LM Rameshv

LM Rameshv

Share

🕉 🕉 🕉 🕉 🕉

04/11/2026

ஷண்முக மந்திரம.

*முருக வழிபாட்டில் அறு கோணச் சக்கரம் பயன்படுத் தப்படுகிறது.* இச்சக்கரத்தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர் திசையில் படியுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

இரண்டு முக்கோணங்களுக்கு நடுவில் அமைந்துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக் கொள்ளப்படுகிறது.

இதைச் சுற்றியுள்ள தனிவட்ட வளையங்களில்- உள்வட்டத்தில் ஆறு தாமரை இதழ்களும், வெளி வட்டத்தில் பன்னிரண்டு தாமரை இதழ்களும் வரையப்பட்டிருக்கும்.

அவற்றைச் சுற்றி பூபுரம் எனப்படும் மூன்று சம இடைவெளியுடன்- நான்கு பக்கங்களிலும் மூன்று சதுரங்கள் வரையப் பட்டிருக்கும்.

பூபுரம் என்ற வெளிச்சுற்று சதுரச் சுவர்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக உள்ளடங்கி மனதைக் கட்டுப்படுத்தி, மைய ஈர்ப்புப் புள்ளியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால், தாம் விரும்புவது எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள *"நமசிவாய" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை* ஒட்டி முருகனுக்கு *"சரவணபவ" என்ற ஷடாட்சர மந்திரம்* பயன்படுத்தப்படுகிறது.

இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

வழிபாட்டு மந்திரத்தின் எழுத்துகளை முறை மாற்றி உச்சரிப்பதன் மூலம் விளைவுகள் வேறுபட்டதாயிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஷடாட்சர மந்திரத்திற்கான யந்திரத்தை அமைக்க குறுக்கும் நெடுக்குமாக ஏழு கோடுகள் வரைந்தால் 36 சிறு கட்டங்களில் எழுத்துகளை எழுதி, அவற்றிற்குரிய கோச மந்திரங்களும் குறிக்கப்படும்.

இந்த மந்திரங்களை ஆறு வகையான பணிகளுக்காக மரப் பலகைகளில் எழுதி வைத்து, 1008 முறை உச்சரிப்பதன் மூலம் விரும்பிய பலனைப் பெறலாம் எனப்படுகிறது.

வசியத்திற்கு வில்வ மரத்திலும்,

ஆகர்ஷணத்திற்கு வெண் நாவல் மரத்திலும்,

மோகனத்திற்கு அலரி மரத்திலும்,

தம்பனத்திற்கு ஆலமரத்திலும்,

உச்சாடனத்திற்கு பலா மரத்திலும்,

மாரணத்திற்கு வில்வ மரத்திலும் எழுதுவதே பலனளிக்கக் கூடியதாம்.

சில மந்திரங்களை பீஜத்தோடும் சிலவற்றை கோசத்தோடும் உச்சரிக்க வேண்டும். தேவை யான பீஜ, கோசங்களைச் சேர்த்து மந்திரங்களை உச்சரிப்பதே பலன் தரும்.

மனனம் செய்பவனை ரட்சிப்பது மந்திரமாகும். மெய்ஞ்ஞானிகள் மந்திரஜபத்தால் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறார்கள்.

மந்திரங்களை முறையாக உச்சரிப்பதால் குரிய தேவதையின் திருவுருவம் சூட்சும வடிவில் உபாசகனின்முன் தோன்றுகிறது.

Want your public figure to be the top-listed Public Figure in Toronto?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Toronto, ON
M1B