CPIM Theni DC
Official page of CPIM Theni District Committee
26/05/2026
26.05.2026
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல! சிபிஐ(எம்) விமர்சனம்!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
ஏற்கனவே, சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்
Shanmugam Perumal Theekkathir Chief Minister of Tamil Nadu TVK விஜய் CPIM Tamilnadu
01/05/2026
கடமலைக்குண்டு கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்ற பட்டது ஒன்றிய செயலாளர் ஆர் போஸ்...
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம் முருகன் ஆர் தங்கப்பாண்டி ...
சிஐடியு பொறுப்பாளர் எஸ் பரமசிவம் சேகர் மேலப்பட்டி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்...
01/05/2026
பெரியகுளம் தாலுகாவில் ஜெயமங்கலம், ஜி. கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் கிளைகளில் உள்ள கட்சி அலுவலகத்திலும்,...
பெரியகுளம் கட்சி அலுவலகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி மே தினத்தில் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ. அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் M. ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் S. வெண்மணி, தாலுகா குழு செயலாளர் M.V. முருகன்
தாலுகா குழு உறுப்பினர்கள் R.K. ராமர், T. காளிமுத்து, A மன்னர் மன்னன் மற்றும் கிளை தோழர்கள் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Com. Kasthuri Ninaivagam, 72, White House First Street, NRT Nagar
Theni
625531