USDA
Uyanwatha Social Development Association
25/03/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
அல்லாஹ்வின் உதவியுடன் USDA நிறுவனம் ஏற்பாடு செய்த முஸாபக்கது ரமலான் ஷஹ்ருல் குர்ஆன் போட்டி நிகழ்ச்சியின் பரீட்சை 22 மற்றும் 23ஆம் (சனி , ஞாயிறு) திகதிகளில் அல்லாஹ்வின் அருளுடன் மஸ்ஜித் நூர் பெரிய பள்ளி வாயில் மத்ரஸா மண்டபத்தில் காலை 8:30 மணி தொடக்கம் மாலை இரண்டு மணி வரை அழகான முறையில் பரீட்சை நடைபெற்று முடிந்தது الحمد لله.
எனவே இப்போட்டி நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எமக்கு பரீட்சையை நடாத்துவதற்கு மத்ரஸா மண்டபத்தை வழங்குதவிய நிர்வாக சபை , USDA வின் அங்கத்தவர்கள் மற்றும் பரீட்சையை நடாத்திய நடுவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தலைவர்
USDA
30/12/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
ஊர் ஜமாத்தார்களுக்கான ஒர் அறிவித்தல். எமது (உஸ்டா) USDA நிறுவனமானது வருடா வருடம் கூட்டு உழ்ஹிய்யாவை மேற்கொண்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் 2025 ஆம் ஆண்டிற்கான கூட்டு உழ்ஹிய்யாவை மேற்கொள்வதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஆகவே இந்தக் கூட்டுக் குர்பானியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் எமது நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம். இது பற்றிய ஒரு நாட்குறிப்பு அட்டவணையை இங்கே நாம் பதிவிடுகின்றோம். அதைப் பார்வையிட்டு அதிலே உள்ள தொலைபேசி இலக்கங்களை நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
USDA
நிர்வாகம்.
08/10/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
உயன்வத்தையில் இயங்கி வருகின்ற USDA நிறுவனம் 10 மாதங்களைக் கொண்ட இலவச මිතුදම් சிங்கள பாட நெறி வகுப்பின் சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு எமது நூராணியா பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச செயலகத்தின்( AGA) கெளரவ செயலாளர் V.O.L.S Rathnesekare அவர்களும் விசேட அதிதியாக Ash sheik Muneer mulaffer , Grand mosque chief Trustee Al haj Alavi hasim பாடசாலை கெளரவ அதிபர் Akram Rafeek ,YMMA மற்றும் ஏனைய சங்கங்களின் அங்கத்தவர்கள் உட்பட GS Officer ,DO officer ,Samurdhi officer, Mid wife , மற்றும் நலன் விரும்பிகள் பாடநெறியை நிறைவு செய்து கொண்ட மாணவ மாணவிகளும் அடுத்து இப்பாடநெறிக்கு உள்வாங்கப்பட்ட மாணவ மாணவியர் பெற்றோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
27/07/2023
அஸ்ஸலாமு அலைக்கும் உயன்வத்தை USDA நிறுவனம் 2022 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "மிதுதம்" சிங்கள மொழிப்பாட நெறியில் தரம் 6 3 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பாடநெறி சகல மதங்களிடமும் முன்மாதிரியாக வாழல் மற்றும் சகோதர வாஞ்சையுடன் வாழல் இன்னும் பல தொனிப் பொருட்களை தாங்கிய பாட நெறியாக இது அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாட நெறியின் வெளிக் களப் பயணம் 23.07.2023 திகதி கண்டி மாநகரம் தெரிவு செய்யப்பட்டு அங்குள்ள அஸ்கிரிய விகாரை, ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் கிறிஸ்டீ church, மற்றும் கடுகளையிலுள்ள முஸ்லிம் பள்ளிவாயல் Harmony center ஐ பார்வை இடுவதற்காக சென்று அங்கு இடம்பெற்ற நிஜங்களின் நிழல்கள் வருமாறு.
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Mawanella
71500