Ranjini's kitchen

Ranjini's kitchen

Share

Unkalukku thevayana mixture & vadam thevaipadal 0772792261 elakathuku thodarpu kolka..

22/06/2026

🍲 புளிக்கஞ்சி

🌿 பாரம்பரிய சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த கிராமத்து உணவு!

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 1 கப்
கத்தரிக்காய் – 100 கிராம்
வாழைக்காய் – 100 கிராம்
பயற்றங்காய் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 4 பல்
மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
மிளகு + சின்னச்சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கொவ்வை இலை – 20
முல்லை இலை – 20
பழப்புளி – சிறிய பாக்களவு
தேங்காய்ப்பால் – ½ தேங்காயிலிருந்து
உப்பு – தேவையான அளவு
👩‍🍳 செய்முறை:
1️⃣ புழுங்கல் அரிசியை நன்றாக வேகவைக்கவும்.
2️⃣ அதனுடன் கத்தரிக்காய், வாழைக்காய், பயற்றங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.
3️⃣ காய்கறிகள் வெந்ததும் கரைத்த புளியைச் சேர்த்து ஒரு கொதி வரவிடவும்.
4️⃣ பின்னர் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
5️⃣ மிளகு–சின்னச்சீரகத்தூளைச் சேர்க்கவும்.
6️⃣ இறுதியாக கொவ்வை இலை, முல்லை இலை சேர்த்து 2–3 நிமிடங்கள் மட்டும் கொதிக்கவிட்டு இறக்கவும்.
🥣 சூடாக பரிமாறினால், கிராமத்து மணமும் சுவையும் நிறைந்த ஆரோக்கியமான புளிக்கஞ்சி தயார்!

Want your business to be the top-listed Home Improvement Business in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


38 Sriramanathan Street Colombo 13
Colombo