Anbu View
அன்பிற்கினிய தமிழ் கூறும் இதயங்களே ❤️
12/01/2025
ஜனவரி 10: 2025 இன்று 24H கார் ரேஸ் தொடரில் மாபெரும் வெற்றி பெற எங்கள் தல #அஜித்குமார் அவர்களை வாழ்த்துகிறோம்💥. அஜித் கார் ரேஸ்ல கலந்துக்க போறார்னு எல்லோருக்கும் தெரிஞ்சு அளவுக்கு அது என்ன ரேஸ், என்ன ரூல்ஸ்னு பல பேருக்கு தெரியல. எல்லோரும் அது எதோ வழக்கமா ஒரு சர்கியூட்குள்ள 10 லேப்போ 20 லேப்போ ஓட்டற ரேஸ்னு நினைச்சிட்டு இருக்காங்க.
இந்த ரேஸ் ஒரு எண்டுரன்ஸ் (Endurance) பார்மட் ரேஸ். அதாவது 24 மணி நேர ரேஸ், இன்னிக்கு மத்தியானம் 1 மணிக்கு கார் எடுத்தா, அடுத்த நாள் மத்தியானம் 1 மணி வரைக்கும் ஒட்டனும். ஒரு டீம்ல 3ல இருந்து 5 டிரைவர் வரைக்கும் இருப்பாங்க, அவங்க மாத்தி மாத்தி ஒட்டணும், ஒரு டிரைவர் குறைந்தது
2 மணி நேரம் ஓட்டனும், 24 மணி நேரம் இருக்கேன்னு மெல்ல எல்லாம் ஓட்ட முடியாது, ஆவரேஜ் ஸ்பீட் அந்த டிராக்ல 240 கிலோ மீட்டர். இந்த ஸ்பீட்ல 24 மணி நேரம் ஒட்டறது சாதாரண விஷயம் இல்லை.
வெறும் டிரைவர் சமந்தபட்டது மட்டும் இல்லை இந்த ரேஸ், 24 மணி நேரம் ஓடற அளவுக்கு கார ரெடி பண்ணனும், அதுல மைலேஜ், டையர், மெக்கானிகல் ப்ராப்ளம் வராம பாத்துக்கணும், அதுக்கு ஒரு மெக்கானிக் டீம் இருக்கும். ஆவரேஜ் பிட் ஸ்டாப் டைம் 45ல இருந்து 55 செகண்ட், இதுலதான் பெட்ரோல் போடறது, டிரைவர் மாத்தறது எல்லாம் பண்ணனும் (அதுக்கு அஜித் பிராக்டிஸ் பண்ற வீடியோ கூட வந்திச்சு)
தொடர்ந்து பல மணி நேரம் குறைந்தது 240 கிலோமீட்டர் ஸ்பீட்ல ஓட்ட கடுமையான பயிற்சி தேவை, அப்படி தொடர்ந்து 6 மணி நேரம் ஓட்டி பயிற்சி எடுக்கும்போதுதான் அஜித் கார் ஆக்ஸிடென்ட் ஆச்சு.
அஜித் டீம்ல 4 டிரைவர்க இருக்காங்க, ஆளுக்கு குறைந்தது 6 மணி நேரம் தொடர்ந்து மின்னல் மாதிரி பறக்கனும்.
இதுல ஜெயிக்க,
எந்த டீம் 24 மணி நேரத்துல அதிக தூரம் ஓட்டி இருக்காங்களோ, அதாவது அதிகமான லாப், அவங்கதான் வின்னர்.
10 ஆம் தேதி துபாய் டைம் 1 மணிக்கு ித் சீரி பாய இருக்கிறார், 11 ஆம் தேதி அன்னிக்கு ரேஸ் முடியுது.
நோகாம பல கோடி குடுக்க ஆள் இருந்தும், இந்த வயசுல இவ்வளவு கடுமையான ஒரு ரேஸ்க்கா
தன்னை தயார் படுத்துகிட்டு, பல இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா ஓடிக்கிட்டு இருக்கற அஜித் டீம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
09/01/2025
மிக விரைவில் இந்தியாவில் சொகுசு ஆட்டோ 👌👍
31/10/2024
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்💞
#தெய்வஅனுகூலம் #வழிபாடுகள்
*தீபாவளி நன்னாளில் நம்பிக்கையுணர்வு கொள்ளுங்கள்
எதிர்மறைகளை நீக்கும் சக்தி கொள்ளுங்கள்*
********************************************
சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கும் விசயங்கள் நடந்து முடியும் முன்பாகவே அல்லது நம் விருப்பப்படி முற்றிலும் சரியாக அமையாதபோது நம்பிக்கை குறைந்து மனச்சோர்வு ஏற்படுகிறது இவ்வாறு ஆவதற்கு அவசியமில்லை.
குழப்பமான சூழலிலும் நம்பிக்கையுடன் எப்போதும் நிலையாக இருங்கள்.இதனால் எதிர்மறையாக ஏதேனும் நடந்தாலும்
உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
நம்பிக்கையான மற்றும் ஆக்கப்பூர்வமான மனநிலையில் நிலைத்திருங்கள்.இதுவே உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இதற்காக அதிகாலையில் சிறிது நேரம் தியானம் மற்றும் பிரார்த்தனை செய்து ஆக்கப்பூர்வமான நம்பிக்கை நிறைந்த எண்ணங்களை மனதில் கொண்டு வாருங்கள்.
********************************************
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Tiruchirappalli