Pachapalayam

Pachapalayam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pachapalayam, Pachapalayam/Perur, Coimbatore.

01/10/2023

Perur pachapalayam whatsapp group channel

whatsapp.com

Photos from Pachapalayam's post 13/10/2020

நாட்டு மாட்டினங்களை காக்க ஒட்டுமொத்த தமிழ்நாடும் வீதிக்கு வந்து போராடியது. இதற்கு அடுத்த படியாக நாட்டு நாய் இனங்களை காக்க வேண்டும் என்னும் கோஷம் மக்களிடையே வலுத்து வருகிறது.
நாட்டு நாய் இனங்களை காக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் ஏற்று கொள்ளலாம். ஆனால்? வெளிநாட்டு நாய் இனங்களை வாங்கி வளர்ப்பதற்கு பதில் நம் தமிழ் நாட்டு நாயினங்களை மட்டுமே வாங்கி வளர்ப்பது என்பது ஏற்புடையதா? அறிவு பூர்வமானதா?

நாட்டு நாய் இனங்களை வளர்ப்பது என்றால் தெரு நாய்களையா வளர்க்க முடியும்?
மேலோட்டமாக நாம் சிந்தித்தால் இவ்வாறு தான் நினைக்க தோன்றும். ஆனால்?
வெளிநாடுகளிலும் தெரு நாய்கள் உண்டு, வீட்டில் வளர்க்கும் உயர் ரக நாய்கள் உண்டு. அதே போல் தான் நம் தமிழ்நாட்டிலும்.
நமது தமிழ் நாட்டில் இருப்பதை போன்ற உயர் ரக நாய் இனங்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இந்த பதிவை முழுமையாக, பொறுமையாக படியுங்கள்.
1] சிப்பிபாறை- முன்னோர்களின் வேட்டை நாய். முயல், மானை விட வேகமாக ஓடும்.
2] கன்னி- சிப்பிப்பாறையின் ஒரு பிரிவு தான் இந்த கன்னி நாய். சிப்பிப்பாறை, கன்னி இரண்டிற்கும் பெரிதாக வித்யாசம் இல்லை. [ உலகில் உள்ள நாய்களில் கன்னி நாய் தான் மிக புத்திசாலி] மீன்களில் டால்பின் போல் நாய்களில் கன்னி.

3] கோம்பை- 4 ரெட் புல்லை [ சிகப்பு எருதை ] ஒரு கோம்பை நாய் தனியாக வேட்டையாடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
மூன்று காங்கேயம் காளைகளுக்கு இணையான பலம் கொண்டது ஒரு சிகப்பு எருது.

கோம்பைக்கு இணையான பலமான, வீரமான நாய் உலகில் எங்குமே இல்லை.
4] ராஜபாளையம் நாய்- ராஜபாளையம் நாய் பற்றி நான் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
மிக முக்கியமாக டாபர் மேன் போன்ற வெளிநாட்டு நாய் இனங்கள் பல சமயங்களில் வளர்க்கும் முதலாளியையே கடிக்கும். ஆனால் நம் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் நாய் போன்ற நம் நாட்டின நாய்கள் அவ்வாறு செய்யாது.
வெளிநாட்டு நாய்களை போல் நன்றி கெட்ட நாய்களாக நமது தமிழக நாட்டின நாய்கள் இருக்காது. அதே சமயம் 10 டாபர் மேனை பந்தாடும் அளவு கோம்பை பலம் வாய்ந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒருசில உருப்படியான விஷயங்களை செய்தார். அதில் ஒன்று சைதாப்பேட்டையில் துவக்கிய நாட்டு நாய் வளர்ப்பு கூடம்.

PETA 4th Aug 2014 தமிழ்நாடு உயர் நீதி மன்றத்தில் இந்த நாய் வளர்ப்பு கூடத்தில் நாய்கள் ஒழுங்காக பராமரிக்கப்படுவதில்லை, நாய்கள் கொடுமைப்படுத்தப்படுகிறது. அதனால் இக்கூடத்தை AWBI ஆய்வு செய்து அவரகள் பரிந்துஉரைத்தால் இக்கூடத்தை மூட வேண்டும் என்று மனு செய்கிறது. இதற்கு மேல் என்ன நடந்தது என்று உங்களால் ஊகிக்க முடியும். PETA கைப்பாவை AWBI ஆய்வு செய்து "நாய் வளர்ப்பு கூடத்தை " மூட பரிந்துஉரைத்தது. அதன்படி உயர் நீதி மன்றம் Dec 16 2016 அன்று நம் இன நாய் வளர்ப்பு கூடத்தை மூட உத்தரவிட்டது.
அந்த கூடத்தில் இருந்த நாட்டு நாய்களில் பல என்ன? ஆனது என்றே தெரியவில்லை. அந்த நாய்கள் பீட்டாவால் கொல்லப்பட்டு விட்டது.
சைதாப்பேட்டையில் உள்ள நாய் வளர்ப்பு கூடத்தில் நாய்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை, அவை கொடுமைப்படுத்தப்பட்டது என்றே ஒரு வாதத்துக்கு வைத்து கொள்வோம். பீட்டாவிடம் தான் கோடி கணக்கான சொத்துக்கள் இருக்கிறதே. பீட்டா எதனால்? நாட்டு நாய்களை பராமரிக்கவில்லை.
ஏன் இதை எந்த தமிழ் மீடியாவும் நமக்கு சொல்லவில்லை?

பலபேர் யோசிப்போம் இதனால் PETA விற்கு என்ன லாபம் என்று. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. நம் நாட்டு நாய்களுக்கு தனியாக உணவு தேவை இல்லை. நாம் சாப்பிடும் உணவே அதற்கும் போதும். எளிதாக நோய்கள் அண்டாது. முடி உதிரும் தன்மை கிடையாது. அப்புறம் எப்படி அவர்கள் சம்பாதிக்க முடியும்?

வெளிநாட்டு நாய்கள் நாம் சாப்பிடும் உணவை சாப்பிடாது அதற்கென்று தனி உணவு சூப்பர் மார்க்கெட் ல வாங்கணும். அதை பராமரிக்க மருந்துகள் வாங்க வேண்டும். இவை அனைத்தும் வெளிநாட்டு கார்பரேட் கம்பெனிகளால் இங்கு விற்கப்படுகிறது. இப்போது புரிந்ததா?
இதற்கு பின்னே ஒளிந்துள்ள சர்வதேச வியாபார அரசியல்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த இனத்தின் பண்பாடு, கலாச்சாரம் முதலான அணைத்து அடையாளங்களையும் அழிக்க வேண்டும்.

நாட்டு காளைகள் இருக்க கூடாது, நாட்டு சேவல்கள் இருக்க கூடாது, நாட்டு நாய்கள் இருக்க கூடாது. நாம் வாங்கும் உயிர் உள்ள மிருகங்கள் முதல் உயிர் அற்ற பொருட்கள் வரை அனைத்தும் வெளி நாட்டவர்களின் பொருட்களாக இருக்க வேண்டும்.
நம் சொந்த மண்ணின் இனங்களை, அடையாளங்களை அழித்து அவர்களின் தயாரிப்புகளை இங்கே இறக்குவது தான் பீட்டாவின் ஒரே குறிக்கோள்.
சைதாப்பேட்டையில் மூடப்பட்ட நாய் வளர்ப்பு கூடத்தை திறக்க சொல்லி பலர் தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி வருகிறார்கள். முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

இந்த பதிவை படிக்கும் நண்பர்களுக்கு நான் இரண்டு வேண்டுகோள் விடுக்கிறேன்.
1] உங்கள் வீட்டில் ஏற்கனவே ஏதாவது ஒரு வெளிநாட்டு நாய் இருக்கும். ஒரு நாயின் வயது அதிக பக்ஷம் 15 ஆண்டுகள். நீங்கள் அடுத்து நாய் வாங்குவதாக இருந்தால் நம் தமிழக நாட்டு நாய்களை வாங்குங்கள்.
2] நல்ல வசதி இருப்பவர்கள் ஜோடியாக நாட்டு நாய்களை வாங்குங்கள். அவ்வாறு செய்வது நாட்டு நாய்களின் இன விருத்திக்கு உதவும்.
சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற நாட்டு நாய்களை நீங்கள் வாங்க விருப்பப்பட்டால் உங்கள் வீடு தேடி நீங்கள் விரும்பும் நாட்டு நாய்கள் வரும். ஆனால் அதற்கு முன்.
நீங்கள் உண்மையான அனிமல் லவ்வராக இருக்க வேண்டும்.

இதுபோன்ற உயர் ரக நாட்டு நாய்களை வாங்கி அவற்றை பராமரிக்கும் அளவு உங்கள் குடும்ப சூழ்நிலை இருக்க வேண்டும்.

05/12/2018

இனிய இரவு வணக்கம்

Want your school to be the top-listed School/college in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Pachapalayam/Perur
Coimbatore
641010