USF Media Network

USF Media Network

Share

Media & Social Service

Photos from USF Media Network's post 28/04/2024

சாய்ந்தருது பிரதேச ஸ்மார்ட் யூத் பாரம்பரிய கலாச்சார விழா

கபூர் அன்வர்

இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், சாய்ந்தருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம், சாய்ந்தருது பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய ஸ்மார்ட் யூத் 2024 புதுவருட பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா 27-04-2024 இன்று சனிக்கிழமை சாய்ந்தருது பௌசி கடற்கரை விளையாட்டு மைதானத்தில் சாய்ந்தருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தருது பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹி அவர்களின் நெறிப்படுத்தலில் சாய்ந்தருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் என்.எம். சியாம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை திருநாட்டின் அதிமேதகு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உருவான ஸ்மார்ட் யூத் 2024 பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வு நாடாளவிய ரீதியில் இன்று எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இடம்பெற்றது விசேட அம்சாமாகும்.

அதனைத் தொடர்ந்து ஆரம்பமான ஜனரஞ்சக விளையாட்டு விழாவில் பாரம்பரிய விளையாட்டுக்களான சாக்கோட்டம், முட்டி உடைத்தல், கிடுகு பிண்ணுதல்,
தேங்காய் துருவுதல், பலூன் ஊதி உடைத்தல், சங்கீத கதிரை, கயிறு இழுத்தல், மெதுவான துவிச்சக்கர சைக்கிளோட்ட போட்டி என பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க சேவை அதிபர் வி. ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட சமுர்த்தி திணைகள பணிப்பாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபிர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா, தேசிய இளைஞர் மன்றத்தின் உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,இளைஞர் கழக பிரதிநிதிகள் ,
விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

16/02/2024

மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேச மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கையும் இருளால் இடைநிறுத்தம்

நூருல் ஹுதா உமர்

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை சம்பவத்தை கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் இயந்திர படகுகளை கொண்டு தேடியும் இன்று இரவு 09.00 மணி வரை அந்த மாணவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் இருள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய ஆறு மாணவர்களும் அவர்கள் பயணித்த துவிச்சக்கர வண்டிகளும் நிந்தவூர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Photos from USF Media Network's post 05/03/2023

*கல்முனை முஅத்தினார் ஏ.எல்.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு மனிதாபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.*

சென் ஜூடி துணை மருத்துவக் கல்லூரியின் வருடாந்த தேசிய தொழில் தகைமை வழங்கும் விழா சனிக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் சிறந்த மனிதாபிமான செயற்பாட்டாளர் விருதினை கல்முனை முஅத்தீன் A.L.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சப்றாஸ் மன்சூர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கல்லூரியின் போசகருமான எம்.ஏ.நவாஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கல்முனை முஅத்தினார் ஷாஹுல் ஹமீத் அவர்களை வாழ்த்தி கௌரவித்தார்கள்.

11/02/2023

உங்கள் பிரதேச வேட்பாளர்களை அறிந்து கொள்ள ஒரு இணையத்தளம்

தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகம்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தளமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.

குறித்த லிங்கில் சென்று விரும்பிய மொழியைத்தெரிவு செய்து உங்கள் மாவட்டம் மற்றும் தேர்தல் பிரதேசம்
என்பவற்றைத்தெரிவு செய்வதன் மூலம் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்சைக்குழு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியலை முழுமையாகப்
பார்வையிடலாம்.

உங்கள் பிரதேச வேட்பாளர்களைப்பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://eservices.elections.gov.lk/pages/ec_ct_KYC_LGA.aspx

அஷ்ரப் அலீ

Want your hotel to be the top-listed Hotel in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Kalmunai