E TV

E TV

Share

இது மக்களின் "தெவிட்டாத குரல்"
♦ நேரடி ஔிபரப்பு
♦ விளம்பரங்கள்
♦அறிவிப்பாளர்கள்
♦Sound system
(0742392323/0752392325/0715441444)

28/05/2026

சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி
**********************************
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை உலக சமூகத்திற்கு சமூக நலனின் மதிப்பைக் கொண்டுவரும் நாளாக புனித ஈதுல்- அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம் மக்கள் இன்று கொண்டாடுகின்றார்கள் என அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஹஜ்ஜும் ஒன்றாகும். அமைதி, சமாதானம், சுபீட்சம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை உலக சமூகத்திற்கு சமூக நலனின் மதிப்பைக் கொண்டுவரும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான முஸ்லிம்களுக்கு மத்தியில், வல்ல அல்லாஹ்வின் முன் ஒரே நோக்கத்துடன் தங்களது பாவக்கறைகளை நீக்கிக் கொள்வதற்கு, இறுதிக் கடமையான ஹஜ் யாத்திரிகர்களால் மேற் கொள்ளப்படுகிறது. புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியவுடன் அன்று பிறந்த பாலகன் போல ஹஜ் யாத்திரிகர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

இன்று புனித ஈதுல்- அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

26/05/2026

#காத்தான்குடி பிரதான வீதியில் பாரிய தீ பரவல்
**********************

காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள கடைத் தொகுதி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.

​அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு, வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் சொத்துக்களின் நிலை குறித்து பெரும் அச்சம் எழுந்துள்ளது.

​இந்த விபத்து தொடர்பான தற்போதைய கள நிலவரம் என்ன?
​தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதா?
​உயிர்ப் பாதிப்புகள் அல்லது காயங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளதா?
​தீயணைப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளில் இணைந்துள்ளார்களா?
​இது குறித்த மேலதிக நம்பகமான தகவல்கள் அல்லது பிரத்யேக விவரங்கள் ஏதும் உங்களிடம் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தீ விபத்துக்கள் ஏற்படும் போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதும், வதந்திகளைப் பரப்பாமல் அவசர உதவிகளுக்கு ஒத்துழைப்பதும் அவசியமாகும்.
(முகநூலில் பெறப்பட்ட பதிவின் நகல் பிரதி)


​ ​ ​

26/05/2026
25/05/2026

#அதிக வயது வித்தியாச திருமண ஜோடி உளக்குமுறல்கள்............!

(சுவாரஷ்யமான ஆதங்கங்கள் மிஸ்பண்ணிடாதீங்க )
#மருதமுனை #அதிசயம் #குமுறல்

Photos from E TV's post 25/05/2026

#பென்ஷீன் கிண்ணத்தை வெற்றிகொண்டது மருதமுனை கல்பனா வி.க
******************
(எம்.பி.எம்.றாஜிட் /நற்பிட்டிமுனை மேலதிக செய்தியாளர்)

#மருதமுனை பென்ஷீன் கிறிக்கட் கழகத்தால் நடாத்தப்பட்ட 2026 ம் ஆண்டுக்கான BENZENE CHAMPION TROPHY -2026 ன் இறுதிப் போட்டி பரிசளிப்பு விழா என்பன மருதமுனை மசூர் மௌலானா பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் A.B.RANOOS தலைமையில் நேற்று 24-05-2026ல் இடம்பெற்றது......!

விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மருதம் அணியினரை எதிர்த்து கல்பனா அணியினர் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசையும் தட்டிச்சென்றனர்.....!

#நிகழ்வுக்கு பிரதம அதிதியாக IWA CAMPUS பணிப்பாளர் DR.M.H.M.MUNASIK மற்றும் தெ.கி. பல்கலைக்கழக விரிவுரையாளர் S.H.SHAFEEK மற்றும் SARA HANDLOOM நிறுவன உரிமையாளர் FRASUL FOUS மற்றும் #மருதமுனை கிறிக்கட் சங்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் ...!

நிகழ்வுகளை சிரேஷ்ட அறிவிப்பாளரும் மருதமுனை #கிறிக்கட்சங்க பிரதிச் செயலாளரும் பென்ஷீன் வி.க முகாமையாளருமான M.B.M.RAAJID தொகுத்து வழங்கியிருந்தமை விஷேட அம்சமாகும்................!

25/05/2026

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்
**********************************
(பாறுக் ஷிஹான்)

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....!

இவருக்கு எதிரான விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது........!

Photos from E TV's post 25/05/2026

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய “சிறந்த வாழ்வுக்கான கௌரவிப்பு விழா – 2026”

நூருல் ஹுதா உமர்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் “சிறந்த வாழ்வுக்கான கௌரவிப்பு விழா – 2026” நிகழ்வு இன்று (24) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மிகவும் விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

கலாசார மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு பயிற்சிப் பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வாக அமைந்த இவ்விழாவில், தேசிய பிரதீபா போட்டிகள் மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்விற்கு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌசாத் தலைமை தாங்கினார். சாய்ந்தமருது கலாசார அதிகார சபை தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை கரையோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு சபை உறுப்பினருமான அதம்பாவா அபூபக்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். அஸீக் கலந்து கொண்டதுடன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம். ரின்சான் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், அக்கரைப்பற்று, மருதமுனை கலாச்சார நிலையப் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா உள்ளிட்ட பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வை சாய்ந்தமருது கலாசார அதிகார சபை பிரதித்தலைவர் நூருல் ஹுதா உமர் நெறிப்படுத்தினார். இவ்விழாவின் சிறப்பம்சமாக தேசிய பிரதீபா போட்டியில் வெற்றியீட்டிய கலைஞர்கள், மாகாண மட்டத்தில் சாதனை படைத்த இளம் கலைஞர்கள், கலாசார துறையில் நீண்டகால சேவையாற்றி வரும் பிரதேசத்தின் மூத்த கலைஞர்களான பல்வேறு கலை மற்றும் சமூக துறைகளில் பங்களிப்பு செய்த வளவாளர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் பாடல்கள், நடனங்கள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேசத்தின் கலை, கலாசார மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, பாரம்பரிய கலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில் இவ்வாறான நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன என உரையாற்றிய அதிதிகள் கருத்து வெளியிட்டனர்.

Photos from E TV's post 23/05/2026

சாய்ந்தமருதில் வட்சற பியவற - 2026;
"கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்" நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடைய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வட்சற பியவற - 2026 எனும் மேற்படி நிகழ்வு 'கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்' என்ற தொனிப்பொருளில் கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூசாவின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் நேற்று (21) வியாழக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் திருமதி எம்.சி. றிப்கா அன்ஸார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஐ. முவாபிக்கா கலந்து சிறப்பித்தார்.

கலாசார அதிகார சபையின் செயலாளரும் சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தருமான எம்.ஐ.எம். அஷ்ரப் இந்நிகழ்வில்
வளவாளராகக் கலந்து கொண்டதோடு, கலாசார அதிகாரசபையின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா மற்றும் கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Photos from E TV's post 23/05/2026

“தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” சிரமதானப் பணி முன்னெடுப்பு
*************************
(நூருல் ஹுதா உமர்)

காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை மற்றும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் “தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளில் விசேட கடற்கரை சிரமதானப் பணி இன்று (23) காலை நடைபெற்றது.

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், காரைதீவு பிரிவு பொதுமக்கள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கடற்கரைப் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கடற்கரை, காரைதீவு சுனாமி நினைவுத்தூபி கடற்கரை மற்றும் காரைதீவு அனர்த்த முகாமைத்துவ நிலைய கடற்கரை ஆகிய பகுதிகளில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வின் மூலம் கடற்கரைப் பகுதிகளை சுத்தமாகவும் கவர்ச்சிகரமாகவும் பேணுவதின் அவசியம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், பிரதேச செயலக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

“சுத்தமான சூழல் – பாதுகாப்பான எதிர்காலம்” என்ற செய்தியையும் இந்நிகழ்வு வலியுறுத்தியது.

21/05/2026

அக்கரைப்பற்றில் வாகன விபத்து ஓட்டிவந்த சிறுவர்கள் மாயம்......!

20/05/2026

**🛳️ இஸ்ரேலிய கமாண்டோக்கள் உதவிக் கப்பலை பிடித்த சம்பவம் | Breaking Footage**
**************************

இன்று (2026 மே 18) வெளியான வீடியோவில், இஸ்ரேலிய Navy-யின் பிரபலமான **Flotilla 13 (Shayetet 13)** கமாண்டோக்கள், **சர்வதேச நீர்ப்பரப்பில்** ஒரு Gaza Aid Flotilla கப்பலை தாக்கி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தெரிகிறது.

Global Sumud Flotilla என்ற குழு, காஸா மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்களுடன் பல கப்பல்களில் பயணம் செய்து, இஸ்ரேலின் கடல் தடையை மீற முயன்றனர். இஸ்ரேல் இதை "பாதுகாப்பு நடவடிக்கை" என்கிறது. ஆர்வலர்கள் இதை "சர்வதேச சட்டத்துக்கு எதிரான தாக்குதல்" என்கின்றனர்.

இந்த சம்பவம் மத்தியத் தரைக்கடலில் (Crete அருகிலான பகுதியில்) நடந்ததாக தெரிகிறது...........!

Want your business to be the top-listed Media Company in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Kalmunai
Kalmunai