Local Leopard

Local Leopard

Share

நம்மசிதம்பரம் //// நம்ம அண்ணன்

💙❤️நம்ம சின்னம் பானை சின்னம்💙❤️

22/01/2026

ரெண்டு சீட்டுக்கு நிக்கிறார் னு சில சில்றைங்க கிண்டல் பண்ணிட்ருந்தப்ப,
தலைவர் சொன்ன பதில்,

"ஒன்றா ,ரெண்டா ன்றது எனக்கு ப்ரச்சனை இல்ல, ஒரு கட்டத்துக்கு மேல தேர்தலே வேணாம்னு கூட போய்டுவேன்..களமும், மக்களுக்கான போராட்டமும் தான் எனக்கு முக்கியம்" னு சொல்லிருப்பார்...

சீட்டை விட கொள்கை தான் முக்கியம்,
பாமக, பாஜக இருக்ர கூட்டணில நான் இருக்க மாட்டனு சொல்றதுலாம் ஏதோ மேடை அலங்காரத்துக்காக, தற்பெருமைக்காக சொல்றது இல்ல அதெல்லாம் அவருக்குள்ள இயல்பாவே ஊறிப்போன ஒண்ணு..

உண்மையிலேயே தலைவர் திருமா வ திருப்திபடுத்துறதுலாம் சாதாரண விஷயம் இல்ல....

'பாமக' செஞ்ச பல அக்கரமங்கள மறந்துட்டு, கூட்ணிக்காக தலைவர் திருமாவ Adjust பண்ணிக்க சொல்ர எல்லாருக்கும் தலைவர் எப்பவுமே கெத்தா சொல்ர ஒன்னு தான் பதில்

"நீங்க நினைக்ர மாதிரி நான் சாதாரண அரசியல் வாதி கிடையாது"....

பதிவு:- தோழர் தீபக் சந்தர் முகுந்தன் 💙❤️
Thol.Thirumavalavan
Sou Paavendhan
Vck Akaran
Vck Thamaraiselvan Kishore
கரூர் கண்மணி ராமச்சந்திரன்

Photos from Local Leopard's post 09/08/2025

தேர்தல் மோசடிக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் ராகுல் காந்தியின் பக்கம் நிற்போம்.

+91 965 0003 420
என்ற எண்ணுக்கு மிஸ் கால் செய்யுங்கள்.

நீங்களும் ஆதரவு தருகிறீர்கள் எனப் பதிவு செய்யப்படும்.
7971836118 என்ற எண்ணிலிருந்து அழைப்பு வரும். அதில் ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கும்.

தேர்தலில் வாக்காளர் முறைகேடுகள் குறித்து ராகுல்காந்தி முன்வைத்த ஆவணங்களை, முதல் கமென்ட்டில் உள்ள இணைப்பிலிலிருந்து பதிவிறக்கலாம்.


Samaran Nagan
Vj Venkat

05/02/2025

கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனா
மன்னர் பரம்பரை மண்னான்கட்டி பரம்பரை னு

இப்போ........

05/02/2025

காவல் துறையை கையாளத் தெரியாத திமுக அரசு - இந்துத்வாவாதிகளை கையாள வக்கற்ற காவல் துறை - நாடகம் போடும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இவர்களால்தான் நேற்று மதுரையில் இந்துத்வாவாதிகள் ஒன்று கூடினர்..

ஆனால் மதுரை மாவட்ட மக்களுக்கும் நேற்று கூடிய சங்கிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அனைவரும் வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்...

இந்த கூட்டம் திடீரென கூட்டப்படவில்லை..ஒரு மாத காலமாக வெளிமாவட்டங்களிலிருந்து 200 க்கும் மேற்பட்ட சங்கிகள் மதுரையில் தங்கி வேலை பார்த்தனர்.. அதையும் மதுரை காவல் துறை கண்டுகொள்ளவில்லை..
தண்டோராவுக்கு தடை விதிக்கப்பட்டும் கூட வீதியாக வீதியாக தண்டோரா அடித்து பரப்புரை செய்தனர் அதையும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை..

தொடர்ந்து 1000 க்கணக்கான பொய் பிரச்சார காணொலிகளை பரப்பினர் அதையும் காவல்துறை கண்டு கொள்ளவில்லை..

4 ந்தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் மதுரையின் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 3 ந் தேதியே மத நல்லிணக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டோம்...

ஓடி வந்து எங்களின் ஆர்ப்பாட்டத்தை மட்டும் காவல் துறை தடுத்தது.. அதற்கு முந்தைய நாளில் பத்திரிக்கையாளர் சந்திப்பை தடுத்தது.. 144 தடை உத்தரவு போட போகிறோம், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மாட்டோம் நீங்களும் செய்யாதீர்கள் என்றதால் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம்..

எங்களை மீறி எதுவும் நடக்காதென்று வசனம் பேசினார் மா.ஆட்சியர் சங்கீதா

ஆனால் அன்று மாலையே கூட்டம் போட அனுமதித்தது நீதி மன்றம்

என்றால் நீதி மன்றத்தை தானே கேட்க வேண்டும் என்கிறீர்களா

அரசு வழக்கறிஞர் ஜின்னா RSS ஆளாகவே மாறி வாதிட்டார், பழங்காநத்தத்தில் நடத்தி கொள்ளட்டும் என்றார், 144 தடை இருக்கும் போது ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க கூடாது என்று கூட பேசவில்லை...

இது அரசு வழக்கறிஞரின் லட்சணம்..

இந்த தீர்ப்பை அறிந்தே, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த இந்துத்வாவாதிகள் மாலை வரை இருந்து ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி விட்டார்கள்...

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் உளவுத் துறையும் காவல் துறையும் திமுக அரசுக்கு எதிராகவே உள்ளது...அரசும் அதைப் பற்றி துளியும் கவலை கொள்வதில்லை

இன்று அவமானப்பட்டு நிற்பது திமுக அரசு..

எப்படி என்றாலும் மதுரை மக்கள் இந்த சங்கிகளை ஏற்கவில்லை என்பது மட்டுமே எங்களுக்கு ஒரு ஆறுதல்..

மத நல்லிணக்க பூமியான மதுரையை காப்பாற்ற நாங்கள் முடிந்த வரை போராடுகிறோம்..

திராவிட மாடல் அரசு இந்துத்வாவாதிகளிடம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாராவது சொல்லிவிடுங்கள்...

பதிவு :- மா.பா.மணிஅமுதன்

Want your business to be the top-listed Media Company in Anna Nagar?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Anna Nagar