Allware infotech
allware infotech
05/06/2014
சோனி நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பட்டி
சோனி நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பட்டியினை உருவாக்கி முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
100 டொலர்கள் பெறுமதியான SWR10 எனும் இக்கைப்பட்டியனது வெறும் 21 கிராம்களே எடையுடையது.
இதில் ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து குறுஞ்செய்திகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், அலாரம் உட்பட பல வசதிகளைக் கொண்டதாக காணப்படுகின்றது.
இதனை விசேட அம்சமாக மீடியா பிளேயர் காணப்படுகின்றது. இதற்கான பிரத்தியேக அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
21/05/2014
தெரிந்து கொள்வோம்: இணையம் ஹேங் ஆகிறதா? இது தான் பிரச்சனையாக இருக்கும்
அன்றாட வாழ்வில் இணையம் நமக்கு முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், அதன் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நாம் இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான ”error” செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது ஹேங் ஆகும்.
இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு, நீங்கள் செல்லலாம்.
மீண்டும் வந்து பார்க்கிற போது "Session Expired" என்ற செய்தி திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எந்தவிதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம்.
எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம்.
சில தளங்கள் தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாதவர்கள் தளத்தைப் பார்க்க சில நிமிடங்களே அனுமதி தரும். அந்த நேரம் முடிந்துவிட்டால் தானாகத் தளம் மூடப்பட்டு "Session Expired" செய்தி கிடைக்கும்.
மேலும் சில தளங்கள் குக்கீஸ் எனப்படும் குறுந்தகவல் தொகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கும். அப்போதுதான் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்தை அணுகுகையில் உங்களைப் பற்றிய தகவலை அந்த தளம் அறிந்து கொண்டு உங்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும்.
எனவே குக்கீஸ் பெறுவதனை நீங்கள் தடுக்கும்படி செட் செய்திருந்தால் மாற்றி விடவும். இதற்கு இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் Tools, Internet Options சென்று அதில் Privacy டேப் கிளிக் செய்திடவும்.
பின் கிடைக்கும் திரையில் Default என்னும் பட்டனைக் கிளிக் செய்தால் குக்கீஸ் பெறுவது அனுமதிக்கப்படும். கம்ப்யூட்டரில் பயர்வால் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளம் தானாகவே மூடும் வாய்ப்பு உண்டு.
ஏனென்றால் பயர்வால் செட்டிங்ஸ் சில தளங்களை இறக்கம் செய்து பார்க்க விடாது.. இதற்கு உடனே பயர்வால் செட்டிங்ஸ் பார்த்து திருத்தவும். நீங்கள் விரும்பிப் பார்க்கின்ற தளங்களை பயர்வால் அனுமதிக்கும்படி பயர்வால் செட்டிங்ஸை மாற்றவும்.
சில வேளைகளில் தவறான நாள், தேதி மற்றும் நேரத்தை உங்கள் கணனி காட்டிக் கொண்டிருந்தால் அதனாலும் "Session Expired" செய்தி வரலாம். ஏனென்றால் சில தளங்கள் பின்புலத்தில் உங்கள் கணனியின் நேரத்தோடு இணைந்து சில புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கலாம்.
மேலே குறிப்பிட்ட எதுவுமின்றி இணைய தளத்தில் எக்ஸ்பயர் செய்தி வருகிறதென்றால், அதுவும் குறிப்பாக ஒரு தளத்திற்காக வருகிறது என்றால் அந்த தளத்தில் பிரச்னை உள்ளது என்று பொருள்.
எனவே உங்கள் கணனியின் செட்டிங்ஸ் சரி செய்வதனால் இது நிவர்த்தி அடையாது. எனவே இந்த செய்தி வரும் பட்சத்தில் பொறுமையாக உடனே அல்லது சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அதனைப் பெற முயற்சிப்பது தான் சிறந்த வழியாகும்.
நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Logitech K830 கீபோர்ட்
Logitech நிறுவனம் K830 எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கீபோர்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.
கணனியிலிருந்து 10 மீற்றர்கள் தூரத்தில் கூட வைத்து பாவிக்கக்கூடிய இக்கீபோர்ட் ஆனது சூழலில் உள்ள ஒளிக்கு ஏற்ப தன்னிலிருந்து வெளிவரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் 90 பவுண்ட்களே பெறுமதியான இக்கீபோர்ட் மூலம் டைப் செய்து முடிந்ததும் 5 செக்கன்களில் தானாகவே பவர் சேவ் மூட்டிற்கு மாறி மின்சக்தியை சேமிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
05/05/2014
அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள்
அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்களை லாக் செய்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு லாக் செய்வது இலகுவாகவும், பயனர்களை வெகுவாக கவர்ந்ததாகவும் இருக்கின்றது.
இதனைப் போன்றே விண்டோஸ் மற்றும் அப்பிளிக் மேக் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய கணனிகளையும் லாக் செய்வதற்கு Eusing Maze Lock எனும் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
29/04/2014
பென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்
பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.
* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.
* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
1st Floor, MSK Arcade, Nadar Medu Petrol Bunk Bus Stop
Erode
638002