Only One -The world

Only One -The world

Share

இலங்கையில் மட்டுமின்றி உலகில் பல இடங்களில் நிகழும் விடையங்கள்

12/07/2026

Argentina vs Switzerland

10/07/2026

கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு, இலங்கையின் மருத்துவ வரலாற்றில் முக்கிய மைல்கல் ஒன்று பதியப்பட்டுள்ளது.
இந்த சிக்கலான சத்திரசிகிச்சையை பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த நிபுணர் மருத்துவர்கள் இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
சத்திரசிகிச்சையின் ஒரு பகுதியாக, ஒரு குழந்தைக்கு மட்டும் இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை பிரித்தெடுத்து மற்றைய குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான சத்திரசிகிச்சை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணரும், பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மாவனெல்லையைச் சேர்ந்த தாயொருவருக்கு 2021 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். பின்னர் 2024 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர்களின் சிறுநீரக செயற்பாடுகள் சீரான நிலையை அடைந்தன.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 10 ஆம் திகதி குழந்தைகளைப் பிரிக்கும் பிரதான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சைக்காக குழந்தைகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
குழந்தைகளின் இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் மூளையின் செயற்பாடுகள் முழு சத்திரசிகிச்சை காலத்திலும் சீராகப் பராமரிக்கப்பட்டதே இந்த அரிய மருத்துவ சாதனையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மயக்க மருந்து நிபுணர் அஷானி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

10/07/2026

Spain wildfire

Want your public figure to be the top-listed Public Figure in Addalaichenai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

213 A Aliyar Road Addalaichenai 06
Addalaichenai
32350