Fitness A-LAB studios

Fitness A-LAB studios

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fitness A-LAB studios, Weight Loss Center, Erode.

27/04/2023

Intermittent fasting : இன்டர்மிட்டண்ட் டயட் யாரெல்லாம் பின்பற்றக் கூடாது... அது உடலில் எப்படி வேலை செய்யும்...

உடல் எடையை குறைப்பதற்கு இந்த இன்டர்மிட்டண்ட் டயட் அதிகமாக பரிந்துரை செய்யப்படுகிறது. இன்டர்மிட்டண்ட டயட்டில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. ஆனால் அதேசமயம் கண்ணைமூடிக் கொண்டு எல்லோரும் அதை பயன்படுத்த முடியாது. பயன்படுத்தவும் கூடாது. அப்படி இன்டர்மிட்டண்ட் டயட்டை யார் பின்பற்றக் கூடாது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இன்டர்மிட்டண்ட் டயட்டிலும் பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை நம்முடைய உடல் வாகுக்கும் உடலில் உள்ள பிரச்சினைக்கும் தகுந்தபடி மாற்றம் செய்து கொண்டு பின்பற்றுவது நல்லது. அதற்கு முன்பு நல்ல ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்றோ அல்லது அவரிடமே டயட் அட்டவணையை பெற்றோ பின்பற்றுங்கள்.


​உணவை தவிர்க்கலாமா​
இன்டர்மிட்டண்ட் டயட் என்றாலே காலை உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. நீங்கள் எடுத்துக் கொள்ளும் விரத நேரத்தைப் பொருத்து தான் அது தீர்மானமாகும். நீங்கள் காலை 6 மணிக்கே கூட விரத நேரத்தை தொடங்கி மாலை 6 மணிக்கோ அல்லது 4 மணிக்கோ விரத நேரத்தை முடிக்கலாம்.

எந்த டயட்டும் நம்முடைய உடலை வற்புறுத்தி பட்டினி கிடப்பதை அறிவுறுத்தாது என்பதையும் இந்த டயட் எப்படி நம்முடைய உடலில் வேலை செய்கிறது என்பதையும் புரிந்து கொண்டு பின்பற்றுவது நல்லது..

எடை வேகமாக குறையுமா?​

மற்ற எல்லா வகை டயட்டையும் விட இன்டர்மிட்டண்ட் டயட் உடல் எடையைக் குறைப்பதற்கு மிகச்சிறந்ததாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதிரடியாக வேகமாக எடையைக் குறைக்கும் என்று சொல்ல முடியாது. மிதமாக ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கு நல்ல வழி.

அதோடு அளவுக்கு அதிகமாக எடையைக் குறைப்பதைக் காட்டிலும் தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்கும்.

வகைகள் எத்தனை​
இன்டர்மிட்டண்ட் டயட் என்பது மற்ற டயட்டுகளைப் போல ஒரு கறாரான டயட் முறையோ ஒரே ஒரு முறை மட்டும் கொண்டதோ அல்ல. அதில் பல வகைகள் உண்டு. அதேபோல உணவு இடைவெளிகளும் அவரவர் நேரத்தைப் பொருத்து நாமே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் தினமும் வெவ்வேறு கால இடைவெளியை பின்பற்றக் கூடாது.

மொத்தம் 16 மணி நேரம் விரதம் இருக்க வேண்டும். மீதமுள்ள 8 மணி நேரத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிலர் 14 : 10 இடைவெளியும் கூட பின்பற்றுவதுண்டு. அதேபோல உணவும் இதுமட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. எதை சாப்பிட்டாலும் சத்தாக சாப்பிட வேண்டும் அவ்வளவு தான்.

உடல் பலவீனம்​
இன்டர்மிட்டண்ட் விரதம் (intermittent fasting) எல்லோருக்கும் ஏற்ற டயட் முறை என்றும் அதனால் வெறும் நன்மைகள் மட்டுமே இருக்கின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உண்டு. நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி குறிப்பிட்ட நேரத்துக்குள் உடலுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் உணவு முறை எல்லோருக்கும் பொருந்தாது. குறிப்பாக ரத்தசோகை என்னும் அனீமியா பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், மிகக் குறைந்த எடை கொண்டவர்கள், உணவுக் கோளாறுகள் இருப்பவர்கள் இந்த டயட்டை பின்பற்றுவது வேறு சில உடல் உபாதைகளைக் கொடுக்கும்.​

நேரத்தை கடைபிடிப்பது எப்படி?​
குறிப்பிட்ட நேரத்திற்குள் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது ஓரளவுக்கு உண்டை தான் என்றாலும் நம்முடைய உடலுக்குத் தேவையான அளவு கலோரிகளும் போதிய ஊட்டச்சத்துக்களும் கொண்டதாக இருக்க வேண்டும். அவற்றை பிரித்து எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருக்கும்போது நீங்கள் வழக்கமாக பின்பற்றும் உணவு இடைவெளி நேரம் (food window time) 16 - 8 என்கிற நேர இடைவெளி என்று வைத்துக் கொண்டால் அந்த 8 மணி நேரத்துக்குள் அன்றைய நாளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கொடுக்க வேண்டும்.

அந்த இடைவெளி என்பது உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு முழுமையாகக் கிடைக்கவும் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி ஜீரண மண்டலத்தை சீராக வைத்திருக்கவும் உதவி செய்யும்.


யார் இன்டர்மிட்டண்ட் டயட்டை பின்பற்ற கூடாது?​
இன்டர்மிட்டண்ட் டயட் நிறைய பலன் தரக்கூடியது, பாதுகாப்பானது தான். ஆனாலும் அது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலனை தான் கொடுக்கும் என்றும் சொல்ல முடியாது.

அதேபோல எல்லோருக்கும் இந்த டயட் ஏற்றதும் அல்ல. இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கும். அதனால் யாரெல்லாம் இந்த இன்டர்மிட்டண்ட் டயட்டை பின்பற்றக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள்,
சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள்,
இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சினைகள்,
அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள்,
நீரிழிவு நோய்,
உணவுக் கோளாறுகள்,
குறைவாக எடை உடையவர்கள்,
உடல் பலவீனமாக இருப்பவர்கள்
ஆகியோர் இந்த டயட்டை பின்பற்றுவதற்கு முன் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

06/10/2022

walking : தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி செய்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன... என்ன பலன் கிடைக்கும்...

ஒரு நாளைக்கு 10,000 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரை நடப்பதும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது நல்லதா, கெட்டதா, அப்படி நடக்கும்போது உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன, அதன் பயன்கள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நடைப்பயிற்சி என்பது நம்முடைய தினசரி வாழ்க்கையில் எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று. உடல் எடையை குறைப்பதற்காக தான் நடைப்பயிற்சி என்ற கருத்துகள் மாறி, உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிற புரிதலுக்கு வந்துவிட்டோம். இப்போது எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும், வேகமாக நடக்க வேண்டுமா, மெதுவாக நடக்க வேண்டுமா போன்ற பல சந்தேகங்கள் நடைப்பயிற்சி குறித்து இருக்கின்றன.

​10,000 ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி
10000-
ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் தூரம் நடைப்பயிற்சி செய்வது நிறைய ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக சமீபத்தில் நிறைய ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்கவும் கட்டுப்பாட்டிலும் வைக்க நினைப்பவர்கள் 10,000 ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அப்படி நடக்கும்போது நம்முடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்.
​மனதை உற்சாகப்படுத்தும்

ஆரம்ப நாட்களில் தினமும் 10000 ஸ்டெப்ஸ் தூரம் நடப்பது கொஞ்சம் சிரமமானதாக தோன்றலாம். ஆனால் நடக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்முடைய மனதுக்கு உத்வேகத்தைக் கொடுத்தும்.

அந்த உற்சாகத்திலேயே அடுத்தடுத்த நாட்கள் இன்னும் விரைவாக நடக்கத் தொடங்கலாம். ஒருநாள் நீங்கள் சோர்வாக உணர்ந்தாலும் உங்களுடைய மனசே உங்களை நடப்பதற்கு உசுப்பி விடும்.
​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

தினசரி உடற்பயிற்சிக்ள செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போது நம்முடைய ரத்தத்தில் ஆக்சிஜனேற்றப் பண்புகள் அதிகரிக்கச் செய்யும். தசைகளுக்கும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.

இதயத்திற்கு ஆக்சிஜனும் ரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். அதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
​நுரையீரலை வலுப்படுத்தும்

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் தூரம் நடைப்பயிற்சி செய்வது நம்முடைய நுரையீரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த உதவும்.

நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவும் அடர்த்தியும் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சுவாசிப்பது எளிதாகும். இதனால் இயல்பாகவே உடலின் இயல்திறன்கள் அதிகரிக்கும்.
​கவனச் சிதறலை குறைக்கும்

நம்முடைய உடல் செயல்பாடுகள் அதிகரிக்கும் போது, உடல் சுறுசுறுப்படையும். கவனச் சிதறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சினையும் சரியாக ஆரம்பிக்கும்.

10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தூரம் வரை நடக்கும்போது நம்முடைய மூளைக்கு செல்லும் நரம்புகள் சுறுசுறுப்படையும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைத்து நினைவுத் திறனை மேம்படுத்த உதவும். மூளை ஆக்டிவ்வாக செயல்படும்.
​எலும்புகளை உறுதியாக்கும்

தினசரி உடற்பயிற்சி குறிப்பாக நடைப்பயிற்சி, ஜாகிங் உள்ளிட்டவை நம்முடைய எலும்புகளுக்கு கூடுதலாக ஒருவித அழுத்தம் கொடுக்கும். அப்படி கொடுப்பதன் மூலம் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்.

தினசரி 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொண்டால் எலும்புகள் உறுதியாகி ஆஸ்டிரியோபொராசிஸ் போன்ற பிரச்சினைகள் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கும்.
​நீரிழிவை கட்டுப்படுத்தும்

நம்முடைய உடல் சுறுசுறுப்பாக இருக்கும்போது, உடற்பயிற்சிகளை செய்யும்போது தசைகளுக்கு அதிகப்படியான அளவு குளுக்கோஸ் தேவைப்படும்.

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை உறிஞ்சி தசைகளுக்கு ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவை வராமல் தடுக்கவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்யும்.
​ரத்த அழுத்தத்தை குறைக்கும்

தினசரி உடற்பயிற்சி செய்வதின் மூலம் நம்முடைய உடல் இலகுவாக இருக்கும். இதனால் கார்டிசோல் ஹர்மோன் உற்பத்தி குறைந்து மன அழுத்தம் வராமல் தடுக்க முடியும்.

குறிப்பாக 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரைக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்முடைய உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.
​உடல் எடையை குறைக்கும்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். நிறைய பேர் நடைப்பயிற்சி செய்தும் எடை குறையவில்லை. என்று கூறுவார்கள். அதற்கு காரணம் எவ்வளவு வேகத்தில் நடக்கிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை பொறுத்தது.

நீண்ட தூரம் நடக்கும்போது தான் அதிகப்படியான கலோரிகளை எரிக்க முடியும். அதனால் வேகமாக உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க விரும்பினால் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

12/09/2022

muscle healthy food : வலிமையான தசைகளை பெற செய்ய வேண்டிய 5 விஷயங்கள்...

சராசரி நபர் ஒருவர் 25 வயதில் தசையின் ஆரோக்கியத்தை இழக்கத் தொடங்குகிறார். இந்த இழப்பு 40 முதல் 70 வயது வரை சராசரியாக எட்டு சதவிகிதமும், அதன் பின்னர் 70 வயதுக்கு மேல் 15% ஆகவும் அதிகரிக்கிறது. மேலும் நீங்கள் தசை இழப்பால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் உங்கள் உடலும் உள்ளார்ந்த சிக்கல்களை சந்திக்க நேரிடும். தசை வலிமையை மேம்படுத்துவது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.

நம் அனைவருக்குமே உடலை வலிமையாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதற்கேற்றாற்போல் சினிமா, டிவி விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் வரும் ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே வலிமையான உடல் இருப்பதை பார்க்கும் போது நமக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவதே.

அதே நேரம் இத்தகைய அமைப்பைப் பெற ஜிம்முக்கு செல்வதும் உண்டு. அதிலும் சிலர் நேரம் காலம் பார்க்காமல் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் வலிமையான உடல் வேண்டுமென்றால் தசைகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்பதை தான் இப்போது தெரிந்துகொள்ள போகிறோம்.
​தசை ஆரோக்கியம்

தசைகள் எலும்புகளோடு இரு முனையில் இணைந்திருக்கும். ஒரு நபருக்கு தொடர்ந்து வயதாகும்போது எலும்புகள் அடர்த்தியை இழக்கக்கூடும். இதனால் தசைகளும் வலுவிழக்கும். எனவே நாம் இதன் முக்கியத்துவத்தை எந்த காலத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடாது. உடலானது கொழுப்பைக் குறைத்து கலோரிகளை எரிப்பதால் தசைகள் வலுப்பெறுகிறது.

இத்தகைய தசையில் கிழிவு, காயம், பலவீனம், இறுக்கம் என பாதிப்புகள் எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆக நம்முடைய தசைகள் உறுதியாக இருக்க, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உடற்பயிற்சி மட்டுமல்லாமல் நாம் சில ஸ்டெராய்டு மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் இயற்கையான வழிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

நாம் இக்கட்டுரையில் 5 விதமான முறைகளை பயன்படுத்தி தசை மற்றும் எலும்புகளில் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த என்ன செய்யலாம் என பார்க்கலாம்.

புரதச்சத்து உணவை எடுங்கள்


புரதம் என்பது ஒரு நமக்கு அதிக அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ஆகும். இது அமினோ அமிலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. சருமம், முடி நகம் மற்றும் செல்களின் அமைப்பு என எல்லாவற்றிலும் புரதம் நிறைந்துள்ளது. எனவே வலிமையான தசையை உருவாக்கி உடல் சிதைவதை தடுக்க தசையானது அதிக புரதத்தை ஒருங்கிணைக்க வேண்டும். அதேசமயம் எலும்புகள் அதன் அடர்த்தியின் பெரும்பகுதியை 25 வயதிற்குள் அடைந்து விடுகிறது.

அதன் பிறகு முட்டை, இறைச்சி, பட்டாணி, பாதாம், சோயா பீன் மற்றும் கொண்டைக்கடலை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளால் தசைகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை விட, எந்த நேரத்தில் எவ்வளவு எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெவ்வேறு புரதங்கள் வெவ்வேறு நேரங்களில் செரிக்கப்பட்டு உறிஞ்சப்படுவதால் தொடர்ச்சியாக அதன் பலனை உடலை பெற வைக்கும். தாவர வகை உணவுகளில் இருந்து மட்டும் கூட நம்மால் உடலுக்கு தேவையான புரதங்களைப் பெறலாம்.

​கால்சியம் நிறைந்த உணவுகள்

உடல் எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் உதவுகிறது. இது தசைச் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 700 மில்லி கிராம் முதல் 1000 மில்லி கிராம் வரை கால்சியம் தேவைப்படுகிறது. வயது காரணமாக இது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

வைட்டமின் டி, வைட்டமின் கே, கால்சியம் மற்றும் வைட்டமின் சி அடங்கிய உணவுப் பொருட்கள் தசை மற்றும் எலும்புகளின் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். தினசரி ஏற்படும் எலும்பு இழப்பை சரிசெய்ய கால்சியம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும்.

இந்த எலும்பு இழப்பு இரத்தத்தில் மீண்டும் கால்சியத்தை வெளியிடுகிறது. இது அயனியாக்கம் செய்யப்பட்ட கால்சியம் என்று அழைக்கப்படுகிறது. இதய தசை உட்பட பெரும்பாலான தசைகளுக்கு இந்த வகை கால்சியம் அவசியமாகும்.

​தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

தசைகளின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் உடற்பயிற்சியும் ஒன்று. நாம் சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வது வலுவான எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

இதற்காக நீங்கள் அதிக எடைக் கொண்ட உபகரணங்களுடன் தசையை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என அவசியமில்லை. அதேசமயம் கலவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே தசைகளின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

​குறைந்த கலோரி உணவை தவிர்க்கவும்

ஆரோக்கியமான உடலுக்கு நாம் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் கலோரிகளாக கணக்கிடப்படுவதால், ஒருநாளை நம் உணவுக்கு சராசரியாக 1500 கலோரிகள் தேவைப்படுகிறது. ஆனால் ஆயிரம் கலோரிகளுக்கு குறைவாக நாம் உட்கொள்ளும் போது எலும்பு மற்றும் தசை ஆரோக்கியமானது பாதிக்கப்படுகிறது.

மேலும் குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ளும் பருமனான பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதியில் எலும்பு இழப்பு ஏற்படுகிறது.இது கீழ் மூட்டுகளில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.எனவே குறைந்த கலோரி கொண்ட உணவை தவிருங்கள்.

மது மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்கவும்

பலருக்கும் வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மது மற்றும் புகைப்பழக்கம் ஏற்படுகிறது.


அதிகமாக மது அருந்துவது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கிறது. அதேபோல் புகைபிடிப்பது முதுகெலும்பு பிரச்சனைகளுடன் நேரடியாக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் அதிக சர்க்கரை கொண்ட பானங்களும் இதற்கு சமமாக தீங்கை விளைவிக்கும் என்பதால் அதற்கு பதிலாக சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடியுங்கள்

05/09/2022

மூட்டுபாதிப்பில் இருந்து மூளை பாதிப்பு வரை தடுக்கும் தாமிரச்சத்து நன்மைகள் .. தினசரி தேவை எவ்ளோன்னும் தெரிஞ்சுக்கங்க!

நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தில் தாமிரமும் ஒன்று. இந்த சத்து பற்றாக்குறையால் மூட்டு பாதிப்பு முதல் மூளை பாதிப்பு வரை ஏற்படலாம். இந்த தாமிரம் உடலுக்கு செய்யும் நன்மைகள், குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

தாமிரம் பல முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது பல வித நரம்பியல் நோய்களையும் திறம்பட எதிர்த்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. உடலில் இரத்த சிவப்ப ணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
தாமிரம் எலும்புகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது இரும்பு உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. இப்படி தாமிரம் அளிக்கும் பலவித நன்மைகளை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

தாமிரம் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மூளையின் நரம்பியக்கடத்திகளை செயல்படுத்தும் என்சைம்களின் ஒரு முக்கிய மூலப்பொருள் தாமிரம் ஆகும். எனவே மூளை ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தாமிரம் அவசியம்.

monsoon diet : நாவல்பழம், சுரைக்காய், தயிர் ... மழைக்காலத்தில் சாப்பிடலாமா? நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடணும்!

நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. பெரியவர்களில் ஏற்படும் நியூரோடிஜெனரேஷன் பெரும்பாலும் தாமிர இழப்பால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

தாமிரச்சத்து மூட்டு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

தாமிரம் எலும்பின் அடர்த்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த தனிமத்தின் பற்றாக்குறை ஆஸ்டியோபொராசிஸ்க்கு வழி வகுக்கிறது. இது கொலாஜன் ஆரோக்கியத்திலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

உடலின் கட்டமைப்புக்கும் உதவுகிறது. தாமிரம் பற்றாக்குறை கொலாஜன் குறைவுக்கு வழி வகுக்கிறது.தாமிரத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்தின் வலியை குறைக்கிறது.
​தாமிரச்சத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இரும்புச்சத்துடன் தாமிரம் சேர்ந்து சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் நம் நோயெதிர்ப்பு சக்தி பலப்படுகிறது. தாமிரத்தின் குறைபாடு நியூட்ரோபீனியாவுக்கு வழிவகுக்கும்.

இது குறைந்த அளவிலான வெள்ளை இரத்த அணுக்களுக்கு காரணமாகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனம் அடைந்து அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடுகிறது.
​தாமிரச்சத்து வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

தாமிரச்சத்து நம் உடலில் தினசரி 50 க்கும் மேற்பட்ட நொதி எதிர்வினைகளில் பங்காற்றுகிறது. இதனால் ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுகிறது. ஏடிபி அல்லது அடினோசின் ட்ரைபாஸ்பேட்டின் வினைபுரிதலிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. தாமிரத்தின் குறைபாடு வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி வகுக்கும்.
​தாமிரச்சத்து சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது

தாமிரம் குறைபாடு குழந்தைகளில் காணப்படும் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். தாமிரக் குறைபாடு மூட்டு மற்றும் எலும்பு வளர்ச்சி மற்றும் மூளையின் வளர்ச்சியை கூட பாதிக்கும். சிவப்பு இரத்த அணுக்களின் ஆக்ஸினேற்ற தேவைக்கும் தாமிரம் அவசியம் ஆகிறது. தாமிரம் குறைபாடு குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
​தாமிரச்சத்து தைராய்டு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

தாமிரம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் துத்தநாகம் இவற்றுடன் சேர்ந்து தைராய்டு செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசத்தை தடுக்க உதவுகிறது.


தாமிரச்சத்து வயதாகுவதை தாமதப்படுத்துகிறது
ரெட்டினோல் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்களைப் போலவே தாமிரமும் முதுமையைத் தடுப்பதில் முக்கியமானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தாமிர பெப்டைடுகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது சருமத்தை இளமையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.

தாமிரம் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. தாமிரம் சரும சுருக்கங்களை போக்குகிறது. தாமிரம் சரும புரதங்களை உறுதிப்படுத்துகிறது. ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சருமத்தை புற ஊதாக் கதிர் வீச்சில் இருந்து பாதுகாக்கிறது. மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது.

தாமிரச்சத்து தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

தாமிர பெப்டைடுகள் மயிர்க்கால்களின் அளவை அதிகரிக்கவும் முடிகள் மெலிந்து போவதை நிறுத்தவும் உதவுகிறது. தாமிரம் மெலனின் உற்பத்திக்கு உதவுவதால் முன்கூட்டியே நரைப்பது தடுக்கப்படுகிறது.

​தாமிரச் சத்து அடங்கிய உணவுகள்

பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 900 மைக்ரோகிராம் அளவிற்கு தாமிரம் தேவைப்படுகிறது.

மாட்டின் கல்லீரல், காளான்கள், முந்திரி பருப்பு, கீரைகள், கோக்கோ பவுடர், பாதாம் பருப்பு, அவகேடா போன்றவற்றில் தாமிரச் சத்து காணப்படுகிறது.

​அதிக தாமிரச் சத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவு தாமிரச் சத்து எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது கிடையாது.

vitamin b12 : வைட்டமின் பி12 உடம்புல வர்ற முக்கியமான வியாதிகளை தடுக்குமாம்.. ஆய்வு சொல்றதை கேளுங்க!

உடம்பில் உள்ள அதிகப்படியான தாமிர அளவு நச்சுத்தன்மைக்கு வழி வகுக்கும். இது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளை பாதிக்கிறது.

தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம்.

Want your business to be the top-listed Health & Beauty Business in Erode?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Erode
638001

Opening Hours

Monday 5:30am - 8pm
Tuesday 5:30am - 8pm
Wednesday 5:30am - 8pm
Thursday 5:30am - 8pm
Friday 5:30am - 8pm
Saturday 5:30am - 8pm