Garuda Pictures
History in filmy touch Here we help you to making short films . join our hands we make a difference in short films
15/01/2025
Book no:02/ year 2025
யானை இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு பேருயிர். யானையை பார்த்தாலே நாம் அனைவருக்கும் ஒரு ஆனந்தம் உள்ள எழத்தான் செய்யும்! முகம் மலரும்! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை "அங்க பார் யானை என்று நம்மை மீறி சொல்லி சந்தோஷப்படுவோம்".
அப்படிப்பட்ட அந்த பேருயிர், மனிதர்கள் மனிதர்களாக மாறிய பின் என்னென்ன துன்பங்கள் படுகிறது என்பதை பற்றி மிகத் தெளிவாக எழுதப்பட்ட ஒரு முக்கியமான படைப்பு.
சங்க இலக்கியத்தில் இருந்து சமகால தினசரி நாளிதழ் செய்தி வரை சேகரித்து அதில் யானைகளைப் பற்றி இருக்கக்கூடிய மிக முக்கியமான விடயங்களை நம் கையில் கொடுத்திருக்கிறார் இந்த எழுத்தாளர் "கோவை சதாசிவம்".
"எல்லா உயிர்களும் இன்பம் எய்துக" என்று பாரதி கூறியது போல், மனிதர்களால் இந்த உலகில் வாழ முடியவில்லை என்பது வருத்தம் தான். ஏனெனில் மனிதன் சக மனிதன் வாழ்ந்தாலே வசை பாடிக் கொண்டிருக்கக் கூடியவன். அவனா யானைகளைப் பற்றியும், சக உயிர்களைப் பற்றியும் சிந்திப்பான் என்று இந்த நூல் ஆசிரியர் ஒரு பத்தியில் மனம் நொந்து எழுதி இருக்கிறார்.
மனிதர்களிலும் அனைத்து உயிரையும் நேசிக்க கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் ஏதோ இயற்கை அடுத்த தலைமுறைக்காக மீதம் இருக்கிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் பணத்தை மட்டும் நேசிக்க கூடிய மனிதர்கள் அதிகம் இருப்பதால் யானைகளை பார்க்கக்கூடிய கடைசி தலைமுறை நாமாக மாறி விடுவோமோ என்று எனக்கு பல நாள் பயம் எழும். அதே பயத்துடன் தான் இந்த கோவை சதாசிவம் அவர்களும் இந்த நூலை முடித்திருக்கிறார்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது. நீங்கள் படிப்பது மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள். நாம் எங்கு இருக்கிறோம் என்று யோசிக்கச் சொல்லுங்கள். படித்த நீங்களும் யோசியுங்கள். "யானை யானையாக இருப்பதால்தான் நாம் மனிதத்தை மீறி வாழ முடிகிறது".
-சிரா.
புத்தகத்தின் பெயர்: ஆதியில் யானைகள் இருந்தன
எழுத்தாளர்: கோவை சதாசிவம்
பதிப்பாளர்: குறிஞ்சி பதிப்பகம்
விலை: 60/- ரூபாய்.
#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #ஆதியில்யானைகள்இருந்தன #கோவைசதாசிவம் #குறிஞ்சிபதிப்பகம்
"சோழ எல்லை" இது சோழ சூரியனி இரண்டாம் பாகம். இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு முன்னோட்டம்.
நான் எழுதிய அனைத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவாசம் அரங்கத்தில் கிடைக்கும்.
சுவாசம் அரங்கத்தின் எண்கள்
395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.
#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #நாவல் #சுவாசம்
என்னுடைய அனைத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவாசம் அரங்கத்தில் கிடைக்கும்.
சுவாசம் அரங்கத்தின் எண்கள்
395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.
என்னுடைய "மகாராதன்" நாவலை பற்றி ஒரு சிறிய முன்னோட்டம். உங்களுக்காக...
#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #நாவல் #சுவாசம்
02/01/2025
Get my all books as combo with attractive offers and discounts in chennai book fair 2025.
Stall : swasam
Stall no: 165,166 and 395,396
My dear readers make use of it and grab your combo pack.
#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3
29/12/2024
சென்னை புத்தகக் கண்காட்சி 2025 தொடங்கி கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் என்னுடைய அனைத்து புத்தகங்களும்
1) மித்ரன்
2) மகாரதன்
3) சோழ சூரியன் - பாகம்-1 சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்
4) சோழ சூரியன் - பாகம்- 2 சோழ எல்லை
5) சோழ சூரியன் - பாகம்-3 செம்பியன் கிழாலடிகள்
என அனைத்தும் சுவாசம் அரங்கு எண்கள்
395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.
இன்று மாலை 4 மணி அளவில் சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம் வாங்க.
#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #நாவல் #சுவாசம்
Click here to claim your Sponsored Listing.
Our Story
Here I am trying to give short cut to history and heritage. By means of this channel viewers can get more information on the #heritage #history #purana and great emperors like #chola #chera #pallava #pandya. The presentation may be in candid but for sure you will get more and experts details on the history.
Category
Contact the business
Address
Coimbatore