Be Positive

Be Positive

Share

வாழ்க்கை வாழ்வதற்கே😍

10/03/2026

தாமதமாகிவிட்டது என்று நாம் தளர்ந்து போய் அமர்ந்திருக்கும் தருணங்களில், நம் காலடியில் இருக்கும் புற்களைக் கவனித்துப் பார்த்திருக்கிறோமா?

அவை ஒருபோதும் கடிகாரத்தைப் பார்த்து வளர்வதில்லை.

கவிஞர் வண்ணதாசனின் இந்த வரிகளில் ஒரு தீராத நம்பிக்கை ஒளிந்திருக்கிறது.

எத்தனையோ பொழுதுகளை நாம் வீணடித்து விட்டதாக ஒரு கணக்குப் போட்டு, 'இனி என்ன செய்ய முடியும்?' என்று கவலைப்படுவதிலேயே மீதமுள்ள நேரத்தையும் தொலைத்து விடுகிறோம்.

ஆனால், ஒரு சிறிய விதையை இன்று இந்த நொடியில் நீங்கள் நட்டாலும், அது தன் வாழ்வின் பயணத்தை இப்போதே தொடங்கத் தயாராக இருக்கிறது.

இன்றைய அதிகாலைப் பொழுது உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.

மதிய வெயில் உங்களை வாட்டியிருக்கலாம்.

ஆனால், இந்த மாலை நேரத்தில் நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, இன்னும் எத்தனையோ சிகரங்களைத் தொட உங்களை அழைத்துச் செல்லும்.

ஒவ்வொரு அடியும் ஒரு புதிய தொடக்கம்தான்.

நேற்றைய இழப்புகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை விட, இன்றைய கையிருப்பைக் கொண்டு நாம் எங்கு செல்லப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒரு தையல்காரர் கோணலாகிப் போன ஒரு தையலை மெல்லப் பிரித்துவிட்டு, மீண்டும் ஒரு நேர்த்தியான தையலைப் போடுவதைப் போல, நம் வாழ்வின் பக்கங்களை நாம் எப்போது வேண்டுமானாலும் புதிதாக எழுதத் தொடங்கலாம்.

கையிலிருக்கும் பேனாவைத் திறக்கத் தயங்காதீர்கள். அந்த முதல் கோடுதான் ஒரு மாபெரும் காவியத்தின் தொடக்கமாக இருக்கப்போகிறது.

இன்னும் எவ்வளவு தூரம் போக முடியும் என்று மலைக்கத் தேவையில்லை. மெல்ல நடக்கத் தொடங்குங்கள்.

நீங்கள் நடக்கும் அந்தப் பாதையே உங்களுக்குப் புதிய வழிகளைக் காட்டும்.

காலம் கடந்துவிட்டதாக யார் சொன்னது? இதோ, இந்த நொடியில் இருந்துதான் உங்கள் வசந்த காலம் தொடங்குகிறது.

எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். தொடங்குங்கள்.

👍🏻👍🏻👍🏻

08/02/2026

வேலை செய்யும் இடத்தில்…
ஒருவன் அளவுக்கு மீறிய
சுதந்திரத்துடன் நல்லவன் போல்
நம்மை பிரமிக்க வைக்கிறான் என்றால்..
1) அவன் அங்கு திருட்டுதனம்(அ)
துரோகம் செய்கிறான் (அ)
செய்ய போகிறான்😜
2)மற்ற அனைவரையும் குற்றம் சொல்லி,
தானே நல்லவனாக கூறி,
அங்கு ஏமாற்றி வாழ்கிறான்🤪
3) வசதியாக வாழ…
முழு அடிமை என்பது பெருமையே
என நினைத்து வாழ பயிற்சி எடுத்தவன் அவன்😄

25/11/2025

திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகின்றன, ஆனால் நீ ஒரு முறையாவது என்னைப் பார்த்து "ஐ லவ் யூ" என்று சொல்லவில்லை" என்றாள் அவள்.

அதற்கு அவன் சொன்னான்: உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நாங்கள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பொழிந்தது. உடனே நான் என் மேலங்கியைக் கழற்றி உன்னை மூடினேன். உன்னை பாதுகாப்பாக அழைத்து வந்தேன். நான் மழையில் நனைந்ததால் நோய்வாய்ப்பட்டேன், உனக்கு எதுவும் ஆகவில்லை."

அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நாங்கள் எங்கள் மகளைப் பார்த்துவிட்டு
வரும் வழியில் உனது பாதங்கள் வலித்தது.
உன்னால் நடக்க முடியவில்லை. நான் உன்னை என் தோளில் சுமந்து சென்றேன்" என்றான்.

அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நாங்கள் கண் மருத்துவரிடம் சென்ற போது, எனக்கு கண் பார்வை மங்கப் போகிறது என்று மருத்துவர் சொல்ல, நான், "பரவாயில்லை
எனக்கு வேறு இரு கண்கள் இருக்கின்றன. அதுதான் என் மனைவி. அவள்தான் என் கண்ணின் மணி" என்றேன்.

அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.

அதற்கு அவன்: இவைகள் அன்பின் வடிவங்கள் இல்லையா? என்றான்.

அதற்கு அவள்: நிச்சயமாக, நீ என்னை காதலிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதனை சொல்லில் நான் கேட்க ஆசைப்படுகிறேன்" என்றாள்.

அந்த நேரத்தில் அவன்: முதலில் நீ படிக்கட்டிலிருந்து விழுந்து விடாதபடி என் கையை நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்! என்றான்.

இப்போது புரிகிறதா? நான் உன் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறேன், உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்ககறேன் என்று' என்றான்.

காதல் என்பது பெயர்ச்சொல் அல்ல, அது வினைச்சொல். காதல் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது நடத்தைகள். காதலில் வார்த்தைகளை விட நடத்தைதான் மிக முக்கியம். வார்த்தைகளில் "ஐ லவ் யூ" சொல்லிக்கொண்டு தொடங்கிய எத்தனை பல தொடர்புகள் முதல் நடத்தையில் தோல்வி கண்டு முறிந்து விட்டன.

வார்த்தைகளில் மாத்திரம் இல்லாமல் நடத்தைகளிலும் தொடரும் காதல் மாத்திரம் தான் நீடுழி வாழும்.

இது யார் எழுதியது எனத் தெரியாது......!

*பிடித்தது படித்து பகிர்ந்து கொண்டேன் *

03/11/2025

காதலென்பது உயிர்ப்பு தான்...!!

நம்பிக்கையோடு கொஞ்சம் காதலித்தே வாழ்வதில்

கொட்டிக்கிடக்கிறது சந்தோசங்கள்.

சேர்வதா பிரிவதா என்ற தேடல் இல்லாமல்

குடுப்பதும் பறிப்பதும் என்ற கணக்கிலடங்காமல்

நேசத்தை கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்திருக்கும் காதல் எல்லாம் வயது கடந்த இளமையோடு துள்ளிக்குதிக்கும்.

நேசிப்புகளுக்கு வயது இருப்பதில்லை.

காதலித்துக்கொண்டிருப்தில் ஒரு அலாதி சுகமே...

இந்த உலகின் ஏதாதோ ஒரு மூலையில் தன்னை மறுபடி ரசிக்கவைக்கும், தனக்குள் சிரிக்கவைக்கும், யாருக்காகவோ அழவைக்கும் எல்லாமும் நிறைந்த சக்தி காதலுக்கே உண்டு...

காதலை அப்படியே தின்று வாழ்தல் பெருவரமே...

இழப்பிலும் பிரிவிலும் இழந்துவிடாத நிரந்தர காதல்களெல்லாம் மனதின் தாஜ்மஹால்களாய் எழுந்து பிரகாசிக்கிறது…

காதல் உடல்தாண்டி வயது தாண்டி மனம்சுமக்கும் மெல்லிய மயிலறிகின் தடவல்கள்…

உலகின் ஆகச்சிறந்த உன்னதங்கள்…

கடவுளையும் இறப்பையும் சொர்க்கத்தையும் நரகத்தையும் கண்முன்காட்டும் பிறப்பின் பயன்கள்...

இணைந்தாலும் இல்லாவிட்டாலும் உயிருக்குள் இணைந்து கிடக்கும் அற்புதங்கள்…

கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ரசனை என உயிர்ப்பித்து தரும் உன்னதங்கள்...

காதலை விடவும் ஏதுமிருப்பதில்லை நாம் உயிர்ப்புடன்இருப்பதை உணர்வதற்கு...!!

🖤🖤🖤 I’ll

Want your public figure to be the top-listed Public Figure in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Jaffna