Learnviatec

Learnviatec

Share

Education in Technology and Technology in Education are co-related

உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்! #CellPhoneAddiction 08/05/2020

தொலைபேசி என்பது

உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்! #CellPhoneAddiction விரல் நுனியில் உலகம், நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம்... என செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்க....

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள்...!! 08/05/2020

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள்...!! இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும். உடலில் உள்ள இ....

06/05/2020

Learn Via Tec

05/05/2020

அதிக நேரம் கணிணியில் இருப்பவர்களே!
இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் கணினியினை அதிகம் பயன்படுத்துபவர்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. கணிணி முன்பு அதிகம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில ஆலோசளைகள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

1. முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது. இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

2. தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.

3. கணினியின் முன் அமர்ந்து தட்டெழுத்திடுகையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முள்ளந்தண்டு நேராக இருக்கும். இதனால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.

4. பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

5. தட்டெழுத்திடும் போது போது முழங்கைகள், இடுப்பின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு உதவியாக இருக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து தட்டெழுத்திடவும் முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் குறைத்துக்கொள்ள முடியும்.

6. கணிணி திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம்.

இங்கே கூறப்பட்டுள்ளதெல்லாம் சின்ன சின்ன விடயங்கள் என புறக்கணித்து விடாது இதனை பின்பற்றி உடலை நல்லமுறையில் பாதுகாப்போமாக.

Want your school to be the top-listed School/college in Matale?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

5/2 Sir Richard Aluvihare Mawattha
Matale