Service Doctors and PostGraduates Association-SDPGA
SDPGA is a registered association to protect the rights of service doctors and post graduates in tam
07/02/2026
*பேராசிரியர் மரு.இலட்சுமி நரசிம்மன் அவர்களுக்கு நினைவேந்தல்*🌷
அன்பு பொக்கிஷமே,
அரியதொரு சரித்திரமே!
சில துரோக உளிகளால்,
செதுக்கப்பட்ட
பொற்சிலையே!
கருவறை முதல்
கல்லறை வரை,
போராட்டத்தில் உதித்த,
ஒப்பில்லா தலைமகனே!
அமைதிவழி போராட்டம்!
ஆயுத மற்ற போராட்டம்!
பாதை பிசகாமல்
பயணத்தை தொடர்ந்து!
பாதைகளே இல்லையெனில்
பாதங்களை பதிய வைத்து!
வலிமை கொண்டு
வானம் தொட்டு!
முன் சென்ற
விடிவெள்ளியே!
உன்
ஓட்டமும்,நடையும்,
உயரமும் ஒய்யார மும்!
உன்னுடன் நடந்த நினைவுகளுடன்
கடந்து செல்ல பழகிக் கொண்டோம்!
பல தலைமுறைக்கு
தலைவர்களை உருவாக்கிய
கொள்கை வீரனே!
ஊரையே எதிர்த்து நின்று எங்கள் உரிமைகளை கேட்டவனே!
மருத்துவர் என்ற பெயரோடு
எமக்காக
மரணம் வரை மன்றாடினாய்!
எண்ணித் துணிந்தாய்
நீ..வாழ்க!
உன் இலட்சிய கனவு!
உன் உறுதியான தேடல்!
பல நாட்களாய்!
பல வாரங்களாய்!
பல மாதங்களாய்!
பல வருடங்களாய்,
கடந்து செல்கிறது!
எவ்வளவு எடுத்துரைத்தும்!
சிலருக்கு ஏற்க
மனமில்லை!
இருளென்று காட்டலாம்
இடைப்பட்ட
காலத்தை!
கார்மேகம்
சூழ்வதினால்
சூரியன்
அழிந்திடுமோ?
துணிவுடன் கருத்துக்களை ,
கணக்கின்றி
பொழிந்தாயே!
அரும்பிய யோசனைகள்
அத்தனையும்
அருமையன்றோ!
உம்மை வாழ்த்திட
வார்த்தையில்லை!
இதயத்தால் வாழ்த்துகிறேன்!
நீ தோற்றுவித்த சங்கம் நீடூழி வாழ்க!
இனி காத்திருப்பு
பயனில்லை!
பயணிப்போம் இலக்கு நோக்கி!
துவண்டு போவோமே தவிர
தோற்று ப்போக மாட்டோம்!
காயங்களுக்கு பிறகுதான்,
கனவுகள் பலிக்குமோ!
உன்
மரணத்திற்கு பிறகு தான் மருத்துவ மறுமலர்ச்சி உதித்திடுமோ!
வாழ்க என்றென்றும்
உன் புகழ் வையகமெங்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
🌷🌷🌷🌷🌷🌷🌷
மரு.ரமா
SDPGA
Click here to claim your Sponsored Listing.
Contact the school
Website
Address
Salem