BATTI SWIMMING CLUB
Srilanka swimming coaches Association
29/10/2021
நீச்சல் குளத்தில் குளித்த பின் கண்கள் சிவப்பது குளோரினால் அல்ல, வேறு எதனால் தெரியுமா?
--------------------------------------------
# 🏊♂️ நீச்சல் குளத்தில் குளித்த பிறகு கண்கள் ஏன் சிவக்கின்றன என்று கேட்டால், நீரில் கலக்கப்படும் குளோரின் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இதை தான் நாமும் நம்பி வந்தோம். ஆனால், அது குளோரினால் அல்ல, மனிதர்களின் சிறுநீரால் என்று கூறி அதிர்ச்சியளிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
# 🏊♂️ நீரில் குளோரின் கலப்பதால், அதில் இருக்கும் கிருமிகள் அளிக்கப்பட்டு சரும எரிச்சல், காதுகளில் தொற்று, வயிற்றுப்போக்கு எல்லாம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பிறகு எப்படி கண்களில் மட்டும் எரிச்சல் ஏற்படுகிறது என்று பார்த்தல், நீச்சல் குளத்தில் குளிக்கும் சிலர் சிறுநீர் கழிப்பதால் தான் இது ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
# 🏊♂️ சிறுநீர் மட்டுமின்றி அதிகமானோர் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வையும் கூட கண்கள் சிவப்பதற்கும், எரிச்சல் ஏற்படுவதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. நீங்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது எனில், அந்த நீரில் சிறுநீர் அல்லது அளவுக்கு அதிகமாக வியர்வை கலந்துள்ளது என்று பொருள். எனவே, உடனடியாக அந்த நீரை மாற்ற வேண்டியது அவசியம்.
# 🏊♂️ வீட்டில் தனியாக நாம் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஏற்படுவதை விட, பொது நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களில் நாம் விளையாடும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போது தான் கண்ணெரிச்சல் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம், அங்கு வருவோர் அவர்களுக்கே தெரிந்தும், தெரியாமலும் சிறுநீர் கழிப்பது, மற்றும் கட்டுபடுத்த முடியாத வியர்வை கலப்பதால் தான்.
# 🏊♂️ அடுத்த முறை நீங்கள் தனியார் ஹோட்டல் அல்லது கேளிக்கை பூங்காக்களில் இது போன்ற சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தால், உடனே மேலாளரிடம் கூறி, நீச்சல் குளத்தின் நீரை மாற்ற அறிவுரைக்க மறக்க வேண்டாம்.
#🏊♂️குறிப்பு- நீச்சல் குளத்தில் உள்ள நீரின் தன்மைக்கேற்ப இக் கருத்து வேறுபடலாம்.
உங்கள் பிள்ளைகளும் இப்படி நீரில் நீந்த ஆசையா?...
# 4 வயது தொடங்கிவிட்டதா?...
🩺 💉 #உங்களுக்கு தெரியுமா?
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு, கைத்தொழில் போலவே, நீச்சல் அறிந்த ஒருவர், வாழ்வில் தன்னம்பிக்கையுடன் வாழமுடியும். தினமும் உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லாதவர்கள், அடிக்கடி நீச்சல் மேற்கொண்டாலே, உடற்பயிற்சி மூலம் அடையும் எல்லா உடல் நலனையும் பெற்று நலமுடன் வாழலாம். நீச்சல் அறிந்தவர்கள் மற்றவர்களைவிட, நெடுநாட்கள் நலமுடன் வாழ்கின்றனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உடற்பயிற்சிகளைவிட, சிறந்ததாகத் திகழ்கிறது, நீச்சல். உடலின் அனைத்து பாகங்களும் நீச்சலின் போது இயங்கி, உடலின் அனைத்து உறுப்புகளையும், வலுவாக்குகிறது. பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளைக்குறைக்கிறது.🏊🏽🏊🏽
உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரால் சூழ்ந்திருந்தாலும், அநேகம் பேருக்கு நீச்சல் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் நீச்சல் பயிற்சி இன்றியே, இருக்கிறார்கள். நீச்சல் என்பது நீர்நிலைகளில் நீந்த மட்டும்தான், என்ற ஒரு அறியாதமனநிலையும் காரணமாக இருக்கலாம், நீச்சல் அத்தியாவசியமான ஒன்று, உடல் நலம் காப்பதில் அது தனிப்பங்கு வகிக்கிறது, மேலும் நீச்சல் என்பது மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்புக்கலைக்கு நிகரானது, அந்தக்கலைகளைக் கற்றவர்கள் எப்படி, தன்னம்பிக்கையுடன் திகழ்வார்களோ அதுபோன்றே, நீச்சல் அறிந்தவர்களும் தன்னம்பிக்கை பெற்று திகழமுடியும் என்கிறார்கள், வல்லுனர்கள்.🏊🏽🏊🏽
பொதுவாக கிராமங்களில் உள்ள சிறுவர் சிறுமியர் எல்லோரும் நீச்சல் அறிந்திருப்பார்கள். அதற்கு காரணம், அநேக கிராமங்களில் ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் மற்றும் கிணறு போன்ற நீர்நிலைகள் மிகுந்து இருப்பதுதான். நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை, செயற்கை நீச்சல் குளங்களில் நகரத்து இளைஞர்கள் பயிற்சி பெற்றாலும், அவர்கள் வெளிப்புற நீர்நிலைகளில் இறங்கி, நீச்சலடிக்க அச்சம் கொள்கின்றனர் என்பதே உண்மை.
நகரங்களில் உள்ள நீச்சல் குளங்களில், பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுப்பார்கள், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள், நன்கு நீச்சல் அறிந்தவர்கள் துணையுடன் கற்றுக்கொள்ள, விரைவில் நீச்சல் நம் வசப்படும்.🏊🏽🏊🏽
Learning process of kids on flip turns
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Batticaloa
30000