Ceylon Times Network
உலகம் சொல்லும் செய்திகள் உடனுக்குடன்...
23/05/2026
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இந்தியா பயணம்
அமெரிக்க வெளிவிவகார துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
கொல்கத்தாவுக்கு சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா நிறுவிய கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகத்தை அவர் பார்வையிட்டார்.
பின்னர், கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்திற்கும் சென்றார்.இந்த உயர்மட்ட வருகையை முன்னிட்டு, கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகம் மற்றும் விக்டோரியா நினைவகம் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்க் ரூபியோ, டெல்லியில் பிரதமர் மோடியையும் இன்று சந்தித்து பேசுகிறார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
மத்தியகிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச்சூழலால் சர்வதேச அளவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்தியா மசகு எண்ணெய் கொள்முதலுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வரும் சூழலில், அமைச்சரின் இந்தியா பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
23/05/2026
களுகங்கை தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
களுகங்கையின் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் பதிவான கடும் மழைவீழ்ச்சியால், அதன் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முற்பகல் 8.30 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Click here to claim your Sponsored Listing.