Jaffna Hindu

Jaffna Hindu

Share

சுவாரசிய செய்திகள் உடனுக்குடன்

15/02/2026

வெறும் பேச்சு மாத்திரம் தான். செயலில் ஒன்றுமில்லை. சட்டத்தரணி ஒருவர் அவரது மனைவியுடன் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த இரண்டு கொலைகளுடன் தொடர்பு படுத்தி நாட்டில் நடக்கும் கொலை கலாசாரம் குறித்து பலர் அரசுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சட்டத்தரணிகள் சங்கம் கூட தனது அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறது.
ஆம் உண்மை தான் இதற்கான பொறுப்பை அரசு ஏற்க வேண்டியது தான். அதில் நானும் உடன்படுகிறேன்.

ஆனால் இந்த நாடு இந்தளாவது மீதம் இருக்கின்றது என்பதே பெரிய விடயம் தான்.
நாட்டின் பிரதம நீதியரசரை காதைப் பிடித்து வெளியேற்றியதும், தனக்கு ஏற்றாற் போல செக்கு மாட்டை கொண்டு வந்து அந்த பதவியை அலங்கரித்த நாடு இது.

ஜூலம்பிட்டிய அமரே, சொத்தி உபாலி, கோணவல சுனில் முதல் வம்பொட்டா, மதூஷ் வரை பாதாள உலகக்குழுக்கள் ஆட்டி படைத்த ஒரு இருண்ட காலம் கடந்த ஆண்டுவரை இந்த நாட்டில் இருந்தது.

பாதாள உலகக்குழுக்களை போல திட்டமிட்டு கிரிமினல் வேலைகளை பார்க்கும் பொலிஸ் மா அதிபர் மக்களை பாதுகாக்கும் முக்கிய பொலிஸ் திணைக்களத்தில் இருந்த நாடு இது.

குடு லன்ஷா முதல் துமிந்த, பாரத போன்றவர்கள் போதைப்பொருள் கொண்டு வந்து விற்றது மாத்திரமல்லாமல் அதற்காகவே வீதியில் ஒருவரை ஒருவர் கொலை செய்த அரசியல்வாதிகள் இருந்த ஒரு அரசியல் அமைப்பு கொண்ட நாடு இது.
முன்னாள் ஜனாதிபதிகள் கூட போதைப் பொருள் மன்னர்களை காப்பாற்ற ஹெலிகாப்டரில் உடனே வீட்டுக்கு சென்ற காலமும் இருந்தது.

‘ஐஸ்’, ‘குடு’ விற்கப்பட்ட அளவுக்கு, இளைஞர் தலைமுறையை போதைப்பொருளால் எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கக்கூடிய நிலைக்கு தள்ளிய நாடு இது.
சில கிராமங்களில் காப்பாற்ற ஒரு நல்ல இளைஞரையே கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நாடு நாஷாமாய் போய் இருந்தது.

சில பகுதிகள் இன்னுமே போதையில் இருந்து மீட்கப்படத பிரதேசங்கள்போலவே உள்ளன.
யார் இதில் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியாத நிலை.

இந்த அனைத்தும் பல தசாப்தங்களாக வளர்ந்ததே தவிர, திடீரென்று முளைத்ததல்ல.
ஜே.ஆர்., பிரேமதாச காலத்தில் சந்திகளில் கத்திக்குத்து நடந்த காலம் கடந்து இன்று கிலோ 500, 1000 அளவில் போதைப்பொருள் கொண்டு வரப்படும் நிலை வரை வளர்ந்து இருக்கும் துஷ்ட அமைப்பு இது.

சிறை பேருந்தை கூட வழியில் தடுத்து, அதிகாரிகள் முன்னிலையிலேயே கொலை செய்து விட்டு தப்பும் அளவுக்கு சங்கர் படங்கள் போல இருந்த கட்டமைப்பு.

இந்த எல்லாவற்றையும் ஒரு ஆண்டில் தலைகீழாக மாற்ற சொல்லி அது முடியவில்லை என்றால் “இவர்கள் பயனில்லை” என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

அரசு தயாராக இருந்தாலும், “இந்த இராஜ்ஜியம்” இன்னும் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
ஒவ்வொரு சிறையையும் சோதிக்கும்போது உள்ளே போன்கள், கஞ்சா, குடு கிடைப்பது அரசுப் பணியாளர்கள் இன்னும் மாற தயாராக இல்லை என்பதற்கே சான்று.

இந்த ஆண்டுக்குள் இந்த அரசு பல விடயங்கள் செய்யும் என நம்பலாம்.
சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு அந்த சுதந்திரம் அவசியம்.

ஆனால் நான் முன்பு கூறிய மற்ற விடயங்களுடன் சேர்த்து பார்க்கும்போது அந்த பாதாள உலகத்திற்கு இவை ஒன்றும் பொருட்டல்ல.
இந்த கூட்டம் விரும்புவது குழப்பமான நாட்டை. அவர்களுக்கு தேவையானது சட்டம் இல்லாத நாடு.

இந்த நாடு இன்னும் முழுமையாக சுத்தமானது அல்ல என்பதை வழக்கறிஞர்களும் உணர வேண்டும்.
அந்த அவநீதியின் கட்டமைப்புக்குள் சென்று சட்ட உதவி தரும் தருணத்திலேயே அதே கட்டமைப்புக்குள் இருக்கும் மற்ற குற்றவாளிகளும் இருப்பார்கள் என்பதை நாம் ஏற்க வேண்டும்.

அரசு தனது பக்கத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை அதிகபட்சமாக எடுத்து வருகிறது.

இந்த அரசைத் தவிர வேறு யாராலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியுமா என்று யோசித்து பாருங்கள்.

மீண்டும் பிரேமதாசா, விக்ரமசிங்க, ராஜபக்ஷ போன்றவர்களுடன் இது சரியாகும் என்று யாராவது நினைத்தால் அவர்களிடம் சொல்ல ஒன்றே ஒன்று இருக்கிறது சொரி டொட் கோம்.

இந்த அரசு அனைத்திற்கும் பொறுப்பு ஏற்று, செய்ய முடிந்தவற்றை அதிகபட்சமாக செய்கிறது.

பல தசாப்தங்களாக பாதாள உலக்குழுக்கள் ஆண்ட இந்த நாட்டை ஒரு ஆண்டில் முழுமையாக குணப்படுத்தலாம் என்று கூறி அரசியல் செய்யும் அளவுக்கு எதிர்கட்சி போன்று எம்மால் மலிந்த அரசியல் செய்ய முடியாது.

25/12/2025

🔴உடல் முழுவதும் வரும் நோய்களுக்கு எந்த மருத்துவர்? – முழு வழிகாட்டி🔴

பலருக்கும் நோய் ஏற்பட்டவுடன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை, யாரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பதைக் கண்டறிய முடியாததுதான். தலைவலி வந்தால் கண் மருத்துவரிடம், மார்பில் எரிச்சல் வந்தால் இதய மருத்துவரிடம் ஓடி ஆயிரக்கணக்கான ரூபாய்களை வீணாக்கிய அனுபவங்கள் பலருக்கும் உண்டு.

நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்ன, அதற்கான சரியான நிபுணர் யார் என்பதில் அடிப்படை அறிவு இல்லாததால் நேரமும் பணமும் இரண்டுமே இழக்கப்படுகிறது. எனவே, அறிகுறிகளுக்கு ஏற்ப சரியான மருத்துவரைத் தேர்வு செய்வது மிக முக்கியம்.

🟢 முதலில் நினைவில் கொள்ள வேண்டியது

சிறிய காய்ச்சல், சளி, உடல் வலி போன்ற ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், நேரடியாக நிபுணர் மருத்துவரிடம் ஓடுவது அவசியமில்லை.

👉 முதலில் பொது மருத்துவர் (General Practitioner / Family Doctor) அல்லது 👉 அரசு மருத்துவமனையின் OPD-யை அணுக வேண்டும்.

அவர்கள் தேவையெனில் மட்டுமே சரியான நிபுணரிடம் உங்களை பரிந்துரை செய்வார்கள். இதனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம்.

🧑‍⚕️ அறிகுறிகளுக்கு ஏற்ப நிபுணர் மருத்துவர்கள் – முழுப் பட்டியல்

1️⃣ இதய நோய் நிபுணர் (Cardiologist) – மார்புவலி, மூச்சுத்திணறல், உயர் இரத்த அழுத்தம் (மருந்து சிகிச்சை)

2️⃣ இதய & மார்பு அறுவை சிகிச்சை மருத்துவர் (Cardiothoracic Surgeon) – பைபாஸ், வால்வு மாற்று அறுவை சிகிச்சைகள்

3️⃣ பொது மருத்துவ நிபுணர் (General Physician) – காய்ச்சல், நீரிழிவு, கொலஸ்ட்ரால், உள் உறுப்புகள் தொடர்பான நோய்கள்

4️⃣ பொது அறுவை சிகிச்சை மருத்துவர் (General Surgeon) – அப்பெண்டிசைட்டிஸ், ஹெர்னியா, வயிறு அறுவை சிகிச்சைகள்

5️⃣ ஹார்மோன் நிபுணர் (Endocrinologist) – கட்டுப்படாத நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள்

6️⃣ நரம்பியல் நிபுணர் (Neurologist) – தலைவலி, ஸ்ட்ரோக், வலிப்பு, நினைவழப்பு (மருந்து சிகிச்சை)

7️⃣ நரம்பு அறுவை சிகிச்சை மருத்துவர் (Neurosurgeon) – மூளை, முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள்

8️⃣ எலும்பு & மூட்டு நிபுணர் (Orthopedic Surgeon) – எலும்பு முறிவு, முதுகு வலி, மூட்டு பிரச்சினைகள்

9️⃣ மூத்திர & ஆண் நல நிபுணர் (Urologist) – சிறுநீரக கல், சிறுநீர் பிரச்சினைகள், புரோஸ்டேட்

🔟 சிறுநீரக நிபுணர் (Nephrologist) – சிறுநீரக செயலிழப்பு, டயாலிசிஸ்

1️⃣1️⃣ வயிறு & குடல் நிபுணர் (Gastroenterologist) – காஸ்ட்ரைட்டிஸ், கல்லீரல், செரிமான கோளாறுகள்

1️⃣2️⃣ மூச்சுத் திணறல் நிபுணர் (Respiratory Physician) – ஆஸ்துமா, நிமோனியா, காசநோய்

1️⃣3️⃣ குழந்தைகள் நிபுணர் (Paediatrician) – பிறந்த குழந்தை முதல் 16–18 வயது வரை

1️⃣4️⃣ மகப்பேறு & மகளிர் நிபுணர் (Gynecologist / VOG) – கர்ப்பம், மாதவிடாய் கோளாறுகள்

1️⃣5️⃣ கண் மருத்துவர் (Ophthalmologist) – கண் பார்வை, கண் நோய்கள், cataract

1️⃣6️⃣ காது–மூக்கு–தொண்டை நிபுணர் (ENT Surgeon) – கேட்கும் திறன், சைனஸ், குரல் பிரச்சினைகள்

1️⃣7️⃣ தோல் நிபுணர் (Dermatologist) – சிரங்கு, முகப்பரு, முடி உதிர்தல், தோல் நோய்கள்

1️⃣8️⃣ பாலியல் நோய் நிபுணர் (Venereologist) – STD / பாலியல் நோய்கள்

1️⃣9️⃣ மூட்டு நோய் நிபுணர் (Rheumatologist) – Arthritis, Autoimmune நோய்கள்

2️⃣0️⃣ மனநல மருத்துவர் (Psychiatrist) – மன அழுத்தம், தூக்கமின்மை, மனஅழுத்த நோய்கள்

2️⃣1️⃣ புற்றுநோய் நிபுணர் (Oncologist) – கீமோதெரபி, ரேடியோதெரபி

2️⃣2️⃣ புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் (Onco Surgeon) – புற்று கட்டி அகற்றல்

2️⃣3️⃣ இரத்த நோய் நிபுணர் (Hematologist) – அனீமியா, தலசீமியா, லியூகேமியா

2️⃣4️⃣ இரத்த நாள அறுவை நிபுணர் (Vascular Surgeon) – Varicose veins, diabetic foot

2️⃣5️⃣ வாய் & முக அறுவை மருத்துவர் (OMF Surgeon) – முக எலும்பு, வாய்ப்புற்று

2️⃣6️⃣ பல் மருத்துவர் (Dental Surgeon) – பல் அகற்றல், நிரப்புதல்

2️⃣7️⃣ பல் ஒழுங்கு நிபுணர் (Orthodontist) – Braces, பல் சீரமைப்பு

2️⃣8️⃣ பிளாஸ்டிக் சர்ஜன் (Plastic Surgeon) – தீக்காயம், அழகுக்காக அறுவை சிகிச்சை

2️⃣9️⃣ போஷண நிபுணர் (Nutritionist) – உடல் எடை, உணவுக் குறைபாடுகள்

3️⃣0️⃣ விளையாட்டு மருத்துவ நிபுணர் (Sports Medicine Doctor) – விளையாட்டு காயங்கள்

3️⃣1️⃣ மூத்தோர் நிபுணர் (Geriatrician) – வயோதிபர்களின் சிக்கலான நோய்கள்

3️⃣2️⃣ அலர்ஜி & நோய் எதிர்ப்பு நிபுணர் (Allergist / Immunologist) – அலர்ஜி, ஆஸ்துமா

3️⃣3️⃣ வலி மேலாண்மை நிபுணர் (Pain Management Specialist) – நீண்டகால வலி, புற்றுநோய் வலி

⚠️ முக்கிய அறிவுரை

❌ பிறர் சொல்வதை கேட்டு சுயமாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். ❌ மருந்தகத்தில் நினைத்தபடி மாத்திரைகள் வாங்க வேண்டாம்.

✅ சரியான தகுதி பெற்ற மருத்துவரை அணுகுங்கள்.

📞 சந்தேகம் இருந்தால் 1990 – சுவசரிய அல்லது மருத்துவமனை தகவல் மையத்தை அணுகுங்கள்.

👉 சரியான மருத்துவரைத் தேர்வு செய்வதே 👉 விரைவான குணமடைவிற்கும் 👉 தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதற்கும் சிறந்த வழி.

22/09/2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

அனுர குமார திசாநாயக்க - 7017058 ( 50.30%)

சஜித் பிரேமதாச - 5083968 (36.44%)

ரணில் விக்ரமசிங்க - 1182234 (8.47%)

நாமல் ராஜபக்‌ஷ - 406137 (2.91%)

மற்றையவை - 260464 (1.86%)

மொத்த வாக்களிப்பு - 1 39 49861

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo