Grace Tabernacle Apostolic Church
We are a Tamil Christian Church (bi-lingual)congregation in Canada. We primarily work amongst the fir
வஞ்சிக்கின்றவர்களை விட்டு விலகுங்கள் | DEPART FROM DECEIVERS | INNERMAN DEVOTIONS
1 தீமோத்தேயு 6:11 - நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
'ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன் னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.' என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய பவுல், பிலிப்பி சபையிலுள்ள விசுவாசிகளுக்கு கூறியிருப்பதை பிலிப்பியர் 3ம் அதிகாரம் 18ம் வசனத்திலே வாசிக்கலாம். புறம்பே இருக்கின்றவர்களின் ஒரு சாரார், அடையாளங்களையும், உலக ஞானத்தையும் தேடுகின்றார்கள். இவர்கள் தங்கள் ஆத்துமாவை கெடுத் துக் கொள்ளும்படி, கிறிஸ்துவை எதி ர்த்து நிற்கின்றவர்கள் எனவே, சிலு வையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இவர்கள் தங்களுக்கு தெரியாதவைகளை தூஷித்து, புத்தி யில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்கு தெரித்திருக்கின்றவைகளினாலே தங்களை கெடுத் துக் கொள்கின்றார்கள். வேற்றுமையான உபதேசங்களை கொண்டவர்கள்: கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாய த்தொழிலென்று எண்ணுகிறவர்களுமா யிருக்கிறார்கள். இவர்கள் சுய இலாபத்தை நாடுகின்றவர்கள். மேலும் வேறு விதமாய் சிந்திக்கின்றவர்கள், கிறிஸ்வின் நாமத்தை சொல்லிக் கொண்டு, சத்திய வேதம் பாவம் என்று கூறும் அசுத்தங்களை, வாழ்வின் சட்டமாக்கிக் கொள்கின்றார்கள். தீமையை நன்மை என்று கூறிக் கொண்டு, துணிகரமாக பாவத்தை குறித்து மேன்மை பாராட்டுகின்றவர்கள். 'அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சை' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. வஞ்சிக்கின்ற போதனைகளை போதிக்கின்றவர்களுடைய இலக்கு கிறிஸ்து அல்ல. இவர்கள் நித்திய ஜீவனை குறித்து சிந்திப்பதில்லை. இதோ, எல்லாருக்கும் நியாயத் தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கி றதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று ஏனோக்கு முன்னறிவித்தான்
ஜெபம்: பரலோக தேவனே, ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்தி க்கேற்ற உபதேசங்களையும் நான் கைகொள்ளவும், வேற்றுமையான உபதேசங்களை விட்டு விலகவும் தேவ ஞானத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரி 1:18
1 Timothy 6:11 - But thou, O man of God, flee these things; and follow after righteousness, godliness, faith, love, patience, meekness.(KJV)
Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada
Background Music: Recorded by Grace Tabernacle apostolic church
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
210 Silver Star Boulevard , Unit 807
Toronto, ON
M1V5J9
Opening Hours
| Tuesday | 7pm - 8:30pm |
| Sunday | 9am - 1pm |