CTR24

CTR24

Share

Listen to Tamil radio online

01/13/2026
01/07/2026

வெனிசுலா தாக்குதலில் கியூபா 23 வீரர்கள் பலி

வெனிசுலா நாட்டுக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப்படைகள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தபோது 32 கியூபா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட
தாக கியூபா அரசு அறிவித்துள்ளது. அவர்களின் பெயர்கள், பதவிகள் மற்றும் வயது விவரங்களை கியூப அரசாங்கம் செவ்வாயன்று வெளியிட்டது, இதையடுத்து இரண்டு நாட்கள் தேசியத் துக்கதினமாகவும் கியூபா அறிவித்தது.

இறந்தவர்களில் கேர்னல்கள், லெப்டினன்ட்கள், மேஜர்கள், கேப்டன்கள், அத்துடன் 26 முதல் 60 வயது வரையிலான சில ரிசர்வ் வீரர்களும் அடங்குவர்.

சீருடை அணிந்திருந்த இந்த வீரர்கள் கியூபாவின் இரண்டு முக்கிய பாதுகாப்பு நிறுவனங்களான புரட்சிகர ஆயுதப் படைகள் மற்றும் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பணிகள் அல்லது அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை கியூபா குறிப்பிடவில்லை.

Want your business to be the top-listed Media Company in Toronto?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


5200 Finch Avenue E #311
Toronto, ON
M1S4Z5