Farmers Protection Association

Farmers Protection Association

Share

1. Protect Farmers Lifes and Agriculture's Land.
2. Protect Rivers and Natural Resources.
3. Protect Ours Indian Breed Cow's and Bulls.
4. All Type Awarnes

Photos from Farmers Protection Association's post 22/08/2022

கோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது .1 டிஎம்சி தண்ணீர் எடுத்தால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பி.ஏ.பி பாசன பகுதிகள் பாதிக்கப்படும் எனக் கூறி பிஏபி விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் 3000 பேர் திருப்பூரில் போராட்டம் நடத்தியுள்ளனர். பேரணியாக மேலும் இதை அரசு ஒரு மாதத்திற்குள் தடை செய்ய வேண்டும் அல்லது இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். செய்யாவிட்டால் 100 இளைஞர்களுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

(முக்கிய குறிப்பு)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாவட்ட கூட்டுக்கு குடிநீர் திட்டம் பல செயல்படுத்தப்பட்ட வருகின்றன ஏன் நமது பகுதியில் இது போன்ற விவசாயிகளும் இளைஞர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது?
குடிநீர் தேவைக்காக ஏன் பவானிசாகர் அணைக்கட்டில் இருந்து திருப்பூருக்கு தண்ணீர் எடுத்துச் செல்லக் கூடாதா?
நமது மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தன்னார்வலர்களும் விவசாயிகளும் ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் ஏன் இதை தடுக்க மாபெரும் ஆர்ப்பாட்டங்களோ கண்டன பொதுக்கூட்டமோ பேரணியோ இதுவரை மிகப்பெரிய அளவில் நடத்தப்படவில்லை ஏன் அரசு இதை தடை செய்யக்கூடாது ஏன் இந்த திட்டத்தை மாற்றி அமைக்க கூடாது?
இனிவரும் காலங்களில் இது போன்ற கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து மட்டுமே அரசு கூட்டு குடிநீர் திட்ட நீர்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் தாழ்மையாக இந்த சமூக வலைதளத்தில் இதை பதிவிடுகின்றோம்.

Photos from Farmers Protection Association's post 29/12/2017

Flash Report:
1)Ponnusamy, age 56, S/o.Chinnaiah Gouder, Kendepalayam, Salaiyur-Village, Mettupalayam Taluk,
Karamadai Range limit.
2)Maniammal @ Rajamani, age 48
3)Priyadharshini, age 8
The above family members (husband, wife & daughter) travelled by his bike in Kendepalayam to Maruthur Road, near Gounder Thottam at 6am today(29.12.17) and an elephant pushed down. Immediately first aid at Mettupalayam GH & admitted at CMCH, CBE. Ponnusamy & his daughter has no issues. His wife have bleeding in her nose & head pain. Treatment is going on.
GPS of spot:
N11.23496°, E76.89367°, Elevation 446m.

As per DFO's direction, initial compensation amount ₹10,000/- by cash handed over to the patient's (Mrs.Maniammal ) husband Mr.Ponnusamy now.

Respective Karamadai Range FG Mr.Sagadevan & nearest Mettupalayam Range Forester Mr.Ravi are with patient at CMCH, CBE.

28/12/2017

விவசாயிகள் கவனத்திற்கு...
ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.
விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும்.
யானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும். பிறகு இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.
‘’யானை ஒருநாளைக்கு 400 கிலோ உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன.
நம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்…

Want your organization to be the top-listed Non Profit Organization in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Tharisaikkadu Thottam, Mangalakarai Pudhur Post, Karamadai
Coimbatore
641104