The Arrow
Join in our whatsapp community-
https://wa.me/94702678130
𝐰𝐨𝐫𝐤 𝐡𝐚𝐫𝐝 𝐯𝐢𝐜𝐭𝐨𝐫𝐲 𝐬𝐡𝐚𝐥𝐥 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰 ���
13/10/2025
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி கற்*பழிக்கப்பட்டு முகம் எரிக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன
வயது ( 20-30 ) இன்னமும் யார் என அடையாளம் காணப்படவில்லை
Copy post :-
10/10/2025
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:
புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்
2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள்
புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும்.
✅ கட்டாய Subjects – 5:
இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்:
1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3)
2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3)
3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3)
4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3)
5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2)
🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14
✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2:
மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2.
Second National Language
Information and Communication Technology
History
Civic Education
Health and Physical Education
Technology :
Tourism and Hospitality Management Technology
Design and Engineering Technology
Livestock Product Technology
Artistic Product Technology
Entrepreneurship and E-commerce Technology
Geography
Aesthetics Education:
Oriental Music
Western Music
Carnatic Music
Oriental Dance
Bharatha Dance
Western Dance
Drama and Theatre
Art
Entrepreneurship and Financial Literacy
➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும்.
🔹 GPA (Grade Point Average) முறைமை:
பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை.
இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும்.
✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக):
% Marks Range Grade Point
90% - 100% 4.0
80% - 89% 3.7
70% - 79% 3.3
60% - 69% 3.0
50% - 59% 2.7
40% - 49% 2.0 (Pass)
Below 40% 0.0 (Fail)
👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே.
✅ GPA கணக்கீட்டு முறை:
மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு:
Mathematics: 3.7
English: 3.3
Mother Tongue: 4.0
Religion: 3.7
Science: 3.0
Optional Subject 1: 3.5
Optional Subject 2: 3.2
📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4
📌 Final GPA = 24.4 / 7 = 3.48
இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும்.
🔹 GPA முறைமையின் நன்மைகள்:
✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது
✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம்
✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது
✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும்
✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம்
🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்:
📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும்
📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும்
📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்
இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது.
📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை.
copy
05/10/2025
“என் மகனை 12 வயதில் துறவியாக்கச் சொன்னபோது...”
- ஜனாதிபதி அநுரவின் தாயார் பகிர்ந்த நினைவுகள்
“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரமான அநுராதபுரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிராமமான தம்புத்தேகம எனும் பகுதியில் ஒரு சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரையினாலான வீட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தாயார் டி.எம். சீலாவதி (86) தனது மகள் ஸ்ரீயலதாவுடன் (62) வசித்து வருகிறார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இளம் பருவம் பற்றி தாயார் சீலாவதி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,
“எனது மகனுக்கு சிறுவயதில் காற்றில் பட்டங்களை பறக்க விட மிகவும் பிடிக்கும். தினமும் அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலடிக்கவும் பிடிக்கும். அநுரவுக்கு எப்போதும் புத்தகங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும்.
வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து சப்தமாக படித்து கொண்டிருப்பது இன்னும் நினைவில் எனக்கு இருக்கிறது.
சாப்பிடும் போதும் புத்தகமோ செய்தித்தாளோ வாசித்துக் கொண்டே சாப்பிடுவது அநுரவின் வழக்கமாக இருந்தது.
அநுர கல்லூரியில் படிக்கும்போது அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு கொலை மிரட்டலும் வந்தது. அவர் நெருங்கிய தொடர்பிலிருந்த அவரது சிறிய தந்தையார் (தந்தையின் சகோதரர்) கொலை செய்யப்பட்டார். அநுர தலைமறைவாக இருந்த காலத்தில் 1992-ம் ஆண்டு அவரது அப்பா இறந்துபோது, அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.
12 வயதிருக்கும்போது புத்த விகாரை ஒன்றின் தலைமை குரு ஒருவர், அநுரவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார். அதனை நான் மறுத்து விட்டேன். அநுர பிறந்து ஆறாம் மாதத்தில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டியபோது,
’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்று அதிர்ச்சியோடு சொன்னார். எனது மகன் சாதாரண குடும்பத்திலிருந்து இன்று ஜனாதிபதியாகி உள்ளார். அவர் பொய் சொல்பவரோ, மோசடி செய்பவரோ கிடையாது. அவருக்காக அனுராதபுரத்தில் உள்ள ஆலயங்களில் எனது மகனுக்காக பிரார்த்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சகோதரி ஸ்ரீயலதா கூறும்போது,
“எனது தாயார் தினமும் இரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கிறார். செய்தியில் எனது சகோதரன் வரும்போதெல்லாம் என் மகனா என கேட்பார். மகனுடன் இருக்க அவர் விரும்புவார். என் சகோதரன் அநுரவும் இந்தப் பகுதிக்கு வரும்பொதெல்லாம் எங்களை பார்க்க வீட்டுக்கு வருவார். அவர் இந்த நாட்டின் இந்த பகுதிக்கு வரும்போதெல்லாம், எங்களை சந்திக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, அநுர காரில் தூங்கியதுதான் அதிகம். அவரது பதவியேற்பு ஆரவாரமின்றி நடைபெற்றது. அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்” என தெரிவித்துள்ளார்.
யார் இந்த திசாநாயக்க?
- இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் அநுர குமார திசாநாயக்க பிறந்தார்.
தனது பாடசாலை படிப்பினை தம்புத்தேகவில் உள்ள காமினி மகா வித்யாலயத்திலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் களனி பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியோடு (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு அதன் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2000-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார்.
2004-ம் ஆண்டு அப்போதைய கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.
2014-ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார்.
மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.
02/10/2025
Please share 🙏
📌👉இங்கே நீங்கள் பார்ப்பது| நேற்று மதுகமாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து வாங்கிய லாலிபாப்பால் வந்த வினை | செயற்கை நிறயூட்டி கலந்த உணவுகள் ஒரு குழந்தை விஷம் குடிப்பதைப் போன்றது.
உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க இதை முடிந்தவரை பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.!
போக்குவரத்து அதிகாரி ஒருவர், தமிழ் மொழி பேசும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரை ( "****** இது மட்டக்களப்பு என்று நினைத்தாயோ *******) தகாத வார்த்தையால் பேசி அச்சுறுத்தல் செய்தார்.
இது போன்ற அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். உங்களின் கருத்து?????
TVK தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் மனம் உருகிய பதிவு....❤️🩹
#தளபதி #விஜய்
Actor Vijay Actor Vijay Only #தமிழ்நாடு
29/09/2025
📷 யாழிலிருந்து நுவரெலியா பயணித்த பஸ் விபத்து | தெய்வாதீனமாக பாரிய அனர்த்தம் தவிர்ப்பு
|
29/09/2025
ஐஸ் போதை பொருள் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.
கட்டாயம் வாசிக்கவும்.
ஐஸ் போதை பொருள்: ஒரு அறிமுகம்
ஐஸ் (Ice) அல்லது மெத்தம்பேட்டமைன் (M**hamphetamine) என்பது ஒரு மிகவும் சக்திவாய்ந்த, ஊக்கமருந்தாகும். இது மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதித்து, உடல் மற்றும் மனதளவில் பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஐஸ் பொதுவாக படிகங்கள் (Crystals) போன்று காணப்படுவதால், இது "ஐஸ்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் தெளிவான மற்றும் பளபளப்பான தோற்றமே இதற்கு காரணம். இது சூடாக்கப்பட்டு புகையாக சுவாசித்தல், ஊசி மூலம் உட்செலுத்துதல், அல்லது மூக்கு வழியாக உறிஞ்சுதல் போன்ற பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஐஸ் போதை பொருளின் தோற்றம் மற்றும் வரலாறு
மெத்தம்பேட்டமைன் முதன்முதலில் 1887 ஆம் ஆண்டில் ஜப்பானிய வேதியியலாளர் நாகாய் நகாயோஷி என்பவரால் எப்ட்ரின் (Ephedrine) என்ற தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இருப்பினும், தற்போது நாம் அறிந்த மெத்தம்பேட்டமைன் படிக வடிவத்தை 1919 ஆம் ஆண்டில் அமுசி ஷோகுச்சி என்ற மற்றொரு ஜப்பானிய வேதியியலாளர் உருவாக்கினார்.
* முதலாம் உலகப் போர்: முதல் உலகப் போரின்போது, இராணுவ வீரர்களின் சோர்வை குறைக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது.
* இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானிய மற்றும் ஜெர்மன் இராணுவங்கள் தங்கள் விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களுக்கு இது ஒரு சோர்வை நீக்கும் மருந்தாக பரவலாக வழங்கினர். ஜப்பானில் இதை "ஹிரோபொன்" என்று அழைத்தனர். போர் முடிந்த பிறகு, இராணுவத்தில் இருந்து வெளியேறிய வீரர்கள் மத்தியில் இந்த மருந்து பரவலான பயன்பாட்டிற்கு வந்தது, இதனால் ஜப்பானில் ஒரு பெரிய போதைப்பொருள் நெருக்கடி ஏற்பட்டது.
* 1950-60கள்: அமெரிக்காவில், மெத்தம்பேட்டமைன் ஒரு எடை குறைப்பு மருந்தாகவும், மனச்சோர்வுக்கான மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. அப்போது அது "மெடில்லின்" என்ற பெயரில் விற்கப்பட்டது. அதன் போதை ஏற்படுத்தும் தன்மை மற்றும் பிற கடுமையான பக்கவிளைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 1970களில் அதன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது.
* தற்போதைய நிலை: தற்போது, மெத்தம்பேட்டமைன் உலகெங்கிலும் சட்டவிரோத போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது பல நாடுகளிலும், குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு நாடுகளில் ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக மாறியுள்ளது. இலங்கையில் இது "ஐஸ்" என்ற பெயரில் அதிகம் பேசப்படும் ஒரு ஆபத்தான போதைப்பொருளாக உள்ளது.
ஐஸ் எப்படி உருவாக்கப்படுகிறது?
ஐஸ் என்பது சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் ஒரு செயற்கை போதைப்பொருள். பொதுவாக, இது சூடோபெப்ட்ரின் (Pseudoephedrine) அல்லது எப்ட்ரின் (Ephedrine) போன்ற மருந்துகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்துகள் சளி மற்றும் காய்ச்சலுக்கான மாத்திரைகளில் காணப்படுகின்றன. மேலும், அசெட்டோன், லித்தியம், அம்மோனியா, ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற பல இரசாயன பொருட்களும் அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது வெடிக்கும் மற்றும் நச்சு வாயுக்களை உருவாக்கும். இந்த பொருட்கள் பொதுவாக சட்டவிரோத ஆய்வகங்களில், சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் தயாரிக்கப்படுகின்றன, இது தயாரிப்பாளருக்கும் பயனாளிகளுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.
👉ஐஸ் போதைப்பொருளின் விளைவுகள்
ஐஸ் பயன்படுத்துபவர்களுக்கு உடனடி, ஆனால் தற்காலிகமான, உற்சாக உணர்வும், ஆற்றலும் கிடைக்கும். ஆனால், அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு மிகவும் ஆபத்தானவை.
* உடனடி விளைவுகள்:
* இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பு.
* பசியின்மை.
* அதிக விழிப்புணர்வு.
* எரிச்சல், பதட்டம்.
* உடல் வெப்பநிலை அதிகரிப்பு.
* நீண்டகால விளைவுகள்:
* மூளை சேதம், நினைவாற்றல் இழப்பு, மனநோய், சித்தப்பிரமை.
* "மெத் வாய்" (M**h Mouth): பற்கள் அழுகி விழுந்துவிடும்.
* சருமத்தில் புண்கள், கொப்புளங்கள்.
* சமூக உறவுகளை இழத்தல்.
* இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு.
* குற்றச் செயல்களில் ஈடுபடுதல்.
👉ஐஸிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
ஐஸ் போதைப்பொருளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்.
* விழிப்புணர்வு: ஐஸ் போதைப்பொருளின் ஆபத்துக்கள் பற்றிய தகவலை குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பகிருங்கள். போதைப்பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று உறுதியான முடிவெடுங்கள்.
* சமூக ஆதரவு: போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் இருந்தால், அவர்களை ஒரு போதும் தனிமைப்படுத்தாதீர்கள். அவர்களை அன்பாக அணுகி, சிகிச்சை பெற உதவுங்கள்.
* மருத்துவ உதவி: போதைப்பொருள் பழக்கம் ஒரு நோயாகும். அதற்கு மருத்துவ மற்றும் மனநல நிபுணர்களின் உதவி அவசியம். இலங்கையில் உள்ள பல மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்கள் இதற்கான சேவைகளை வழங்குகின்றன.
* சட்ட அமலாக்கத்திற்கு உதவுதல்: ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றி உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்க தயங்காதீர்கள்.
👉இலங்கையில் ஐஸ் போதைப்பொருள்
இலங்கையில் தற்போது ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு ஒரு தீவிரமான தேசிய பிரச்சனையாக மாறி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும், பாடசாலை மாணவர்களிடமும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இலங்கையில் உள்ள தேசிய அபாயகரமான மருந்து கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board - NDDCB) மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் இணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஐஸ் போதைப்பொருள் ஒரு தனிநபரின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தின் அமைதியையும், எதிர்காலத்தையும் அழித்துவிடும் ஒரு கொடிய நோய். இதை எதிர்கொள்ள, விழிப்புணர்வு, கல்வி, குடும்ப ஆதரவு மற்றும் அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சி அவசியம். நாம் அனைவரும் இணைந்து போதைப்பொருள் அற்ற, ஆரோக்கியமான இலங்கையை உருவாக்குவோம்.
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த கட்டுரையை அனைவருக்கும் பகிருங்கள்.
நன்றி!
📝 A. G Yaseer Mohamed BA (Hons) in PCR in Kelaniya
29/09/2025
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் மோதிய ஒரு பெண், அதன் இயந்திரத்திற்குள் சிக்கி இருந்த நிலையில் அருகிலுள்ள கரேஜில் பணிப்புரிந்த தொழிலாளர்களால் மீட்கப்பட்டு டிக் ஓயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பொடி மெனிக்கே ரயில் மெதுவாக பயணித்ததாகவும்,குறித்த பெண் நீண்ட நேரம் ரயில் பாதைக்கு அருகில் இருந்ததாகவும் கரேஜ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
29/09/2025
🧠🗣️அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மிகவும் முக்கியமான 1200 பொது அறிவுகள்
📝:- kalvi ulagu. The Arrow
28/09/2025
Please share 🙏
மக்களே கவனியுங்கள்......‼️‼️‼️
📌👉அவர்களும் மனிதர்களே சற்று சிந்தியுங்கள்‼️
📌கண்ணாடி துண்டுகளை கவனமின்றி குப்பையில் போட்டதால் நடந்த விபரீதம்.
மக்களே! குப்பைகளை தரம்பிரித்து வழங்குமாறும் வீதி மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீச வேண்டாம் என்றும் தொடர்ச்சியாக அறிவித்தல்கள்
பல நகர பகுதியில் பொது மக்களால் வீடுகளில் இருந்து கழிவுப்பைகள் கொண்டு வரப்பட்டு வீசப்படுக்கிறது.
அவ்வாறு வீசப்பட்ட கழிவுப் பொதிகளை நகரசபையின் சுகாதார தொழிலாளிகள் அகற்ற முயன்ற வேளையில் அவற்றில் காணப்பட்ட உடைந்த கண்ணாடி துண்டு சுகாதார தொழிலாளி ஒருவரது காலில் வெட்டியதால் பாரிய காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குப்பை சம்பந்தமான பல விழிப்புணர்வு அறிவித்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் அவற்றினை பின்பற்றாத காரணத்தினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
உங்கள் வீடுகளில் சேருகின்ற உடைந்த கண்ணாடி துண்டுகளை வேறாக பிரித்து சுகாதார தொழிலாளிகள் உங்கள் வீடுகளுக்கு வருகின்ற பொழுது அதை அவர்களிடம் ஒப்படைக்குமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.
Click here to claim your Sponsored Listing.