Wide Angle
Wide Angle is a platform for all small scale and large scale industries to promote their Company/Pro
28/02/2022
'தேசத்துக்காக சண்டையிட்டே ஆகவேண்டும்' - போர்க்களத்தில் உக்ரைன் குத்துச்சண்டை சகோதரர்கள்.
கீவ்: ரஷ்யாவின் படையெடுப்பை சமாளிக்க, உக்ரைன் நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை வீரர்களும், சகோதரர்களுமாகிய கிளிட்ச்கோ சகோதரர்கள் இருவரும் ராணுவத்தில் இணைந்து போரிட்டு வருகின்றனர்.
உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்கவைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்தப் போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். தரை, வான் மற்றும் கடல் என அனைத்து மார்க்கத்திலும் ரஷ்யா தனது படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலை சமாளிக்க, உக்ரைன் அதிபர் தமது குடிமக்களுக்கு போராட அழைப்பு விடுத்த நிலையில், முன்னாள் குத்துச்சண்டை வீரர்கள் இருவர் ராணுவத்தில் இணைந்து போராடி வருகின்றனர். இருவரும் தற்போது தங்கள் சொந்த நாட்டைக் காக்க ராணுவப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் உக்ரைன் தலைநகர் கீவின் மேயராக இருந்து வரும் விட்டலி கிளிட்ச்கோ, போர்ச் சூழல் நெருங்கிய நிலையில், இந்த மாதத் தொடக்கத்திலேயே ஆயுதம் ஏந்த தயாராக இருப்பதாக அறிவித்தார்.
கிளிட்ச்கோ சகோதரர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர்கள். இருவருமே ஹால் ஆஃப் ஃபேம்களாக அறியப்படுபவர்கள். இதனிடையே, போர் தொடர்பாக விட்டலி கிளிட்ச்கோ பேசும்போது, "எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் தேசத்துக்காக சண்டையிட்டே ஆகவேண்டும். கீவ் நகரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதே இப்போது எங்களின் முன்னுரிமை. கீவ் நகரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவ வீரர்களாக மாறத் தயாராகி உள்ளனர். நான் என் நாட்டை நம்புகிறேன், என் மக்களை நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
50 வயதாகும் அவர் சொன்னபடியே இப்போது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து பாதுகாப்பு பணிகளைச் செய்துவருகிறார். போரின் முதல் நாள் இவர்கள் இருவரும் ஆயுதங்கள் ஏந்தியபடி பேட்டி அளித்துள்ளனர். அதில், "தேசத்தின் மீதான அன்பே இந்தப் பணியை செய்யத் தூண்டியது. உக்ரைனிய மக்கள் வலிமையானவர்கள். இறையாண்மை மற்றும் அமைதிக்காக ஏங்கும் மக்கள். ரஷ்ய மக்களை தங்கள் சகோதரர்களாகக் கருதும் மக்கள். நாங்கள் அடிப்படையில் இந்தப் போரை விரும்பவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த புத்தியில்லாத போரில் வெற்றியாளர்கள் இருக்கப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
25/02/2022
திரைப்படமாகிறது பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை:
மறைந்த நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் சினிமா ஒன்று உருவாகவுள்ளது. இதனை ‘ஃபோர்டு vs ஃபெராரி’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கவுள்ளார்.
ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஃபோர்டு vs ஃபெராரி’. போர்ட் நிறுவனத்துக்கும் ஃபெராரி நிறுவனத்துக்கும் இடையே நடந்த பனிப்போரை பற்றி பேசுகிற இப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. இதில் மேட் டேமன், கிறிஸ்டியன் பேல் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்துக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.
24/02/2022
23/02/2022
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் - ‘சுவிஸ் ரகசியங்கள்’ ஆவணத்தில் தகவல்.
சுவிட்ஸர்லாந்தில் உள்ள கிரிடிட் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி இருந்த உலகளாவிய அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள், போதை கடத்தல் தலைவர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெனரல்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் முஜாஹிதீன் அமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக கருதப்படுபவர்.
கிரிடிட் சுவிஸ் வங்கி மூலம் அவர் முஜாஹிதீன் அமைப்புக்கு நிதி உதவி வழங்கி இருப்பதாக ‘சுவிஸ் ரசியங்கள்’ கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் ஆக்கிரமித்தபோது, அப்படையை வெளியேற்ற ஆப் கானிஸ்தானில் முஜாஹிதீன் அமைப்புக்கு சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் நிதி உதவிவழங்கின. இந்த நிதி உதவியானது கிரிடிட் சுவிஸ் வங்கியில் உள்ள அக்தர் அப்துர் ரஹ்மான் கான் தொடர்புடைய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. அவர் அந்தப் பணத்தை முஜாஹிதீன் அமைப்பினருக்கு வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18,000-க்கு மேற்பட்ட கணக்கு
கிரிடிட் சுவிஸ் வங்கியில் 1940 முதல் 2010 வரையில் திறக்கப்பட்ட 18,000-க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் கணக்குகளில் மொத்தமாக 100 பில்லியன்டாலர் சொத்துகள் இருப்பதாகவும், அதில் பிரச்சினைக்குரிய பட்டியலில் உள்ள நபர்களின் கணக்குகளில் 8 பில்லியன் டாலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தக் கணக்குகளில் 600 கணக்குகள் 1400 பாகிஸ்தானியர்கள் தொடர்புடையது என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
வெளிநாடுகளில் பணம் பதுக்கி இருந்த நபர்களின் பட்டியல் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அதேபோல் 2017-ல்பாரடைஸ் பேப்பர்ஸ், 2016-ல் பனாமா பேப்பர்ஸ் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sathuvachari
Vellore
632009
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |
| Sunday | 9am - 5pm |