Kalviyakam
Our face book Page will help you learn about technology, technology trick, and computer related pho
2026 கேள்வி குறிப்பு எடுக்கவும்
15/07/2026
பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்களைப் பெற உதவும்
வடக்கு ஆய்வு கற்கைமையம் அங்குரார்ப்பனம்!
பட்டகல்வியை நிறைவுசெய்துவிட்டு வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்குக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் வடக்கு ஆய்வு கற்கை மையம் என்ற பெயரிலான முயற்சியொன்று அங்குரார்ப்பனம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வா கலையரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பட்டதாரிகள் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றில் இந்த ஆய்வுக் கற்கைமையம் அறிமுக அங்குரார்ப்பனம் செய்துவைக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் கற்கை பட்டக்கல்வியை நிறைவுசெய்து, கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலைமானிக் கற்கையையும் பூர்த்திசெய்துள்ள ஜேம்ஸ் கமில்டன்போல்,
மட்டக்களப்பு விபுலானந்த இசை நடனக் கல்லூரி நுண்கலைத்துறை பட்டதாரி குகதாசன் கிரிதரன், திறந்த பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பட்டதாரி சர்வானந்தசிவம் சசிகரன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆய்வுக் கற்கை மையத்தை,
வடக்கின் ஓய்வுபெற்ற மூத்த நிர்வாகசேவை அதிகாரி செல்வின் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், சிகரம் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் கோ.றுஷாங்கன், தகவல் தொழில்நுட்ப வல்லுநரும், சுயதொழில் முயற்சி ஊக்குவிப்பு ஆலோசகருமான ஷர்மிக் ஆகியோர் இணைந்து அறிமுக அங்குரார்ப்பனம் செய்துவைத்தனர்.
பல்கலைக்கழக பட்டக்கல்வியின் இறுதியாண்டு கற்கையின்போது ஒவ்வொரு மாணவரும் செய்திருக்கக்கூடிய ஆய்வுகளை மையமாகக் கொண்டு, புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பித்துச் செயற்படுத்தும் தூரநோக்கோடு இந்த ஆய்வுக் கற்கை மையம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இதனை உருவாக்கிய குழுவினர் இதன்போது அறியத்தந்தனர்.
பட்டதாரிகள் ஒவ்வொருவரும் தாம் பட்டக்கல்வியின்போது மேற்கொண்ட ஆய்வின் ஆய்வுச் சுருக்கத்தையும், அதனடிப்படையில் தாம் மேற்கொள்ள உத்தேசிக்கும் வேலைத்திட்டத்தையும் வடக்கு ஆய்வு கற்கை மையத்திடம் சமர்ப்பித்தால், அதனை ஆராய்ந்து, பொருத்தப்பாடுகளை இனங்கண்டு, இந்த ஆய்வுகள் இதற்கென விசேடமாக உருவாக்கப்படும் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்த ஏற்பாட்டாளர்கள்,
வடக்கு மாகாண பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கக்கூடிய இவ்வாறான ஆய்வுகளை இதன்மூலம் பல தரப்பினரும் அறிந்துகொண்டு அவற்றைச் செயற்படுத்துவதற்கு முன்வருவதற்கு இது ஒரு களத்தை உருவாக்கிக்கொடுக்கும் என்றும் விளக்கினர்.
எப்போதுமே வேலைவாய்ப்புக்கள் கோரி போராட்டங்களை மட்டும் நடத்திக்கொண்டிருக்காமல், ஏக காலத்தில் சமூகத்துக்குப் பயன்தரக்கூடிய பட்டதாரிகளின் பட்டகல்வி ஆய்வுகளை மையமாகக் கொண்ட வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் முயற்சிப்பதன் மூலம், பட்டதாரிகள் தமக்கான தொழில்களை உருவாக்கிக்கொள்ளவும், சக பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இந்த முயற்சி வாய்ப்பளிக்கும் என்று அவர்கள் இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்தனர்.
🇱🇰. Slas exam - 2026
02/07/2026
😭. மன்னிப்பை மறந்த நண்பர்கள்..
- கவலை தருகிறது -
02/07/2026
🇱🇰. நுண்ணறிவு வினாத்தாள்
28/06/2026
👇உலகின் இறுதி காலமா?👇
நான் மாற்று மதம் தான், ஆனால் "குர்வான்" வாசிப்பேன். இப்போது நடக்கும் நிறைய விடயங்களை அழகாக இதில் கூறப்பட்டு உள்ளது.
இன்று உலகில் ஒரே நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை பார்த்த உடன் எனக்கு, இஸ்லாத்தில் உள்ள இந்த வசனம் நினைவுக்கு வந்தது.
"பூமி அதன் அதிர்வினால் கடுமையாக அதிரவைக்கப்படும்போது, பூமி தனது சுமைகளை (தனக்குள் இருப்பவற்றை) வெளியேற்றிவிடும். அப்போது மனிதன், 'இதற்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்பான்." (திருக்குர்ஆன் 99:1-3)
நிறைய பேர் இப்படித்தான் கேக்கிறார்கள்.
-இஸ்லாம் இறைவனை அடைவதற்கான மார்க்கம் ஆகும்-
- இந்து மத மார்க்கங்கள்-
1. திருநாவுக்கரசர் (அப்பர்)- தாச மார்க்கம்
2. திருஞானசம்பந்தர் - சற்புத்திர மார்க்கம்
3. சுந்தரமூர்த்தி நாயனார் - சக மார்க்கம்
4. மாணிக்கவாசகர் - சன்மார்க்கம்
👇. மறுமை நாள் பற்றி தெரிந்தவர்கள் பதிவிடுங்கள். மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டும்.
❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Trincomalee
31200