ARM TV

ARM TV

Share

Radio & Digital Media

Photos from ARM TV's post 24/04/2026

#மாளிகைக்காடு #மையவாடிக்கு ' #நிரந்தர #கல்வேலி' #அமைக்கும் #பணிகள் #பர்ஹான் #தலைமையில் #ஆரம்பித்து #வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மாளிகைக்காடு மையவாடி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக தீவிரமடைந்துவரும் கடலரிப்பு அபாயத்தை தடுக்கும் பொருட்டு, கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்வேலி' (Revetment) பாதுகாப்புச் செயற்றிட்டம் (23) நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் கலந்து கொண்டு இப்பணியை ஆரம்பித்து வைத்தனர்.

கடலரிப்பால் பாதிக்கப்பட்டுவரும் மாளிகைக்காடு மையவாடியின் கடலரிப்பைத் தடுப்பதற்காக நிரந்தர 'கல்வேலி' அமைக்கும் இவ்வேலைத்திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு அவர்களது துரித தலையீட்டின் பயனாகவே இக்கல்வேலி அமைக்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Photos from ARM TV's post 22/04/2026

#நிந்தவூர் #கலாசார மண்டப ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக மாவட்ட செயலாளரோடு ஆதம்பாவா MP கள விஜயம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கடந்த 28 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாசார மண்டபத்தை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முழுமையாக நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சியின் பலனாக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த கலாசார மண்டபத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக, அம்பாரை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்ரமாராச்சி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் முனாசிர், கணக்காளர் பாரிஸ், மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் கல்முனை பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் திருமதி ஆர்.நிறோஜன் தலைமையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் குழு, இன்று புதன்கிழமை (22) நிந்தவூர் கலாசார மண்டபத்திற்கு நேரடியாக விஜயம் செய்தனர்.

இதன்போது, இந்த நிர்மாணப்பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கத்தினுடைய முழுப்பங்களிப்பையும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் என்ற வகையில் தாம் இந்த நிந்தவூர் மக்களுக்கு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லதீப், பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான சம்சுன் அலி, இப்திகார் மற்றும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா ஆகியோரின் செயலாளர்கள், இணைப்பாளர்கள்,
பிரஜாசக்தியின் நிந்தவூர் தவிசாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Photos from ARM TV's post 03/04/2026

#உயர்தரப் #பெறுபேற்றில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

2026.04 01 ஆம் திகதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கமு/கமு/ மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலய மாணவர்கள் 75% சித்திகளையும் 08 மாணவா்கள் பல்கலைக்கழக வாய்ப்பையும் பெற்று சாதனை படைத்ததுள்ளதுடன் தோற்றிய 20 மாணவர்களுள் 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி எம்.சி. நஸ்லின் றிப்கா அன்ஸார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது கோட்டத்தில் உள்ள உயர்தரம் கற்பிக்கும் பாடசாலைகளில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்று அதிகூடிய மாணவர்கள் இப் பாடசாலையில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அதன்படி இம்முறை கலைப்பிரிவில் இருந்து வஸீர் முஹம்மட் அஜீபா 03 A சித்தியும், எம்.ஏ. பாத்திமா தூபா 02A, C சித்தியும், எம்.எப். பாத்திமா ஹன்சுல் நுஸ்பா 02 A, C. சித்தியும், எப். பாத்திமா அப்னா 02A, C சித்தியும், எம். ஆசிபா மெஹ்றூன் 02A, C சித்தியும், எப். பாத்திமா அப்னா 02A, S சித்தியும், ஜே. பாத்திமா றிஸ்பா A,B,C சித்தியும், ஆர். பாத்திமா சிப்னா A,B,C சித்தியும் பெற்று இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய சாதனையை நிகழ்த்திய மாணவர்களையும் உயர்தரப் பகுதியின் பகுதித்தலைவர் ஏ.எம்.அஜ்வத் அவர்களையும் இவர்களை ஊக்கப்படுத்தி, பாடங்களைக் கற்பித்த ஆசிரியர்களான ஏ.எம். அஜ்வத், ஏ.ஆர்.ஏ. அஷ்ரப், எம்.ஐ. பைசால், யூ.எல். அமீர் ஹுசைன், ஏ.எம்.ஜுனைதா, எம்.எப். ஐனுல் மர்சுனா, எஸ். நஜிபுடீன் ஆகியோருக்கு
கல்லூரியின் அதிபர் திருமதி. எம்.சி. நஸ்லின் றிப்கா மற்றும் பிரதி அதிபர் திருமதி எம்.எப்.ஐனுல் மர்சுனா, உதவி அதிபர் ஏ.எம்.பறூஸ் அவர்களும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என அனைவரும் கல்லூரி சமூகம் சார்பாக பாராட்டி, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இவர்களை மாலை இட்டு வரவேற்று அவர்களுக்கான கௌரவம் வழங்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் நேற்று (02) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Photos from ARM TV's post 28/03/2026

#சாய்ந்தமருது #அல்ஹிலாலில்
புனித நோன்புப் பெருநாள் தினம் அனுஷ்டிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் புனித நோன்புப் பெருநாள் தினம் (Eid Festival day) (27) பாடசாலையின் கேட்போர் கூடத்தில்
வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் 'அதிபர் திலகம்' யூ.எல்.நசார், இப் பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போது சாய்ந்தமருது அல் - கமரூன் வித்தியாலயத்தின் அதிபருமான எம்.எச். நுஸ்ரத் பேகம், மாளிகைக்காடு சபீனா வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எம்.உவைஸ், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.எச். லாபிர், ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி, உதவி அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Photos from ARM TV's post 28/03/2026

#இளம் #தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு கௌரவித்த "ஆர்.ஜே. மீடியா"

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

"முயற்சிக்கு என்றும் முதலிடம்" எனும் மகுட வாசகத்துடன் ஊடகத் துறையில் தடம் பதித்து வரும் ஆர்.ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் மற்றுமொரு மைல்கல்லாக, இளம் தொழில் முயற்சியாளர்களைக் கௌரவித்து விருது வழங்கும் விழா (26) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர். ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம். இன்ஷாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரும் விரிவுரையாளருமான ரஸ்மி மூஸா கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மொஹமட் நௌபர், வெடிங் ட்ரீம் அகாடமி பணிப்பாளர் எப். தரூபா, நிர்வாக
மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.

தமது கடின உழைப்பால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு கௌரவித்த இந்த நிகழ்வானது, எதிர்கால இளம் தலைமுறையினருக்கு பெரும் உந்துதலாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Photos from ARM TV's post 17/03/2026

#நிந்தவூர் ஜாபிர் அல்-அஹமத் நகரில் சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமத்திட்டம் அங்குரார்ப்பணம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் "க்ளீன் சிறிலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், “வளமான நாடு – வளமான கிராமம்” என்ற தொனிப்பொருளை முன்னிறுத்தி சமூக உற்பத்தித் திறனை மேம்படுத்தும் மாதிரி கிராமத்திட்டம் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் 09 ஆம் பிரிவிற்குட்பட்ட ஜாபிர் அல்-அஹமத் நகரில் நேற்று (16) திங்கட்கிழமை சிறப்பாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஆரிப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், உதவிப் பிரதேச செயலாளர் டி.ஜெஸான், பிரதேச சபை உறுப்பினர் ஏ. இப்திகார் அஹமட், க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளர் எம். எல். சம்சுன் அலி ஆகியோரும் பங்கேற்றனர்.

இதன்போது தேசிய உற்பத்தித் திறனை பிரதிபலிக்கும் கீதம் அடங்கிய காணொளியும் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் விளக்கக் காணொளியும் இலத்திரனியல் திரையில் அவையோருக்கு காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமூக உற்பத்தித் திறனின் முக்கியத்துவம், அதன் நோக்கங்கள் மற்றும் கிராம மட்டத்தில் அதன் தாக்கம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் தலைமையுரையாற்றி, சமூகத்தின் ஒத்துழைப்பும் பங்குபற்றலும் இத்திட்டத்தின் வெற்றிக்கான முக்கியத் தளமாக இருப்பதை வலியுறுத்தினார்.

நிகழ்வில், இத்திட்டத்திற்கான மாதிரிக் கிராம பெயர் பலகை அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டு, திட்டத்தின் ஆரம்பம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியானது, சமூகப் பங்களிப்புடன் நிலைத்த முன்னேற்றத்தை நோக்கி நிந்தவூர் பகுதியின் கிராம வளர்ச்சிக்கு புதிய திசையொன்றை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photos from ARM TV's post 06/03/2026

#இமாம் #ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னியின் மறைவுக்கு
ஈரான் தூதரகத்திற்கு ஆதம்பாவா எம்.பி.நேரடியாகச் சென்று அனுதாபம் தெரிவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக கொழும்பில் உள்ள இலங்கைக்கான ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப்புத்தகத்தில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா இன்று (06) வெள்ளிக்கிழமை தமது அனுதாபத்தைப் பதிவிட்டதோடு, ஈரான் நாட்டுத் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ் உடன் தமது அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.

Photos from ARM TV's post 03/03/2026

#நிந்தவூர் இமாம் றூமி வீதியின் காபர்ட் இடும் பணி ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருந்த நிந்தவூர் இமாம் றூமி வீதி தொடர்பாக அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியதன் காரணமாக சுமார் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், இவ்வீதிக்கான காபர்ட் இடுகின்ற பணி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் இன்று (03) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நி்ந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியாளர் ஏ.எம்.உவைஸ், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸட்.ஏ.எம்.அஸ்மி,
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம். சம்சுன் அலி, ஏ. இப்திகார், நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் சிஹாபுதீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தியினுடைய நிந்தவூரின் தவிசாளர்கள்,
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Photos from ARM TV's post 01/03/2026

#ஆலையடிவேம்பு
சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் 2.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதியில் எமது முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததோடு, ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், ஆலயடிவேம்பு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஆர். ரதீசன், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலயடிவேம்பு பிரதேச பிரஜாசக்தி தவிசாளர்கள் உட்பட பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Photos from ARM TV's post 28/02/2026

#அம்பாறை மாவட்ட கிரிக்கட் நடுவர் சங்கத்தின் தலைவராக ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் மீண்டும் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாறை மாவட்ட கிரிக்கட் நடுவர் சங்கத்தின் தலைவராக ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் மீண்டும் ஏகமனதாகத் தெரிவாகியுள்ளார்.

அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத்தெரிவும் அம்பாறை “செனோன்றா" உணவகத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை கிரிக்கட் நடுவர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 26 நடுவர்களைக் கொண்ட அமைப்பின் தலைவராக ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் மீண்டும் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாணத்திலும் தேசிய ரீதியிலும் பல கிரிக்கட் போட்டிகளுக்கு தற்போது நடுவர் பணியினைச் செய்துவரும் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், கடந்த காலங்களில் பல கிரிக்கட் போட்டிகளில் விளையாடி பல பதக்கங்களைப் பெற்றுக்கொண்டவர்.

நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் உயர் கல்வியைக் கற்று, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வியாபார மாணிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

சம்மாந்துறை சிலியட் தேசிய நிறுவகத்தில் உயர் கணக்கியல் டிப்ளோமைப் பூர்த்தி செய்த இவர், தற்போது நிந்தவூர் அல்-மதீனா பாடசாலையின் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைப்புச் செயலாளராகவும் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது குறித்த சங்கத்தின் நடப்பாண்டின் பிரதித்தலைவர்களாக டமித் நாலக மற்றும் அஸ்வத் ஆகியோரும்
செயலாளராக சமன், பொருளாளராக இந்துநில் நந்திகவும்
போட்டி செயலாளராக ருவன் பண்டாரவும் தெரிவு செய்யப்பட்டனர்.

Photos from ARM TV's post 26/02/2026

#ஆதம்பாவா எம்.பி.யினால் அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ். வீதி, ஆலையடிவேம்பு நாவற்குடா நிகோட் பின் வீதிகள் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கடந்த பல வருடங்களாக செப்பனிடப்படாமல் இருந்த அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ் (RDS) வீதி, ஆலையடிவேம்பு (நாவற்குடா நிகோட் பின் வீதி) ஆகிய இரு வீதிகளுக்குமான கார்பட் மற்றும் கொங்கிரீட் இடுகின்ற பணிகள் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் இன்று (26) வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1 கிலோமீட்டர் கொண்ட அட்டாளைச்சேனை (RDS) ஆர்.டி.எஸ் வீதியானது 2 கோடி 20 இலட்சம் ரூபா செலவிலும் 530 மீற்றர் கொண்ட ஆலையடிவேம்பு (நாவற்குடா
நிகோட் பின் வீதியானது 1 கோடி 8 இலட்சம் ரூபா செலவிலும் செப்பனிடப்பட்டு, புனரமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுகளில் அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.அப்கர் மற்றும் ஆர். திரவியராஜ், அட்டாளைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர் உவைஸ், கல்முனை, அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர்களான அஸ்மிர் மற்றும் யூ.ஏ.பாரி, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் இணைப்பாளர் தோழர் சத்தார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட இரு பிரதேச செயலகங்களின்
பிராஜாசக்தி தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Want your business to be the top-listed Media Company in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Kalmunai
Kalmunai