக களப்பணிகளை செய்து வருகிறது தி.முக. தேர்தல் நேரப் பரபரப்புகளை வலிமையான அரசியல் கட்சியால் தவிர்க்கவே முடியாது. அதே நேரத்தில், தேர்தல் களத்தைத் தாண்டியும் சிந்திக்கும் வலிமை தி.மு.க.வுக்கே உரியது.

இளைஞர்களை அரசியல்மயப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மன்றங்களைத் தொடங்குகிறது தி.மு.க இளைஞரணி. ஒரு பாகத்தில் எத்தனை தெருக்கள் இருக்கிறதோ, அவை ஒவ்வொன்றிலும் 20 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் இளைஞர் அணி மன்றம் என்பதுதான் இலக்கு. முதல் கட்டமாக இன்று சென்னை மேற்கு மாவட்டத்தில் ஆயிரம் விளக்குத் தொகுதியின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மன்றங்களை இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு துணை முதலமைச்சருமான தொடங்கி வைக்கிறார்.

மன்றங்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடித்தளம். ஒவ்வொரு கிளையிலும் ஒரு மன்றம் இருக்கும்.
திருவள்ளுவர் மன்றம், பெரியார் மன்றம், அண்ணா மன்றம், கலைஞர் மன்றம், கலைவாணர் மன்றம், புரட்சிக்கவிஞர் மன்றம், கீழப்பழுவூர் சின்னசாமி மன்றம் என திராவிட இயக்கத்தினர் பெயர்களில் அப்போது தொடங்கப்பட்ட மன்றங்களில் சிலவற்றை இப்போதும் சென்னையிலும் பிற இடங்களிலும் காணலாம்.

இயக்கப் பத்திரிகைகளைப் படிப்பது, அரசியலை அலசுவது, நாட்டு நடப்பு பற்றி விவாதிப்பது, திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம் நடத்துவது என மன்றத்தின் பணிகள் தொடர்ச்சியாக இருக்கும். செலவு சிக்கனமானது. மக்களிடம் சென்று சேரும் கருத்து அடர்த்தியானது.

1990களின் தொடக்கத்தில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் கட்சியினர் அனைவரும் அறிந்து கொள்வதற்காக ‘திராவிட மறுமலர்ச்சி மாமன்றம்’ என்ற அஞ்சல் வழி பாடத் திட்டத்தைத் தொடங்கினார் கலைஞர்.

இப்போது மீண்டும் அந்தக் கருத்தாயுதம் தேவைப்படும் நிலையில், ஏற்கனவே பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், முரசொலி இதழில் பாசறைப் பக்கம், தொகுதிகள் தோறும் நூலகம், முத்தமிழறிஞர் பதிப்பகம், அதற்கான வாசகர் வட்டம் எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் தெருக்கள் தோறும் கொள்கை முரசொலிக்க மன்றங்களைத் தொடங்கி வைக்கிறார். எளிமையான அமைப்பின் செயல்பாடுகள் வலிமையான விளைவுகளைத் தரும்.

நன்றி : DMK ITWing ஆலோசகர் Govi Lenin அவர்கள்!

#மன்றம்

Want your public figure to be the top-listed Public Figure in Erode?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Erode