Athiradi
presenter and news script editor at DD televion
10/01/2025
*வாழை இலையும் பாம்பும் – நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த ரகசியம் பற்றி தெரிந்து கொள்வோம்* .....
‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் வெகுபிரமாதம்’ என்று அனைத்து திருமணங்களிலும் வாழை இலையில், தமிழ் நாட்டில் விருந்து பரிமாறுகிறார்களே! அதற்கு ஏன் வாழைஇலையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று என்றாவது விருந்து சாப்பிடும் போது சிந்தித்திருக்கிறீர்களா?
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம், வாழை இலை விருந்துக்கு சமைத்த உணவில் ஏதாவது நஞ்சு இருந்தால், அதை வாழை இலை நீக்கிவிடும்.
நம்பமுடியவில்லையா?
இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள். அதன்அடிக் கிழங்கில் இருந்து சுரக்கும் நீரைத்தருவார்கள். அதற்காகத்தான் பெருவாரியாக மக்கள் கூடும் கோயில் திருவிழாக்கள், திருமணம், இன்னம் சொல்லப்போனால் சில பகுதியில் இறப்பு வீடுகளிலும் கூட முதலுதவி இருக்கவேண்டும் என்று தயாராக வாழையை மங்களகரம் என்று கூறி கட்டிவைப்பார்கள்.
😮😟😮😟😮
திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே! இவ்வாறு தொல் தமிழ் மக்கள் எதையும் அறிவியல் பூர்வமாகவே செய்திருக்கிறார்கள்.
வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் இல்லாமல், நமது முன்னோர் உணவு பரிமாறுவதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.
வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள DNA-வை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.
😮😟😮😟😮
சூடான சாப்பாட்டை வாழை இல
02/07/2024
காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்....
1. அம்மா அப்பாவைத் தவிர வேறு யாரும் நம்மீது கடைசிவரை சுயநலமில்லாத உண்மையான அன்பு வைத்திருப்பதில்லை.
2. மதிப்பெண் சான்றிதழும் பட்டப்படிப்பு சான்றிதழும் மட்டுமே நல்ல வேலையை அமைத்துக் தராது. ஜால்ரா அடிக்க வேண்டும்...
3. ஆசிரியர்கள் கூறியது திட்டியது அனைத்துமே நம் நன்மைக்கு மட்டுமே
4. பணம் இருந்தால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் தேடி வரும். நம் நல்லவரா கெட்டவரா என்பதையும் பணமே தீர்மானிக்கும்.
5. கடின உழைப்பு மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும்.
6. நாம் கீழே விழுந்தால் அதை பார்த்து சிரிக்க ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.
7. நம்மளை தவிர நமக்கு உதவி செய்ய வேறு யாருமே இல்லை. தன் கையே தனக்கு உதவி.
8. குணத்தை பார்க்காமல் அழகையும் பணத்தையும் பார்த்து காதல் செய்வது தவறு.
9. போனிலேயே மூழ்கி இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்று பெற்றோர் கூறியது சரியே.
10. சோம்பேறித்தனமே பல தீமைகளுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படை காரணம்.
இவை அனைத்தையுமே நாம் காலம் கடந்த பிறகே தெரிந்து கொள்கிறோம்.
22/06/2024
வெட்கப்பட வேண்டிய சமூகம்
ஒரு ஆண், தான் பார்க்கும் வருங்கால மனைவி பேரழகியாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டால் 'அது சரிதானே" என நம் சமூகம் உடனே ஆமோதிக்கும்.
ஒரு பெண், தான் பார்க்கும் வருங்கால கணவன் பேரழகனாக இருக்க வேண்டும் என கன்டிஷன் போட்டால் 'இது என்ன, ஆண்கள் எல்லோரும் அழகுதானே என உடனே நகைப்புடன் பார்க்கும்.
ஒரு ஆண், தொழில் பார்க்கும் ஒரு பெண்ணை தேடும் போது உடனே நம் சமூகம் "ஆம் சரிதானே, இக்காலத்தில் ஒருவர் சம்பாதித்து சமாளிக்க முடியாதே" என ஆதரிக்க வந்துவிடும்.
ஒரு பெண், தனக்கு வர இருக்கும் கணவன் நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டும் என கன்டிஷன் போட்டால் "இவள் பணத்தாசை பிடித்தவள்" என சமூகம் கதை கட்டிவிடும்.
படித்த ஒரு மாப்பிள்ளை, படித்த பெண்ணை தேடும் போது "சரிதானே, மணப்போருத்தம் இருக்க வேண்டும் தானே" என சமூகம் சரி காணும்.
படித்த ஒரு மணமகள், படித்த ஒரு ஆண் துணயை தேடும் போது, நம் சமூகம் "ஏனிந்த பிடிவாதம், படித்தவனை விட புரிந்து நடப்பவன் தான் சிறந்தவன்" என்று பாடம் நடத்த வந்துவிடும்.
ஒரு ஆண் தன்னை விட மிகவும் வயது குறைந்த பெண்ணை தேடும் போது " நல்ல விசயம், அவனை அவள் கையில் வைத்து பார்த்துக் கொள்வான்" என்று நம் சமூகம் கூறும்.
ஒரு பெண் தன்னை விட ஒரு சில மாதங்களால் வயது வித்தியாசமான ஆணை மணக்க முற்படும் போது "ச்சீ இது முறையல்ல" என நம் சமூகம் பேசத் தொடங்கும்.
படித்த ஒரு ஆண், படிக்காத ஒரு பெண்ணை மணக்க முற்படும் போது "விவரமில்லாத அப்பாவி" என்று சமூகம் கதை கூறும்.
படித்த ஒரு பெண், படிக்காத ஒரு ஆணை மணந்தால் "நல்ல காரியம். அவளுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்" என சமூகம் வரவேற்கும்.
வசதியற்ற ஒரு ஆண் பணக்கார பெண்ணை முடித்தால் "அவன் அதிர்ஷ்டசாலி, இப்படித்தான் இருக்க வேண்டும்" என சமூகம் கொண்டாடும்.
வசதியற்ற ஒரு பெண் பணக்கார ஆணை
முடித்தால் "நல்ல வேளை, அவளுக்கு வாழ்க்கை கிடைத்து விட்டது" என்று சமூகம் பேசும்.
ஒரு சாதாரண ஆண், ஒரு பேரழகியை முடித்திருந்தால் , "அவன் கொடுத்த வைத்தவன்" என சமூகம் பேசும்.
ஒரு சாதாரண பெண், ஒரு பேரழகனை முடித்திருந்தால் " அவன என்ன பாவம் செய்தானோ! இங்கே வந்து விழுந்துள்ளான்" என கிசுகிசுக்கும்.
நம் சமூகத்தின் நடுநிலையை பார்த்தீர்களா...!
✍
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |