Astro Bakeera

Astro Bakeera

Share

Astronomy content creator

22/05/2026

கோள்கள் மற்றும் குறுங்கோள்கள் — ஒவ்வொன்றும் எவ்வளவு வேறுபட்டவை என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்த ஒப்பீட்டில், நமது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் மற்றும் குறுங்கோள்கள்
📏 அளவு
🌀 சுழற்சி வேகம்
📐 அச்சுச் சாய்வு
இவை ஒப்பிடப்படுகின்றன.

பூமியைப் போலவே, சில கோள்கள் மிதமான சாய்வைக் கொண்டுள்ளன, 🪐 யுரேனஸ் கிட்டத்தட்ட பக்கவாட்டில் சுழல்கிறது

⚡ Jupiter மற்றும் Saturn மிகவும் வேகமாக சுழல்கிறன

Venus மட்டும் மிகவும் மெதுவாகவும், மற்றக்கோள்களுக்கு எதிர்திசையிலும் சுழல்கிறது!

✨ ஒவ்வொரு கோளும் தனித்துவமானது.
அவற்றின் சுழற்சி, சாய்வு, வடிவம் —
அனைத்தும் அவற்றின் உருவாக்கத்தின் வரலாற்றைக் கூறுகின்றன 🌌

🚀 Space is full of patterns, physics, and surprises.

22/05/2026

“Dance of Earth and Venus”

நமது பூமியும், வெள்ளியும்,☀️ சூரியனை சுற்றும் போது அவற்றின் சுற்றுப்பாதைகள் சேர்ந்து ஒரு அற்புதமான geometric pattern ஐ உருவாக்குகிறன

சுமார் 8 பூமி ஆண்டுகள் மற்றும் 13 வெள்ளி ஆண்டுகளுக்குப் பிறகு,
இரு கோள்களின் சார்பு நிலை (relative position) மீண்டும் அதே வழியில் சீரமைக்கப்படுகிறது.

✨ இந்த இயக்கத்தை trace செய்தால், ஒரு அழகான 5-point flower / symmetry pattern உருவாகும் 🌸

இதையே “Dance of Earth and Venus” என்று அழைக்கிறார்கள்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தற்செயலானவை அல்ல…
சில நேரங்களில் அது தூய .... கணிதம் மற்றும் பிரபஞ்ச நல்லிணக்கமாகும்.

22/05/2026

🌍✨ பூமியைப் போன்ற மற்றொரு உலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

விண்வெளி ஆய்வாளர்கள், பூமியிலிருந்து கிட்டத்தட்ட 40 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு பூமி அளவுள்ள புறக்கோள் (Earth-sized exoplanet)-ஐ கண்டுபிடித்துள்ளனர்

இந்தக்கோள் அதன் நட்சத்திரத்தின் Habitable Zone -ல் உள்ளது.

அதாவது, அதன் மேற்பரப்பில் திரவ நீர் (liquid water) இருக்கக்கூடிய சரியான தூரத்தில் அது சுழல்கிறது

இந்தக்கோள்,ஒரு stable மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட Red Dwarf Star-ஐ சுற்றி வருகிறது. இது ஒரு rocky planet என்பதால், அதில் உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலை இருக்கலாம் என்று scientists கருதுகிறார்கள்

இந்த exoplanet தற்போது நமது Solar System-க்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான உலகங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதன் atmosphere-ஐ James Webb Space Telescope ஆய்வு செய்து வருகிறது

உயிர் தொடர்பான chemical clues அல்லது வேற்றுக்கிரக உயிர்கள் (extraterrestrial life ) குறித்த சாத்தியங்கள் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்

நாம் மட்டும்தான் பிரபஞ்சத்தில் இருக்கிறோமா ? என்ற
அந்த கேள்விக்கான பதிலை தேடும் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது… 🚀

Follow

Photos from Astro Bakeera's post 21/05/2026

முதல் நிறுத்தம் – செவ்வாய்
அடுத்த இலக்கு – Psyche

May 15 அன்று, NASA-வின் Psyche விண்கலமானது , தனது அடுத்த இலக்கான உலோக வளம் நிறைந்த சிறுகோள் (metal-rich asteroid) Psyche-ஐ நோக்கி பயணிக்கும் வழியில், செவ்வாயை மிக அருகில் கடந்து சென்றது

செவ்வாய் இந்த விண்கலத்திர்ற்கு சுமார் 1000 mph உந்துதலைக் கொடுத்தது!

இதையே விஞ்ஞானிகள் Gravity Assist என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி எரிபொருள் அதிகமாக செலவிடாமல் விண்கலத்தை வேகப்படுத்துவது

அதுமட்டுமல்ல…
செவ்வாயைக் கடக்கும் போது Psyche விண்கலம் சில அற்புதமான புகைப்படங்களையும் எடுத்துள்ளது. இதோ அவை உங்கள் பார்வைக்கு

படங்கள் : நாசா

18/05/2026

இது நான் எடுத்த Orion Constellation இன் படம்

இதில் நீங்கள்
Orion Nebula மற்றும் Betelgeuse (திருவாதிரை நட்சத்திரம்)
என்பவற்றை காணலாம்.

பிரகாசமாக செம்மஞ்சள் நிறத்தில்பகம ஒளிரும் நட்சத்திரம்தான் Betelgeuse.

இந்த நட்சத்திரம் கிட்டத்தட்ட 650 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

அதாவது…
நாம் இப்போது பார்க்கும் இந்த ஒளி 650 வருடங்களுக்கு முன்பு அந்த நட்சத்திரத்திலிருந்து வெளியேறியது!

Betelgeuse என்பது இரவு வானில் நாம் பார்க்கும் மிக பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்று.

நமது சூரியனை விட சுமார் 1400 மடங்கு பெரியது!

இது நமது Solar System-ன் மையத்தில் இருந்தால், அதன் அளவு வியாழன் கிரகத்தையும் கூட தாண்டி இருக்கும்

ஆனால் இந்த நட்சத்திரம் தற்போது தனது வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளது.

இது தனது எரிபொருளை இழந்து கொண்டு இருப்பதால், ஒரு நாள் மிகப்பெரிய Supernova explosion ஆக வெடிக்கும். அந்த வெடிப்பு நடந்தால், பகலிலும் கூட இந்த நட்சத்திரத்தை பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்!

அது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை… அந்த நிகழ்வு ஏற்கனவே நடந்தும் இருக்கலாம் ஆனால் இன்னும் அது நமக்கு வந்து சேரவில்லை என்ற கருத்த்தும் உள்ளது

ஆனால் உலகம் முழுவதும் உள்ள astronomers இதை தொடர்ந்து அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

14/05/2026

🚨🌍 புதிய சிறுகோள் ( asteroid) ஒன்று பூமிக்கு மிக அருகில் வர இருக்கிறது!

விண்வெளி ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ள இந்த சிறுகோளுக்கு
2026 JH2 என்று பெயரிடப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் உள்ள வானாய்வகங்கள் (observatories) மற்றும் தானியங்கி வான் ஆய்வு அமைப்புகள் (automated sky survey systems) தொடர்ந்து விண்வெளியை scan செய்து கொண்டு இருக்கின்றன — காரணம், பூமிக்கு ஆபத்தான பொருட்கள் (objects) ஏதேனும் வருகிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக.

சில நாட்களுக்கு முன்,
Mount Lemmon Survey மற்றும் Farpoint Observatory உள்ளிட்ட வானாய்வகங்கள், பூமிக்கு அருகில் வரும் ஒரு புதிய பொருளைக் கண்டறிந்தன 👀

📊 ஆரம்ப கணக்குகள் படி,
இது ஒரு Apollo-class Near Earth Object (NEO)
அதாவது, பூமியின் orbit-க்கு மிகவும் அருகில் வரும் asteroid வகை.

---

😨 அப்படின்னா இது பூமியை மோதி விடுமா?

இல்லை!
இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி,
இந்த asteroid பூமியை மோதும் எந்த ஆபத்தும் இல்லை

ஆனால்…
🚀 விண்வெளி அளவில் இது மிகவும் நெருங்கிய சந்திப்பு “close encounter” ஆகும்!

---

📅 **May 18, 2026** அன்று
இந்த asteroid:

🌕 முதலில் நிலாவை மிக அருகில் கடக்கும்
பிறகு பூமிக்கு அருகில் வரும்

நல்ல telescope அல்லது சாதாரண வானியல் உபகரணங்கள் (modest astronomy equipment) இருந்தால்
இதைப்பார்க்க வாய்ப்பு இருக்கலாம்!

குறிப்பு : இந்தக் காணொளி உண்மையான அந்த சிறுகோளின் காணொளி அல்ல

12/05/2026

இது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள Utqiagvik
நகராகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 10/5/2026) இங்கு அதிகாலை 2.57 அளவில் சூரியன் உதித்தது. இதில் விசேஷம் என்னவென்றால், இன்னும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஆகஸ்ட் 02 வரை இந்த சூரியன் மறையாது. பூமியின் வட துருவத்தின் உச்சியில் இருப்பதால் இது நடக்கிறது

14/04/2026

Artemis II விண்கலம் பூமிக்குத் திரும்பியதும், US Navy டைவ் மருத்துவ குழு Orion கேப்சூலை திறந்த தருணம்.

11/04/2026

Welcome home 🎉

11/04/2026

Main Parachute deployed

Want your business to be the top-listed Photography Service in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Colombo