BIT-Jaffna

BIT-Jaffna

Share

Bachelor of Information Technology (External); One of the top IT degree program conducted by the University of Colombo.

31/07/2024

A/L 3 pass உடன் BIT degree Colombo University இடமிருந்து
வேறு Degree மற்றும் Diploma பயில்பவர்களும் ஒரே நேரத்தில் பயில முடியும். பரீட்சைகள யாவும் யாழ் பல்கலைக்கழகத்தில்.

31 August 2024 is the closing date.
Apply now via
https://www.bit.lk/index.php/2024/06/25/application-for-the-bachelor-of-information-technology-bit-degree-programme-external-24th-intake-2024/

BIT அறிமுகம்..

இலங்கையில் தகவல்
தொழில்நுட்ப இளமாணி (வெளிவாரி) பட்டம்
Bachelor of Information Technology
External Degree Programme
இலங்கையில் கொழும்பு,மொறட்டுவை என்ற இரு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றது.

இதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் (இலங்கையில் முதல் தரவரிசையிலும் உலகத் தரவரிசையிலும் இடம்பிடித்த) கொழும்பு பல்கலைக்கழக கணிணிக் கல்லூரியினால் (UCSC) இனால் வழங்கப்படும் BIT பற்றிய தெளிவை இப் பதிவு வழங்குகின்றது..

அதில் அதிக தொழில்வாய்ப்புக் கொண்ட குறுகிய காலத்தில் ( 3 வருடங்கள்), ஒப்பீட்டளவில் குறைந்த பணத்துடன் (92,850) முடிக்கககூடிய ஒரு பட்டப் பாடநெறியாக இருப்பினும் கடினம் என்ற கருத்தியல் ,போதிய விளக்கமின்மை என்பதால் குறைந்தளவு மாணவர்களே அதுவும் மிக சொற்பமான தமிழ் மாணவர்களே இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்கின்றார்கள்..
அதனால் அவர்கள் மத்தியில் ஒரு விழிப்பை உண்டாக்கி அவர்கள் பட்டக்கனவை நனவாக்க உதவுவதே இப் பதிவின் நோக்கம்..

குறிப்பாக வெளிவராத உயர்தரப்பெறுபேறுகளுடனும் இப் பட்டப்படிப்பின் பதிவிற்கு விண்ணப்பிக்கலாம்..ஆனால் இப்போது உ.த பரீட்சை முடிவுகளும் வெளிவந்துள்ளமையால் அதை பற்றி யோசிக்காமலேயே அனைவரும் பதிவிற்கு விண்ணப்பிக்க முடியும்..
அத்துடன் எந்த ஒரு உள்வாரி மாணவனும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இப் பட்டப்படிப்பை எப்போதும் தொடர முடியும்..

இதற்கு வேண்டிய அடிப்படைத்தகைமை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி குறைந்தது 3 திறமைச் சித்திகளுடன்..... அவற்றில் இரண்டு கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது மாத்திரமே...

அத்துடன் நீங்கள் க.பொ.த உயர்தர சித்தி 3 பாடங்களிலும் எந்த துறையில் இருந்தாலும் நீங்கள் நேரடியாக பதிவிற்கு விண்ணப்பிக்க முடியும்..

நீங்கள் க.பொ.த உயர்தரத்தில் எந்த துறையிலும் சித்தியடையவில்லை என்றால் கூட முதல் Fundamentals of Information Technology (FIT) என்ற ஒரு பரீட்சைக்கு தோற்றி அதன் சித்தியோடும் விண்ணப்பிக்க முடியும்...

உங்களுக்கு க.பொ.த சா.த இல் கணிதம்,ஆங்கிலத்தில் C இருந்தாலே பட்டக் கனவை நனவாக்க முடியும் சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்..

இப்போது இல்லையாயினும் க.பொ.த சா.த பரீட்சைக்கு மீண்டும் விண்ணப்பித்து இத் தகைமையை பெற்றுக்கொண்டும் எதிர்வரும் வருடங்களில் விண்ணப்பித்து தொடர முடியும்...

இணைய வழி Virtual Learning Environment மூலம்
பாடநெறிகள் அனைத்தும் பாடங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்..பல்கலைக்கழகத்துக்கு சென்று படிக்கவேண்டிய அவசியத்திற்கே இடமில்லையாதலால் வேலை செய்பவர்களும் இக் கற்கைநெறியை தொடரலாம்..

நீங்கள் சுயகற்றல் மூலமோ பிரத்தியேக வகுப்புக்கள் மூலமோ கல்வி நிறுவனங்கள் மூலமோ கற்க முடியும்..பரீட்சையில் தோன்றி சித்தியடைந்தால் போதும்...

இறுதிப் பரீட்சைகள் (இறுதி 3 ஆம் வருடம் மாத்திரம் கொழும்பில்) யாழ்ப்பாணத்தில் அதிகம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ( வட மாகாண மாணவர்கள்,விரும்புபவர்கள்) தோற்ற முடியும்...

முதல் வருட பூர்த்தியுடன் டிப்ளோமா சான்றிதழும் (DIT) இரண்டாவது வருட பூர்த்தியுடன் உயர் டிப்ளோமா சான்றிதழும் (HDIT) மூன்றாவது வருட பூர்த்தியுடன் பட்டச்சான்றிதழும் கிடைக்கும்..( BIT) ..

வருடந்தோறும் இரு
நிகழ்வுகள் சான்றிதழ் வழங்கும் விழா,பட்டமளிப்பு விழா என இரண்டு நடைபெறும்..அதில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் DIT ,HDIT சான்றிதழ்களும் பட்டமளிப்பில் BIT பட்டச்சான்றிதழும் வழங்கப்படும்..
இதனை வைத்தே இரண்டு வருடத்தில் நீங்கள் Masters Degree யும் செய்ய முடியும்....

எனவே க.பொ.த சா.த சித்தி அதில் கணிதம் ஆங்கிலம் உள்ளடங்கலாக குறைந்தது 3 C இருந்தால் இவ் வரிய சந்தர்ப்பத்தை தயவு செய்து தவற விட வேண்டாம்...

கல்வியாண்டு 2024 இற்கான பதிவுகள் இடம்பேறுகின்றன.

மேலதிக விளக்கங்கள்,தகவல்கள் ,உதவிகள் தேவைப்பட்டால் கருத்திடவும் தொடர்புகொள்ளவும முடியும்..
17வது வருடத்தில் எனது வகுப்புக்கள் zoom இனூடாக……….

T.Tharmmendra(BIT, MCSE, MBCS)
T.P: 0779785796

BIT Website Link

http://www.bit.lk/
Tharmakulasingam Tharmmendra

BIT BIT is a degree programme conducted by the University of Colombo School of Computing (UCSC) and offered by the University of Colombo (UoC).

06/07/2023

A/L 3 pass உடன் BIT degree (கொழும்பு பல்கலைக்கழகம்) பல்கலைக் கழக மற்றும் தொழில்நுட்பக கல்லூரி மாணவர்களும் கற்கலாம்.

Want your school to be the top-listed School/college in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

136, Parameshwara Junction, Palaly Road
Jaffna