RTX

RTX

Share

Rajarednam Thilaxan

Photos from RTX's post 31/05/2026

: நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் ஜீ. நடேசன் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்

இன்று (31.05.2026), நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் ஜீ. நடேசன் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாளாகும்.

1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்த ஐயாத்துரை நடேசன் அவர்கள், நீண்டகாலமாக மட்டக்களப்பில் வாழ்ந்து பணியாற்றியவர். ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய அவர், தமிழ் மக்களின் உரிமைகள், சமூக நீதி மற்றும் மக்களின் குரலாக தனது எழுத்தின் மூலம் இறுதிவரை பணியாற்றியவர்.

மட்டக்களப்பு இறைவரித் திணைக்களத்தில் அலுவலராக அரசுப் பணியாற்றிய அவர், அதேவேளை ஊடகத் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். வீரகேசரி பத்திரிகையில் சுமார் இருபது ஆண்டுகள் பத்தி எழுத்தாளராகப் பணியாற்றியதுடன், பல சர்வதேச வானொலிகள் மற்றும் ஊடகங்களுடனும் இணைந்து பணியாற்றினார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டச் செய்தியாளராகவும், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத் தலைவராகவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் சேவையாற்றினார்.
2004 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி, மட்டக்களப்பு இறைவரித் திணைக்களத்திற்கு கடமைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

த*மிழீழ வி*டுத*லைப் பு*லிக*ளால் “நாட்டுப்பற்றாளர்” என்ற கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் ஜீ. நடேசன். அவரது மக்கள் சேவை மற்றும் ஊடகப் பணிகளைப் பாராட்டி சாகித்திய விருது உள்ளிட்ட பல விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.

அன்னாரின் இழப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் மறைந்து 22 ஆண்டுகள் கடந்தும், அவரது படுகொலைக்கான நீதி இதுவரை நிலைநாட்டப்படவில்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும்.
அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகின்றோம்.

🕯️ ஜீ. நடேசன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

https://battinaatham.net/?p=180945&fbclid=IwdGRjcASI6IFjbGNrBIjoNmV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHtiffYfOalgLBEUHjY0waSH1i5ALB1HC9kvLgxvywcFJuXjoFbZeZTjmA192_aem_rMWY_swO9kYdd_3UU-8oQw

#நினைவுதினம் #நடேசன் #ஜீநடேசன் #திலக்ஸ் #பழுகாமம் #மட்டக்களப்பு

Photos from RTX's post 18/05/2026

: எமது வரலாற்றில் என்றும் அழியாத துயரங்களை சுமந்த மாதமாக மே மாதம் தமிழர் மனங்களில் நினைவுகூரப்படுகிறது. உரிமைக்காக ஏங்கிய ஒரு இனத்தின் உயிர்கள், கனவுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கொடூரமாக சிதைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுகள் இன்னும் ஆறாத வலியாக எம்முள் வாழ்கின்றன.

அந்த இனஅழிப்பில் உயிர்நீத்த அப்பாவி பொதுமக்களை நினைவுகூரும் வகையில், இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை நடாத்திய முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வை இலங்கை தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று வடக்கு பிரதேசகிளை கிளை ஏற்பாடு செய்திருந்தது.
உயிரிழந்த உறவுகளின் நினைவுகளை மனதில் நிறுத்தியும், அவர்களின் தியாகங்களையும் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உறுதியுடனும் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
“நினைவே நமது உறுதி…
முள்ளிவாய்க்கால் என்றும் மறவோம்.”

#திலக்ஸ் #முள்ளிவாய்க்கால்

Photos from RTX's post 18/05/2026

: குறுமண்வெளியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

#திலக்ஸ் #முள்ளிவாய்க்கால் #𝐁𝐀𝐓𝐓𝐈𝐂𝐀𝐋𝐎𝐀

Photos from RTX's post 15/05/2026

: முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை இடம்பெற்று நீதியின்றி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகின்றன. இந்த முள்ளிவாய்க்காலில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டும், எரிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டும், பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஒரு பகுதியாக, போரதீவுப்பற்று தவிசாளர் கௌரவ வி. மதிமேனன் அவர்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) போரதீவுப்பற்று பிரதேச சபை முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

#திலக்ஸ் #முள்ளிவாய்க்கால்

Photos from RTX's post 11/05/2026

மட்டக்களப்பு இளைஞர் விவசாயத்திட்டம் வெள்ளிமலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழாவின் திருக்கொடியேற்றம் 2026.05.11

#திலக்ஸ் #வெள்ளிமலைப்பிள்ளையார் #வெள்ளிமலை

Photos from RTX's post 15/04/2026

- இளைஞர் விவசாயத்திட்ட வெள்ளிமலையான் விளையாட்டுக்கழகம் நடாத்திய "வெள்ளிமலையான் பிரிமியர் லீக்" (VPL) சுற்றுப்போட்டியின் போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் போரதீவுப்பற்று பிரிதேச சபையின் தவிசாளர் கௌரவ வி.மதிமேனன் ஆகியோர் கலந்துகொண்ட போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள்.

#திலக்ஸ்

14/04/2026

அனைவருக்கும் எனது இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
සුභ දෙමළ සිංහල අලුත් අවුරුද්දක් වේවා !
Happy Tamil & Sinhala New Year !

#திலக்ஸ்

27/03/2026

மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதி கோரி அமைதியான பேரணி.

#திலக்ஸ் #மட்டக்களப்பு #திக்கோடை #ஆர்ப்பாட்டம்

Photos from RTX's post 27/03/2026

மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதி கோரி அமைதியான பேரணி; உறவினர்களுடன் அமைச்சரைச் சந்தித்த சாணக்கியன் எம்.பி.

மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதி கோரி இன்று மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் அமைதியான கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், காந்திப்பூங்காவிலிருந்து பேரணியாக பழைய கச்சேரி வரை சென்ற அவர்கள், அங்கு மாவட்ட செயலாளரைச் சந்தித்து, சம்பவம் தொடர்பான தங்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கும் பெண்ணின் உறவினர்களை சாணக்கியன் எம்.பி. அழைத்துச் சென்றார். அங்கு, ஜனாதிபதிக்கான மகஜர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி அவர்களிடம் வழங்கப்பட்டது.

#திலக்ஸ் #மட்டக்களப்பு #திக்கோடை #ஆர்ப்பாட்டம்

Photos from RTX's post 24/02/2026

மட்டக்களப்பின் போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சியா..!

மட்டக்களப்பு மாவட்ட எல்லை மாற்றம் குறித்த சர்ச்சை: போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சி?

மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக கவலைக்கிடமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல், மட்டக்களப்பின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் பிரிவுகளுடன் இணைப்பதற்கான கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

அக்கூட்டத்தில் மாவட்ட எல்லை நிர்ணயக் குழுவின் அங்கீகாரமும், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, இன்று (24.02.2026) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன் அவர்களை சந்திக்க பிரதேச செயலகத்திற்குச் சென்றார். இச்சந்திப்பில் போரதீவுப்பற்று தவிசாளர் கௌரவ வி. மதிமேனன், பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவ அ. பிறேமாகரன், கௌரவ ம. கோபிநாத், கௌரவ கா. யோகராசா மற்றும் கௌரவ தே. ஜேனுகா ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

இதுதொடர்பாக எந்தவித தகவலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்தார். எல்லை நிர்ணயம் தொடர்பாக சில இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தாலும், குறிப்பிட்ட கிராமங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படும் திட்டங்கள் பின்வருமாறு:

1️⃣ மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25ஆம் கொலணி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட குமாரிகம கிராமத்தையும் இணைத்து, “சமகிபுர” என்ற புதிய கிராமத்தை உருவாக்கி அம்பாறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதல்.

2️⃣ மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராணமடு கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட சுகதகம கிராமத்துடன் இணைத்தல்.

3️⃣ மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட கோணகல கிராமத்துடன் இணைத்தல்.

மேற்கண்ட மூன்று திட்டங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எல்லை நிர்ணய நடவடிக்கைகளின் மூலம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுடன் இணைத்து, தமிழர் இருப்பை பலவீனப்படுத்தும் மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

#திலக்ஸ் #எல்லை_நிர்ணயம்

Want your public figure to be the top-listed Public Figure in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Palugamam
Batticaloa
30234