IRS SVIAS
IRS – SVIAS seeks research papers for this Conference to be presented in the conference scope listed below.
24/11/2021
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 2021................................................................................................................................
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாடு (24) இன்று மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் நிறுவகத்தின் இன்னிய அணியினரின் வரவேற்புடன் ஆரம்பமானது.
வரவேற்புரையை கட்புல மற்றும் தொழில்நுட்ப கலைகள் துறையின் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினம் நிகழ்த்தினார். சர்வதேச ஆய்வு மாநாட்டின் தலைவர் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் அறிமுகவுரையை நிகழ்த்தினார். நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி பணிப்பாளர் உரையை நிகழ்த்தினார்.
இணையவழி தொழில்நுட்பம் ஊடாகவும் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் ஞானா குலேந்திரன் பிரதம விருந்தினர் உரையை நிகழ்த்தினார்.
கௌரவ விருந்தினர் உரையை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வ. கனகசிங்கம் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கட்புல ஆற்றுகைகள் கலைகள் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சௌமிய லியனஹே சிறப்பு விருந்தினராக இணையவழியூடாக கலந்து கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சுதேஷ் மணிதிலஹே சிறப்பு விருந்தினர் உரையை ஆற்றினார்.
இந்நிகழ்வில் சென்னை கலாசேத்ரா கலைக் கல்லூரியின் வருகைதரு பேராசிரியரும், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் இணைப்பேராசியருமான முனைவர் சே.இரகுராமன் தனது ஆதாரசுருதி உரையை பரதமும் ஆய்வும் என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.
நிறுவகத்தின் நடன நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன் முனைவர் சே.இரகுராமனின் அறிமுகத்தை வழங்கினார்.
சர்வதேச ஆய்வு மாநாட்டின் செயலாளர் கலாநிதி க.சியாமளாங்கி நன்றியுரையை நிகழ்த்தினார்.
சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன், போதனாசிரியர் அ.ஜெபராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடைய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை 2மணிமுதல் 6 மணிவரை ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வாளர்களால் வாசிக்கப்பட்டன.
Inauguration of IRS SVIAS-2021
held at Swami vipulanandha institute of aesthetic studies.
Concept Message from the symposium chair & secretary of IRS SVIAS 2021.
23/11/2021
Inaugural Ceremony of International Research Symposium-2021
Date: 24th November 2021
Time: 08:30 AM - 12.00 AM Batticaloa
Join Zoom Meeting
https://learn.zoom.us/j/62686007214...
Meeting ID: 626 8600 7214
Passcode: Irs2021@SV
Website
Opening Hours
| Monday | 08:00 - 16:15 |
| Tuesday | 08:00 - 16:15 |
| Wednesday | 08:00 - 16:15 |
| Thursday | 08:00 - 16:15 |
| Friday | 08:00 - 16:15 |