Real Click Studio

Real Click Studio

Teilen

We are Real Click Studio Seelan. A Photography With Seelan from Switzerland.

10/07/2026

ஒரு குருசாமியின்
சபரிமலை அனுபவம்.
உண்மை சம்பவம்

குருவே சரணம்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.

நமக்கு நாமே
தேடிக்கொண்ட துன்பம்.

சபரிமலையை ஹைடெக் சுற்றுலாத் தலமாக மாற்றியதால் வந்த விளைவு தான் இன்று நாம் காணும் பல மாற்றங்கள்.

இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சபரிமலை பற்றிய நீண்ட பதிவு இது.

சபரிமலைக்கு 48 தொடக்கம்
50 முறை சென்ற அனுபவத்தில்
என் நினைவில் உள்ளவற்றை எழுதுகிறேன். விருப்பமிருந்தால்
நேரமிருந்தால் முழுமையாக படித்து விட்டு செல்லுங்கள்.

பழைய சபரிமலைப் பயணம்.

48 இல் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1967 ஆம் 1968-ஆம் ஆண்டுகளில் முதன் முதலாக சபரிமலை சென்ற போது இன்று இருப்பதைப் போல பம்பையில் இருந்து சன்னிதானம் வரை சிமெண்ட் சாலைகள் தெருவிளக்குகள் வழிநெடுக உணவகங்கள் ஆக்ஸிஜன் பார்லர்கள் குடிநீர் வசதிகள் கழிப்பறைகள் ஏதுவும் இல்லை.

பம்பை கணபதி கோவிலுக்குக்கூட படிக்கட்டுகள் கிடையாது. மரங்களின் வேர்களே படிக்கட்டுகளாக இருந்தன. பம்பையின் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வர மரத்தால் செய்யப்பட்ட தொங்கு பாலம் தான் இருந்தது. இன்று இருப்பது போல் பம்பையில் இறங்கி வசதியாக செல்ல முடியாது.

எருமேலியில் இருந்து தொடங்கும் காட்டு யாத்திரை.

எருமேலியில் பேட்டை துள்ளி அதிகாலையில் புறப்பட்டால் பேரூர்தோடு வரை எஸ்டேட் சாலை.

அதன்பின்
காளைகட்டி.
அழுதாநதி ( குளியல் )
மதிய ஓய்வு.
அழுதாமலை ஏற்றம்.

யாராக இருந்தாலும் அழுது
கொண்டே ஏற வேண்டிய
மலையே அது.

அதன்பின்.
கல்லிடும் குன்று.
இஞ்சிப்பாறை கோட்டை.
முக்குழி தாவளம்.
கரிவலந்தோடு (கரிமலை அடிவாரம்)

அங்கு தங்கி
மறுநாள் கரிமலை உச்சியை
அடைவது மிகவும் கடினம்.

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணைக்கடலும் துணை வருவார்.

என்ற பாடல் வரிகளுக்கேற்ப
வயதானவர்கள் அந்த மலையை கடக்க ஒரு பகல் முழுவதும் எடுத்துக்கொள்வார்கள்.

கரிமலை இறக்கம்
கரிமலை இறங்கி
வழுக்குப்பாறையை கடந்ததும்.

பெரியானை வட்டம்
சிறியானை வட்டம்
கடந்து பம்பையில் தங்குவார்கள்.

இன்றும் பல பழம் பெரும் குருஸ்வாமிகள் பெரியானை வட்டத்தில் தங்கி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஐயனின் பூங்காவனம்.
ஐந்து மலைகளும் ஐயனின் பூங்காவனம்.
அடர்ந்த காடு.
எந்த திசை என்பது தெரியாது.
சிறிய பெரிய பாறைகள்…
விண்ணை முட்டும் மரங்கள்…

மர வேர்கள்.
கரடுமுரடான பாதைகள்.
ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம்.

காட்டு வாழ்க்கை பாறைகளுக்கு நடுவே விஷப்பூச்சிகள்.
காலில் குத்தினால் தாங்க முடியாத வலி தரும் முட்செடிகள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்கள் இல்லாத வனம்.
அங்கே காணக்கூடியவை:

யானைகள்
காட்டெருமைகள்
காட்டுப்பன்றிகள்
புலிகள்
சிங்கவால் குரங்குகள்
ராஜநாகங்கள்
என்பவற்றை இன்று டிஸ்கவரி சேனலில் பார்ப்பதை அப்போது
நேரில் பார்த்தோம்.

நீலிமலை வழியாக சன்னிதானம்.
பம்பை கணபதியிடம் வணங்கி
வலியில்லாத பயணம் வேண்டி

நீலிமலை.
அப்பாச்சிமேடு.
சபரிபீடம்.
சரங்குத்தி.
இவற்றைக் கடந்து நடைப்பந்தலில் ஓய்வெடுத்து பதினெட்டாம் படியை அடைவோம்.

அன்றைய பக்தி நான்கு அல்லது
ஐந்து நாட்கள் காட்டில் தங்கி
உயிரை ஐயனிடம் ஒப்படைத்து
அவனே கதி என்ற நம்பிக்கையுடன் பக்தியோடு சென்ற காலம் அது.

இன்றைய நிலை.
இன்று
மூன்று நாட்கள் விரதம்
பம்பை வரை கார்
அங்கிருந்து டோலி அல்லது டிராக்டர்
அபிஷேகம்
மீண்டும் அதே நாளில் வீடு

இப்படி எளிமையான
பயணமாக மாறிவிட்டது.

சிலர் பம்பை விநாயகர் கோவிலிலேயே மாலை அணிந்து.
அங்கேயே இருமுடி கட்டி.
டிராக்டரில் சன்னிதானம் சென்று
திரும்பி மாலையையும் ஆடைகளையும் தானமாக வழங்கி விட்டு வீடு திரும்புகின்றனர்.

மாற்றத்தின் விளைவு
ஒருகாலத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே கோவில் நடை திறக்கப்பட்டது.

இன்று
பம்பை முதல் சன்னிதானம் வரை
பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாதந்தோறும் பல நாட்கள்
நடை திறக்கப்படுகிறது.
அனைவரும் எளிதில் தரிசனம்
செய்ய முடிகிறது.
அடர்ந்த காட்டு வழிப் பயணமாக இருந்த காலத்தில் யாரும் உரிமை கேட்டு நீதிமன்றம் செல்லவில்லை.

1960 தொடக்கம் 1970
கால சபரிமலை.

அந்த காலத்தில்
காட்டுப்புல் விரித்து உறங்குவது.
மரத்தடியில் தங்குவது.
சுனை நீரைக் குடிப்பது.
குளிர்ந்த தரையில் படுப்பது.
இவையே வழக்கம்.

இரவில் வெளியே செல்லும் போது
கையில் டார்ச்.
சங்கு.
விலங்குகள் வந்தால் வெடி
அல்லது சங்கு ஒலி மூலம் விரட்டுவார்கள்.

மனதை உருக்கும் சம்பவம்
மலை ஏறும் போது யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தால்
உடலை கீழே கொண்டு வர
முடியாத சூழலில்…
அவரது உடலை துணியால் மூடி
கற்பூரம் ஏற்றி அந்திம கிரியைகள் செய்து விலங்குகள் நெருங்காதபடி ஏற்பாடு செய்து. அவரது இருமுடியை எடுத்துக்கொண்டு மீதமுள்ள பயணத்தை தொடர்ந்த நாட்கள்.
அந்த வேதனை இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

ஆசிரியரின் கருத்து.
தேவசம் போர்டும்.
கேரள அரசும் வசதிகளை அதிகரித்ததன் விளைவாக இன்று
பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சபரிமலைக்கு செல்லும் பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

அவர் கூறும் பரிந்துரைகள்:
41 அல்லது 48 நாட்கள்
மண்டல விரதம்.
ஐந்து மலைகளை
நடைபயணமாக கடக்க வேண்டும்.
வெட்டவெளியில் தங்கி
உறங்க வேண்டும்.
சுனை நீரில் குளிக்க வேண்டும்.
காட்டில் கிடைப்பதை
உண்டு வாழ வேண்டும்.
அதன் பிறகே ஐயனை
தரிசிக்க வேண்டும்.

அப்படி இருந்தால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களிலும் பலர் கூட வரமாட்டார்கள் என்பதே அவரது கருத்து.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…

Photos from Real Click Studio's post 08/06/2026

BADEN.
T A M I L S T R E E T F O O D
F E S T 26.

எனது மகள் BADEN இல் நடைபெறும்
தமிழ் பூட் பெஸ்ட் 26 நிகழ்வில் தனது திறமையையும் முயர்ச்சிகளையும் ஓன்றினைத்து ஓரு நிலையத்தினை
உங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளார்.

எதிர் வரும்
20. 06. 2026 SAMSTAG

அன்று
11 Uhr BIS 22 Uhr மணி வரை

BROWN-BOVERI-PLATZ IN BADEN
என்ற இடத்தில் மிக பிரமான்டமாக நடைபெற உள்ளது அனைவரும் வந்து
எம் இளையோர்களை ஊக்குவிப்போமாக…

Wollen Sie Ihr Service zum Top-Fotografie-Service in Embrach machen?
Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.

Kategorie

Adresse


Embrach
8424