BHU TAMIL

BHU TAMIL

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BHU TAMIL, Education Website, Varanasi.

Photos from BHU TAMIL's post 14/12/2022

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மொழிகள் துறைக்கு வருகை தந்தார். இந்திய மொழிகள் துறையில் ஒரு பிரிவாக உள்ள தமிழ்ப் பிரிவு செயல்பாடுகள் குறித்தும், வளர்ச்சி குறித்தும் இந்திய மொழிகள் துறைத் தலைவர் பேராசிரியர் திவாகர் பிரதான், மராத்திய துறைத் தலைவர் பேராசிரியர் பிரமோத் ப௧்வான் பட்வால் , ஜெர்மன் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.கே.நடராசன், தமிழ்ப் பிரிவு உதவி பேராசிரியர்கள் முனைவர் ஜெகதீசன், முனைவர் விக்னேஷ் ஆனந்த் ஆகியோருடன் கலந்துரையாடினார். அண்மையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட திருக்குறள் நேபாளி மொழிபெயர்ப்புக்கு பேராசிரியர் திவாகர் பிரதான் சிறந்ததோர் முன்னுரை எழுதி இருந்தார் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பு அமைந்திருந்தது. இச்சந்திப்பின் நினைவாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பு நூலை பேராசிரியர் திவாகர் பிரதானுக்கும், மராத்தி திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை பேராசிரியர் பிரமோத் பக்வான் பட்வாலுக்கும், திருக்குறள் பற்றிய ஆய்வு நூலை பேராசிரியர் எம்.கே.நடராஜனுக்கும் வழங்கி சிறப்பித்தார்.

11/09/2022

#இசை_அஞ்சலி

Want your school to be the top-listed School/college in Varanasi?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Varanasi