Maaran Promoters

Maaran Promoters

Share

Coimbatore propertys only

07/04/2024

சென்னை: பத்திரப்பதிவு விபரங்களை கணினியில் உள்ளீடு செய்யும் போது, கவனிக்காமல் விடப்படும் பிழைகளை சரி செய்ய நீண்ட தாமதம் ஏற்படுவதால், பத்திரங்கள் பதிவுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவு பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, சொத்து வாங்கும் நபர், அதற்கான கிரைய பத்திரத்தை தயாரித்த பின், அது தொடர்பான விபரங்களை பதிவுத்துறை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவாகும் தகவல்கள் அடிப்படையில், அந்த பத்திரத்தை பதிவுக்கு ஏற்கலாமா என முடிவு செய்யப்படும்.

இதில் சொத்து வாங்குவோர் அளிக்கும் தகவல்களில், ஏதாவது பிழை இருப்பது இறுதி கட்டத்தில் தெரியவந்தால், பத்திரப்பதிவு நிறுத்தப்படும்.

கணினி சார்ந்த இது போன்ற பிழைகளை, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் செயல்படும் தனிப்பிரிவு தான் சரி செய்ய முடியும். பொதுமக்கள் இந்த பிரிவுக்கு புகார் அளிக்க அனுமதியில்லை.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்திரப்பதிவின் போது சொத்து விபரங்கள், வகைபாடு தொடர்பான விபரங்களை கணினியில் பதிவிடும் போது, சில தவறுகள் ஏற்படுகின்றன. இந்த தவறுகளை கணினியில் சரி செய்து, பிரச்னையில் இருந்து சம்பந்தப்பட்ட பத்திரத்தை விடுவிக்க, டி.சி.எஸ்., வல்லுனர்கள் அடங்கிய குழுவுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பத்திரம் தொடர்பாக தவறு நடந்தால், மாவட்ட பதிவாளர் வாயிலாக டி.ஐ.ஜி.,க்கு தெரிவிக்கப்படும். அவர் வாயிலாக மட்டுமே, டி.சி.எஸ்., வல்லுனர் குழுவுக்கு தெரிவிக்க முடியும். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இதனால், பத்திரங்கள் பதிவும் தாமதமாகிறது.

டி.சி.எஸ்., வல்லுனர் குழு ஆட்களை அதிகரிக்க வேண்டும்; இவர்கள் மேற்பார்வையில், மண்டல அளவில் சரி செய்ய வழி காண வேண்டும். இதுகுறித்து உயரதிகாரிகள் நிலையில் ஆலோசித்து வருகிறோம். தேர்தலுக்கு பின் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Inspector General of Registration - Tamil Nadu 19/02/2024

*சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை இணைய வழியாக பெறும் சேவை துவக்கம்*

*https://tnreginet.gov.in என்ற இணைய வழியாக*

*பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு சான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. 1865-ம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் நகல்கள் உலகின் எந்த மூலையில் உள்ள பொது மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது*

Inspector General of Registration - Tamil Nadu முகவரி:எண்.100, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600028, தமிழ்நாடு, இந்தியா தொலைபேசி: 044-24640160 மின்னஞ்சல்: helpdesk[at]tnreginet[dot]net

16/10/2023

*முக்கியச் செய்தி*

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்!

நிலத் தகராறு,
பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

(Land Disputes)

1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது
பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018
W. P. No - 491/2012, dt - 4.6.2014
W. P. No - 16294/2012, dt - 4.4.2014

2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,
அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.
மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019

3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
தவறு செய்யும் விஏஓக்களை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 13916/2019, dt - 1.7.2019

4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை
வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.
உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No - 18489/2009, dt - 1.7.2011

5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No - 2060/2001, dt - 2.11.2012
S. A. No - 1715/1989, dt - 25.6.2002
W. P. No - 16294/2012, dt - 3.4.2014

7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு
பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No - 18754, 20304, 2613/2005
DT - 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)

8. பட்டா பெயர் மாற்றம் செய்ய நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.
W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)

9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court

10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியரால்
பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியர் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No - 16294/2012...

கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகளை, பதிவுகளை

மக்களுக்கு விழிப்பு உணர்வு
ஏற்படுத்துங்கள்.

Want your business to be the top-listed Realtor/realty Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


SINGANALLUR
Coimbatore
641015