MGRtv

MGRtv

Share

Official facebook account of MGR TV

12/12/2025

விஜய்யால் அரசியலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக செயல்பட முடியாது!

விஜய்யின் தவெக கட்சியை கரூர் சம்பவத்திற்கு முன், கரூர் சம்பவத்திற்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். கரூர் சம்பவத்திற்கு முன் விஜய் செல்கிற இடமெல்லாம் மக்கள் ஆதரவு, மீடியாக்களின் ஆதரவு என பெரும் எழுச்சியை விஜய்யால் உருவாக்க முடிந்தது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் தற்போது பாண்டிசேரி சென்று வந்த போது விஜய் ஏற்படுத்திய தாக்கமும், வீரியமும் பெருமளவில் குறைந்துள்ளது.

பூத் அளவிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் யாரும் தவெகவில் இல்லை.
MGR-ரை விஜய் தன்னோடு ஒப்பிடுகிறார், ஆனால் MGR 1977 ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியபோது திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட துணை அமைப்பாக MGR மன்றம் இருந்தது. MGR ரசிகர்கள் ரசிகர்களாக மட்டும் இல்லாமல் அரசியலிலும் தன்னை வளர்த்துக்கொண்டு MGR-யின் தொண்டர்களாக இருந்தார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் இன்னும் ரசிகர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

தவெகவினர் இன்னும் மக்களிடத்தில் சரியாக அடையாளப் படுத்தப் படவில்லை. விஜய் என்கிற ஒரே ஒரு பிம்பம் மட்டுமே அடையாளமாக இருக்கிறது, இந்த அடையாளத்தை வாக்குகளாக மாற்றும் கட்டமைப்பும் இன்னும் உருவாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது, "வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை, சுற்றுப்பயணம்" என இதில் கவனம் செலுத்தும் வேளையில் இவர்களால் கள அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக செயல்பட முடியாது.

Goodwill என்பது வேறு, வாக்கு என்பது வேறு. நல்லவர்கள், புகழ் பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. அரசியலில் களத்தை சரியாக கையாள்கிறவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்!

| | | | | | | |

04/11/2025

விவசாயி கிட்ட விளையாடுது இந்த ஆளும்கட்சி!

04/11/2025

விஜய்க்கு அரசியல் சொல்லித்தரவங்க ரொம்ப தப்பா சொல்லித்தராங்க!

| | |

04/11/2025

விஜய் 5 Star விளம்பரத்துல வர மாதிரி தான் எதுவுமே பண்ண மாட்டாரு!

| | |

Want your business to be the top-listed Media Company in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Address


Coimbatore