TNN News

TNN News

Share

News 1st

29/09/2022

🚨 நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னர் நாளை (30) முடிவடைவதாக கூறப்பட்ட நிலையில் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, சமுர்த்தி உறுப்பினர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பொது உதவிப் பயனாளிகள் ஆவணங்களில் விண்ணப்பித்தவர்கள் மற்றும் பலன்களை எதிர்பார்க்கும் அனைத்து பயனாளிகளும் இந்தப் புதிய பதிவிற்குள் நுழைய வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகம், கிராம சேவையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது நன்மைகளைப் பெறும் எந்தவொரு தரப்பினருக்கும் அதனை இழக்கும் அபாயம் இல்லை என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை விண்ணப்ப படிவத்தில் தற்போது எந்ததெந்த நன்மைகளுக்கு அரசின் உதவியை பயனாளிகள் பெறுவது, தொகை என்பதை குறிப்பிட வேண்டும்.

29/09/2022

🚨கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் வார இறுதியில் சொகுசு புகையிரத சேவையொன்று எதிர்வரும் முதலாம் திகதி முதல் இயக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதி கொண்ட இந்த சொகுசு புகையிரதம் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் புகையிரத சேவை இடம்பெறும்

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கண்டியை காலை 9.18 மணிக்கு சென்றடையும் பின்னர் மாலை 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

முதல் தர ஆசனம் 2000 ரூபாவுக்கும் இரண்டாம் தர ஆசனம் 1500 ரூபாவுக்கும் முன்பதிவு செய்துகொள்ள பெறமுடியும்.

எதிர்வரும் காலங்களில் அநுராதபுரம் வரை சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் எனவும், அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

30/08/2022

Happy birthday. உலகின் முதல் தர பணக்கார் இலங்கை ரூபாவில் 2,625,000 கோடி சொத்துக்கள். உலகின் எட்டவது பணக்காரர் waren Buffett இன்று 92வது பிறந்த நாள். மிகச்சிறந்த சமுக சேவையாளர் தனது பணத்தில் மூவாயிரம் கோடி ரூபாவை சமுக சேவைக்கு வழங்கியவர்.

Photos from TNN News's post 30/08/2022

🚨 ஜேர்மனி கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது . அதன்படி, அந்நாட்டில் மின்சாரத்தின் விலை ஒரு மெகாவோட் மணி நேரத்திற்கு 1000 யூரோவை நெருங்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, நாட்டின் பெரும்பாலான எரிசக்தி வணிகங்கள் திவாலாகும் அபாயத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.

ஜேர்மனியில், குடும்பங்கள் தங்கள் சமையல் எரிவாயு கட்டணங்களில் 480 யூரோக்கள் உயர்வை எதிர்கொள்கின்றன , இதனால் மக்கள் விறகுகளை சேமித்து வைப்பதை நாடுகின்றனர் . மர ஆலையின் விறகு விற்பனை தற்போது உள்ளது.

ஜேர்மனிய எரிசக்தி நிறுவனமான யூனிபர் தனது வணிகத்தை ஆதரிக்க அரசுக்கு சொந்தமான கடன் வழங்குநரிடமிருந்து 4 பில்லியன் யூரோக்களை கூடுதலாக கோருகிறது. அதிகரித்து வரும் செலவுகள், கூடுதல் ஜேர்மன் எரிசக்தி நிறுவனமான ஒரு நாளைக்கு €100mln இழக்கிறது, ஏனெனில் ரஷ்யா விநியோகங்களின் பற்றாக்குறை இப்போது 80% ஆக உள்ளது

ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா கட்டுப்படுத்துவதால், எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிவாயுவைக் கொள்முதல் செய்ய முடியாத நிலையே அந்த நிலைக்குக் காரணம்.

Photos from TNN News's post 29/08/2022

மன்னாரில் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பாரிய காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக மீன் வளம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காற்றாலை திட்டம் இங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

இதில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

28/08/2022

🚨டில்லி அருகே நொய்டாவில் உள்ள Supertech இன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் பாதுகாப்பாக இன்று (28) சற்றுமுன்னர் பிற்பகல் 2:30 மணிக்கு வெடிமருந்து வைத்து தகர்ப்பட்டது.

அதில் அபெக்ஸ் (32 மாடிகள்) மற்றும் செயேன் (29 மாடிகள்) கோபுரங்கள் ஆகியவை தூள்தூளாக இடிந்து விழுந்தது.

வெடிபொருள் நுட்பத்துடன் தகர்கப்பட்டதில் 3700 கிலோவிற்கு அதிகமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் 55000 தொன் குப்பைகள் அகற்றப்படும். இந்த இரண்டு கோபுரங்களிலும் 94,000 துளைகளை தோண்டி சார்ஜ் செய்யப்பட்ட வெடிபொருட்கள் டைனமைட், குழம்புகள் மற்றும் பிளாஸ்டிக் வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது.

கட்டட இடிப்பின் மூலம் குவியும் 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடுகளை அகற்ற சுமார் 3 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. கிட்டத்தட்ட 3000 லொறி கட்டட இடிபாடுகள் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது.

இதேவேளை அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் மாலை 7 மணிக்குப் பிறகு வீடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

Want your business to be the top-listed Media Company in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Trincomalee
Trincomalee

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00