Dr. Aravindha Raj

Dr. Aravindha Raj

Share

Doctor., General Health & Paleo Consultant., Covid Consultant., Fitness Enthusiast ., Weight loss and fitness guide !!

25/03/2022

எனக்கு பிடிக்காத வார்த்தை ஒன்று உள்ளதென்றால் அது 'Busy'.

அதாவது, Busy ஆ இருந்துட்டேன் ல்ல ரெண்டு வகை இருக்கு.

எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு, அதனால உங்க கூட பேச முடியல ன்னு அடுத்தவங்க கிட்ட சொல்லுறது ஒருவிதம். இது ஏற்றுக்கொள்ளக் கூடியது.

ஆனா, Busy ஆ இருந்துட்டேன் டாக்டர்., அதனால டயட் ஒழுங்கா பாலோ பண்ண முடியல. வாக்கிங் 45 நிமிஷம் போக முடியல ன்னு சொல்லுறதெல்லாம் ஏத்துக்க முடியாது.

எவ்ளோ பிஸியான ஆளா இருந்தாலும், தினமும் 45 நிமிஷம் இலவச நேரம் இல்லாமலா போயிடும்...??

சொல்லப்போனா, எனக்கு ஒரு நாளைக்கு Online Consultation பாக்க 12 மணி நேரம் ஆகும். இந்த சமயத்துல நான் தினமும் 1 மணி நேரம் வாக்கிங் போறது முடியாத காரியம்.

அப்போ தான் 6 மாசம் முன்ன ஒரு ஐடியா வந்துச்சு. நாம ஏன் பேஷண்ட்ஸ் கிட்ட பேசிக்கிட்டே வாக்கிங் போகக்கூடாது ன்னு.

அன்னைக்கு ஆரம்பிச்சது தான் இது.

என்னுடைய Consultation hours காலைல 5.30 மணில இருந்தே தொடங்கிடும்.

பாரின் கன்சல்டேஷன் எல்லாம் இந்தியா நேரத்துக்கு 5.30-7 ன்னு allot பண்ணிடுவேன். அந்த 1.30 மணி நேரம் பேசிக்கிட்டே வாக்கிங் போய்ட்டு ஒருத்தருக்கு 30 நிமிஷம் ன்னு 3 பேஷண்ட்ஸ் க்கு கன்சல்டேஷன் முடிச்சிடுவேன்.

அதே மாதிரி சாயந்திரம் 6 -7 க்கு சில பாரின் கன்சல்டேஷன். அப்ப 1 மணி நேரம் வாக்கிங்.

மீதி நேரத்துல இந்தியன் பேஷண்ட்ஸ் க்கு கன்சல்டேஷன் வீட்ல உக்காந்துகிட்டே.

என்னோட ஹெல்த் உம் செம்மையா இருக்கும். சம்பாதிச்ச மாதிரியும் இருக்கும்.

நல்லா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க. என்னைக்கு உங்க உடல்நலத்தை Busy ன்ற வார்த்தையை சொல்லி தள்ளி போடுறீங்களோ, நீங்க கொஞ்சம் கொஞ்சமா உங்களோட ஆரோக்கியத்தை இழந்துட்டு வர்றீங்க ன்னு. பிஸி பிஸி ன்னு நீங்க இன்னைக்கு ஒடம்ப பாக்காம ஓடிட்டே இருந்தா 50 வயசுக்குள்ள படுத்த படுக்கை ஆயிடுவீங்க.

தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் !!

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் !!

Work Smart...♠️

Dr.Aravindha Raj 😄

Want your practice to be the top-listed Clinic in Kanchipuram?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Kanchipuram
631501