Canadian Tamil Congress

Canadian Tamil Congress

Share

The Canadian Tamil Congress (CTC) is a non-profit non-partisan organization which serves as the voice of Tamils, advocating at all levels of Government.

Photos from Canadian Tamil Congress's post 06/23/2026

கனடியத் தமிழர் பேரவை தனது முதலாவது ‘கனடா பன்முகத்தன்மை தின நிகழ்வை 2026 ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றிகரமாகத் தொடங்கியதில் பெருமிதம் கொள்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டம் பல்வேறு கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட சமூகங்களை ஒன்றிணைத்து, கனடாவின் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் பகிரப்பட்ட அடையாளத்தை ஒரு துடிப்பான மற்றும் அர்த்தமுள்ள நிகழ்வாக வெளிப்படுத்தியது.

நிகழ்வின் மாலைப் பொழுது உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் கலைகட்டியது. இசை, நடனம் மற்றும் கலை வெளிப்பாடுகள் மூலம், உலகளாவிய பாரம்பரியங்களின் செழுமையையும் அழகையும் வருகை தந்திருந்தவர்கள் ஒரே இடத்தில் அனுபவித்தனர். மக்களின் ஆற்றலும் உற்சாகமும் இந்த நிகழ்வு சமூகங்களின் மத்தியில் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியது.

கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் ஸ்ரீதரன் துரைராஜா அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றும்போது இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை பிரதிபலித்தார். "இன்று, நாம் ஒரு நிகழ்வை மட்டும் கொண்டாடவில்லை; நாம் கனடாவைக் கொண்டாடுகிறோம்," என்று அவர் கூறினார். பன்முகத்தன்மை ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்திய அவர், "பல்வேறு கலாச்சாரங்களை ஒரே மேடையில் பார்க்கும்போது, நாம் உணவு, இசை மற்றும் பாரம்பரியங்களை ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும்போது நாம் வெறும் நிகழ்ச்சிகளை மட்டும் ரசிக்கவில்லை. நாம் புரிதலைக் கட்டியெழுப்புகிறோம், மரியாதையை வளர்க்கிறோம், ஒற்றுமையை உருவாக்குகிறோம். அதனால்தான் இந்த நிகழ்வு முக்கியமானது" என்று குறிப்பிட்டார்.

கனடிய பன்முகத்தன்மை கவுன்சில் (CMC) ஒன்டாரியோவில் உள்ள ஆசியர்கள் அமைப்பின் தலைவர் மெலிண்டா மன்லபாஸ் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் கலாச்சார ஒற்றுமையின் இந்த அர்த்தமுள்ள கொண்டாட்டத்தை சமூகத்திற்குக் கொண்டு வர கனடியத் தமிழர் பேரவையுடன் இணைந்ததில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

ஸ்கார்பாரோ அஜின்கோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் யிப்; ஸ்கார்பாரோ கில்ட்வுட் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரியா ஹேசல்; மற்றும் ஸ்கார்பாரோ சென்டர் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஸ்மித் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். ஸ்கார்பாரோ நோர்த் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் சென் அவர்களின் வாழ்த்துச் செய்தி கொண்டாட்டத்தின் போது மேடையில் வாசிக்கப்பட்டது.

சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாச்சாரக் கொண்டாட்டங்களை அடித்தளமாகக் கொண்ட ஓர் அமைப்பாக, கனடியத் தமிழர் பேரவை கனடாவின் பன்முகத்தன்மையை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், உள்ளடக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்க்கும் ஒரு தளத்தை உருவாக்கியதில் பெருமை கொள்கிறது. இந்தத் தொடக்க விழா ஒரு சிறந்த ஆரம்பத்தைக் குறிக்கிறது. இது வரும் ஆண்டுகளில் இன்னும் வலுவான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கொண்டாட்டத்திற்கு அடித்தளமாக அமைகிறது.

இந்தச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாட எங்களுடன் இணைந்த எங்களது அனுசரணையாளர்களுக்கும், அனைத்து ஆதரவாளர்களுக்கும், தங்களின் கலாச்சாரம் மற்றும் கலைத்திறனைப் பகிர்ந்துகொண்ட திறமைமிக்க கலைஞர்களுக்கும், திரைக்குப் பின்னால் கடினமாக உழைத்த எங்களது அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களுக்கும், நிகழ்வைச் செழுமைப்படுத்திய வணிகர்களுக்கும் மற்றும் வருகை தந்திருந்த அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

06/18/2026

A final performer spotlight on the outstanding performer Sharmilla from Megatuners — her voice brings talent, energy, and passion to the Canadian Multicultural Day Event stage ✨🎭

Want your organization to be the top-listed Non Profit Organization in Toronto?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


1345 Morningside Avenue
Toronto, ON
M1B5K3