Zhiyan

Zhiyan

Share

From the mysteries of the cosmos to the latest in scientific discoveries, let’s expand our horizons together. ✨

09/11/2024

நவம்பர், டிசம்பர் மாதங்கள்ல மாத்திரம் வானத்துல காட்சி தருகிற ஒன்று இருக்கு. அது மூன்று நட்சத்திரங்களினால் ஆன ஒரு முக்கோண வடிவம். அத Summer Triangle னு சொல்லுவாங்க.

இந்த முக்கோண வடிவத்தை உருவாக்குற மூன்று நட்சத்திரங்களும் மூன்று வெவ்வேறான விண்மீன் தொகுதிக்குரியவை. Lyra Constellation ஓட Vega உம், Cygnus Constellation ஓட Deneb உம், Aquila Constellation ஓட Altair உம் சேர்ந்து உருவாக்குகின்ற வடிவமே இந்த Summer Triangle.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளா மக்கள் காலநிலை மாற்றங்களை அறிந்து கொள்ளவும், தங்களோட வாழ்வாதாரத்த திட்டமிடவும் கண்காணித்த முக்கியமான ஒரு வடிவம் இந்த Summer Triangle.

இத பார்க்க விரும்பினா நள்ளிரவு நேரத்துல உச்சி வானத்துல Aquila Constellation இனை இலகுவாக அவதானிக்கலாம். அது பருந்தோட வடிவத்துல இருக்கும். அத அடையாளம் கண்டா இந்த முக்கோணத்தையும் இலகுவா அடையாளம் காணலாம்.

இதற்கு பின்னால்தான் Milky Way Galaxy பரந்து விரிந்திருக்கிறது. பொருத்தமான கெமரா/ தொலைநோக்கி இருந்தா Milky Way ஓட சேர்த்து இந்த Summer Triangle அயும் பார்த்து ரசிக்கலாம்.

#ஷியான்_யாக்கூப்

04/11/2024

பூமி மேற்குல இருந்து கிழக்கு நோக்கி சுத்துறதால நமக்கு சூரியனும் சந்திரனும் கிழக்குல உதிச்சு மேற்குல மறையுறது போல ஒரு தோற்றத்த தருது. ஆனா அது எல்லா இடங்களுக்கும் பொதுவானதொரு நிகழ்வு இல்ல.

சுழற்சி வேகம், சுழற்சிக் கோணம், சுற்றுகை வேகம், சுற்றி வரும் பாதை இது நான்கையும் வைத்து இயல்பியலின் துணையுடன் பிரபஞ்சம் நிகழ்த்தி வைத்திருக்கும் மாயாஜாலங்கள் ஒரு தொகை இருக்கின்றன.

நாம புதன் கோள்ல இருக்கம்னு வைங்க. அங்க ஒரு நாள் எப்படி ஆரம்பிக்கும்னா சூரியன் மிகப் பெரிய அளவுல கிழக்குப் பக்கமா உதிச்சு உச்சிக்கு வந்து உச்சில இருக்கும் போது தூரத்துக்குப் போய் சிறிதாகி, திரும்பி பெரிதாகி வந்து மேற்குப் பக்கமா மறையும்.

சில நாட்கள்ல கிழக்குல உதித்து உடனே கிழக்குலேயே மறைந்துடும். திரும்பயும் கிழக்குல உதித்து மேற்குல மறையும். திரும்ப மேற்குல உதித்து உடனே மேற்கிலேயே மறையும். தலை குழம்புற போல இருக்குல? இத Double Sunrises, Sunsets னு சொல்லுவாங்க.

இதுவே வெள்ளிக் கோள்னு வைங்க. விநோதமா சூரியன் மேற்குல உதிச்சு கிழக்குல மறையும். அதையே வெள்ளி ஒரு நாளைக்கு ரெண்டு நிகழ்த்தும். புரியுதா? அதாவது வெள்ளில ஒரு நாளைக்கு சூரியன் இரண்டு தடவை உதிச்சு மறையும்.

இத்தனைக்கும் இந்த இரண்டு கோளுக்கும் நிலவுகள் ஏதுமே இல்ல. இருந்திருந்தா இந்த இடியப்பச் சிக்கல்ல இன்னும் அட்டகாசமா இருந்திருக்கும். இப்போ செவ்வாய் கோள பார்க்கலாம்.

செவ்வாய் இன்னும் சுவாரசியமானது. சூரியன் உதிக்குறதும் மறையுறதும் பூமியப் போலவை நிகழும். ஆனா சூரியனோட நிறம் நீலமா இருக்கும். செவ்வாய்க்கு இரண்டு நிலவுகள் இருக்கு. கதையே இங்கதான் ஆரம்பிக்குது.

செவ்வாயோட சிறிய நிலவு கிழக்குல உதித்து மேற்குல மறையும். ஆனா பெரிய நிலவு இதுக்கு மாற்றமா மேற்குல உதித்து கிழக்குல மறையும். ஆச்சர்யம் என்னனா இரண்டுமே ஒரே திசையில தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

இது எப்டி சாத்தியம்? சாத்தியம். ஏன்னா செவ்வாய் இந்த விநோதத்த நிகழ்த்த இயல்பியலோட ரொம்ப சாதாரணமான யுக்திய பாவித்திருக்கு. அதுவெல்லாம் என்னனு நான் இங்க எழுதல. வெறுமனே நிகழ்வுகள மட்டுமே எழுதுறன்.

வியாழன் கோளுக்கு வந்தாலும் ஒரு விநோதம் இருக்கு. சூரியன் கிழக்குல உதிச்சு மேற்குல மறையும்.
ஆனா வியாழனுக்கு 95 நிலவுகள் இருக்கு. நீங்க திரும்புற திசையெல்லாம் நிலவுகள் நிறைந்திருக்கும்.

இங்க 91 நிலவுகள் கிழக்குல உதித்து மேற்குல மறையும். ஆனா 4 நிலவுகள் மேற்குல உதித்து கிழக்குல மறையும். இந்த நிலவுகள் எதிர் எதிர் திசையில பயணித்து நெருங்குறதயும், விலகுறதயும் பார்க்க எவ்வளவு அழகா இருக்கும். வியாழனோட வானம் தினசரி இந்த வேடிக்கைய நிகழ்த்திட்டே இருக்கும்.

சனிக்கோளுக்கு வந்தா சூரியன் கிழக்குல உதித்து மேற்குல மறையும். அது போலவேதான் நிலவுகளும். ஆனா சனிக் கோளோட விசேஷம் என்னனா அதனோட வானத்துல 140 நிலவுகள் நிலவுகள் உலா வரும். சனிக் கோள்ல யாராவது கவிஞர்கள் வாழ்ந்தா அவங்களோட நிலமைய நெனச்சுப் பாருங்க.

அதுக்கும் மேலதிகமா அதனோட வளையம் ஒரு அழகக் கொடுக்கும். வானத்துல எப்பவுமே வானவில் இருக்குறது போல சனியோட வானம் அதனோட வளையத்த காட்சிப் படுத்திட்டே இருக்கும்.

அடுத்தது யுரேனஸ். யுரேனஸ் மட்டும் செங்குத்தா சாய்ந்துதான் சுழலும். இதனால அதனோட 28 நிலவுகள், நட்சத்திரங்கள் எல்லாமே கிழக்குல இருந்து மேற்குக்கு நகர சூரியன் மட்டும் புது அவதாரம் எடுக்கும்.யுரேனஸோட மத்தில இருந்து பார்க்கும் போது சூரியன் ஒவ்வொரு நாளும் உதித்து மறையும்.

ஆனா யுரேனஸோட முனைகள்ல இருந்து பார்க்கும் போது சூரியன் எப்பவுமே வானத்துல வட்டமா சுற்றிய படியே இருக்கும். சூரியன் அதனோட வானத்துல காலத்திக்கும் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும்.

நெப்டியூன்ல சூரியன், நிலவுகள்னு எல்லாமே கிழக்குல உதிச்சு மேற்குல மறையும். ஆனா அதனோட மிகப் பெரிய நிலவு மட்டும் இதுக்கு விதிவிலக்கு. அது மட்டும் மேற்குல உதிச்சு கிழக்குல மறையும்.

இந்த விநோதங்களையெல்லாம் பூமியோட ஒப்பிட்டா இருக்குறத்துலயே சுவாரசியமில்லாத ஒரு காட்சிய நம்மளோட வானம் மட்டும்தான் நிகழ்த்திக் கொண்டிருக்குனு எனக்கு அடிக்கடி தோணும். ஆனா இருக்குற காட்சிகளோட அழக விபரிக்கவே எங்கிட்ட வார்த்தைகள் போதுமாயிருக்காது.

சனிக்கோளோட மிகப் பெரிய நிலவு டைடன். ஒரு சின்ன கற்பனைக்கு உங்கள நான் கண்கள கட்டி அங்க கூட்டிட்டு போறன். கண் கட்ட அவித்ததுமே நீங்க பார்க்கப் போகிற காட்சி நான் பதிவேற்றியிருக்குற காட்சிதான். இத நீங்க என்ன வார்த்தைகள கொண்டு வர்ணிப்பிங்க?

#ஷியான்_யாக்கூப்

27/10/2024

நேற்றிரவு பைக்ல போகும் போது கண்ணுக்குள்ள பூச்சி விழுந்துட்டு. "நல்ல காலம் பூச்சியெல்லாம் சின்னதா இருக்குற. நாலு/அஞ்சு இஞ்சுக்கு இருந்தா நம்மளோட நிலமை என்னாகும்"னு சொல்லி சிரிச்சாங்க. நான் "அதுக்கு நீ டைனோசருக்கு தான் தாங்க்ஸ் பண்ணணும்"னு சொன்னதும் "ஏன்"னுஆச்சர்யமா கேட்டாங்க.

நீங்க வாகனங்கள்ல போகும் போதும் வின்ட் ஷீல்ட்ல நிறைய பூச்சிங்க வந்து விழுந்திருக்கும். சில பேருக்கு அது எரிச்சலாவும் இருக்கும். ஆனா உண்மைக்கும் நாம இந்த பூச்சிகள நினைத்து சந்தோசப்படனும். ஏன்னா பூச்சிகளோட வரலாறு ரொம்பவே டெரரானது.

200 மில்லியன் வருசங்களுக்கு முதல்ல பூச்சி இனமே ரொம்ப பெரியதா இருந்துச்சு. சாதாரணமா நம்ம வாசல்ல பறந்து திரியுற தும்பி இருக்குதானே? அதனோட சொந்தக்கார இனம் ஒன்னு அந்தக் காலத்துல வாழ்ந்துச்சு. Meganeuraனு பேரு.

அந்த இனத்தோட இறக்கைகள் மட்டும் இரண்டு அடி நீளமிருக்குமாம். ஆக பெரிய தீக்கோழி அளவுல இதுங்க இடையெல்லாம் பறந்து திரிஞ்சிருக்கு. இதே அளவுல இப்போ இருந்திருந்தா நாம கவச வாகனங்கள்ல தான் போகவேண்டி வந்திருக்கும்.

இன்னொரு பயங்கரமான விசயம் என்னனா நம்மள ரொம்பவே தொந்தரவு பண்ணுற கரப்பான் அப்போ அரை அடி அளவுல இருந்திருக்கு. பாத்ரூம்ல ரெண்டு கரப்பான் வந்தா பொண்ணுங்க டெட் பொடியத்தான் மீட்க வேண்டி வந்திருக்கும்.

அந்த காலகட்டத்துல இதெல்லாம் ஏன் இவ்ளோ பெருசா இருந்துச்சுனா அதுக்கு காரணம் வளிமண்டலம். அப்போ வளி ரொம்ப ஈரமானதா, மிதமான சூடானதா இருந்ததோட ஒட்சிசனோட அளவு 35% இருந்தது. இதனால பூச்சிகளோட வாயுப் பரிமாற்றம் அதிகரிச்சு அதுங்க ரொம்ப பெரிதா வளர சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த பெரிய அளவு பூச்சிகள் எங்க போனிச்சுனு ஒரு கேள்வி வரலாம். அதுக்கு முதலாவது காரணம் டைனோசர்கள். 200 மில்லியன் வருசங்களுக்கு முதல்தான் டைனோசர்கள் தரை விலங்குகளா இருந்து பறக்கும் உயிரிணங்களா பரிமாணம் அடைந்தன.

இந்த மாற்றத்தால பாதிக்கப்பட்டது யாருனா பூச்சிகள்தான். பெரிய அளவுல இருந்த பூச்சிகளால பறக்கும் டைனோசர்களோட போட்டி போடவோ, அவற்றுக்கிட்ட இருந்து தப்பிக்கவோ முடியாம போனதால பெரும்பாலான பூச்சி இனங்கள் அழிந்து போனதா அறிவியல் சொல்லுது.

இரண்டாவது காரணம் வளிமண்டல ஒட்சிசன் அளவு குறைவடைந்தது. இதனால பூச்சிகளோட வாயுப் பரிமாற்றம் குறைவடைந்ததால பெரிய அளவிலான பூச்சிகளால தாக்குப்பிடித்து வாழ முடியாது போனிச்சு. ஆனா இதற்கு மாற்றமா டைனோசர்கள் வெற்றிகரமா பறவைகளா கூர்ப்படைந்திச்சு.

Next time you spot an insect, think about how big their ancestors used to be.

#ஷியான்_யாக்கூப்

25/10/2024

வேட்டையாடிகளாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த மனித இனம் பல்லாயிரம் வருடங்களுக்கு பிறகு விவசாயத்தை கண்டடைந்தது. ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு உருவான விவசாயம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் உலகம் முழுவதும் பரவியிருந்தது.

மனிதன் வேட்டையாடியாக இருந்த போது அவனிடம் எதிர்காலம் பற்றிய எந்த அச்சங்களும் இருக்கவில்லை. நாடோடியான அவனால் விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கு செல்ல முடிந்தது. ஆனால் அவன் விவசாயி வேடமணிந்த போது நிலமை தலைகீழாக மாறியது.

மண்ணில் விதைகளை விதைத்த பின்னர் அவனில் எதிர்காலம் பற்றிய பயம் குடிகொள்ளத் தொடங்கியது. அறுவடை வரைக்கும் வெள்ளத்திற்காகவும், வரட்சிக்காகவும் பயந்த படி அவன் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனால் நாடோடியாக பிடித்த படி வாழ முடியாமல் போனது. அவன் தன்னுடைய பயிர்களுக்கு அருகிலேயே இரவும் பகலும் காவல் காக்க வேண்டியிருந்தது. இதனால் ஓரிடத்தில் நிரந்தரமாக குடிசையமைத்து வாழ்நாள் முழுக்க அவன் தங்கும் நிலை வந்தது.

இப்படித்தான் குடியேற்றங்களை மனித இனம் நிறுவிக் கொண்டது. மொசப்பத்தேமியாவிலும், எகிப்திலும் உருவான கிராமங்களுக்கு பின்னால் ஆரம்பகால விவசாயியின் இத்தனை அவலங்கள் இருந்தன.

போதுமான மழை பொழியவும், போதுமான விளைச்சல் கிடைக்கவும் அவன் இயற்கையை வழிபட ஆரம்பித்ததாக அறிவியல் சொல்கிறது. இதுவே கடவுள் நம்பிக்கை பிறந்த இடம் என அது எம்மோடு வாதிடுகிறது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள்தான் மால்டாவில் முதலாவது கோயிலையும், வானத்தை ஆராய்வதற்காக வட்டக்கல்லையும் (Stonehenge) கட்டியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இதற்குப் பின்னர்தான் இயற்கை நிகழ்வுகளை மனிதர்கள் முதன் முதலாக கடவுள் நம்பிக்கையுடன் தொடர்புபடுத்தலானார்கள். இந்தக் காலப்பகுதியில்தான் அட்லஸ் என்றொரு வால்வெள்ளி பூமிக்கு காட்சி தந்திருக்கும்.

வட்டக்கல்லடியில் (Stonehenge) கூடியிருந்த மக்கள் இதை பற்றி பேசியிருப்பார்கள். ஏதோவொரு கடவுளின் பெயரால் வந்த எச்சரிக்கையென அவர்கள் பயந்திருக்கவும் கூடும். அதற்காக விலங்குகளையோ/ கன்னிப்பெண்களையோ அவர்கள் பழிகொடுத்திருக்கவும் கூடும்.

இந்த கதைகளை பற்றி எதையும் அறியாத அட்லஸ் சூரியனை தன்னோட பாதையில ஒரு முறை சுற்றி வந்திருக்கும். அதற்கு முதல் எத்தனை தடவை அது சூரியனை சுற்றி வந்ததென்று தெரியாது. ஆனா அப்போது சுற்றியதுதான் அதனுடைய தன்னிறைவான கடைசி சுற்றுகை.

2020 ஆம் ஆண்டு அட்லஸ் இன்னொரு தடவை சுற்றுவதற்காக சூரிய தொகுதிக்குள்ள நுழைந்த போது பல பகுதிகளாக உடைந்து போனது. அதில் எஞ்சியிருக்கும் மீதி விடாப்பிடியாக தன் பாதையில் வந்து கொண்டிருக்கிறது.

இம்முறை அட்லஸ் சூரியன சுற்றி முடிக்குமா என்பது கூட தெரியாது. அதற்குள் அது உடைந்துவிடவும் கூடும். அதிர்ஷ்டவசமாக அது சுற்றி முடித்தாலும் கூட இனி எப்போதும் அது சூரியனிடம் மீளப் போவதேயில்லை.

It's getting ready for its last performance. 💔

இதோ!! ஐயாயிரம் வருடங்கள் கழித்து அட்லஸ் மீண்டுமொரு முறை காட்சி தர வருகிறது. தன்னுடைய இறுதிப் பயணத்தில் பிரியாவிடை பெற்றுப் போக வருகிறது. கடைசியாக வந்த போது அந்த விவசாயிகள் அதை குறித்து வைத்தார்களா என்று தெரியாது.

ஆனால் இம்முறை அட்லஸ் வரலாற்றில் ஓர் அங்கம் ஆகப் போகிறது. எதிர்கால மனித குலம் வால்வெள்ளிகளை பற்றி கற்கும் போது அவர்களால் நிச்சயம் அட்லஸின் பெயரை தவிர்க்க முடியாது.

28ஆம் திகதியிலிருந்து சில நாட்களுக்கு சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மேற்கு வானில் உடைந்து போன தன் சிறிய தலையுடனும், நீளமான வாலுடனும் அட்லஸ் கடைசியாக ஒரு முறை காட்சி தரும்.

Brace yourself for the goodbye party! 🌠

#ஷியான்_யாக்கூப்

04/10/2024

இன்றைக்கு பூமிக்கு மேலே பல இலட்சக்கணக்கான செய்மதிகள் சுற்றி வருகின்றன. தொடர்பாடல், காலநிலை, ஆய்வு, பாதுகாப்பு போன்ற பல காரணங்களுக்காக அவை விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கு பூமிக்கு மேலேயிருக்கும் வெளியில் விண்வெளிக் குப்பைகளை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பு செய்பவை செய்மதிகள்தான். இது தவிர வானியலாளர்களுக்கு ஆகப்பெரிய தலைவலியாகவும் இந்த செய்மதிகள் மாறியிருக்கின்றன.

இந்த இலட்சக்கணக்கான செய்மதிகளுக்கெல்லாம் ஹெட் மாஸ்டர் ஒன்று இருக்கிறது. அதுதான் சோவியத் ரஷ்யா முதன்முதலில் விண்ணுக்கு ஏவிய Sputnik 1 விண்கலம். ஒரு Ballistic Missile ஒன்றில் வைத்து முதல் செய்மதியை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பிய போது அமேரிக்கா திகைத்துப் போயிருந்தது.

நமது தலைகளுக்கு மேலே ரஷ்யாவினால் சுற்ற முடிகின்றதென்றால் எந்தக் கணமும் நம் மீது குண்டு போட்டு நம்மை கொல்ல முடியுமென்று அமேரிக்க மக்கள் மனதில் பயம் ஆட்கொண்டிருந்தது. அன்றைய பனிப்போரில் அமேரிக்காவை பல வருடங்களுக்கு லெப்டில் டீல் பண்ணி சாதித்து வந்தது ரஷ்யா.

இயற்கையை தாண்டி மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் விண்ணுக்குச் சென்றதும், பூமியை சுற்றி வந்ததும் அதுவே முதன்முறை. Sputnik 1 எழுப்பிய ரேடியோ சமிக்ஞைகளை உலகம் எங்கிலும் இருந்த பல மக்களால் தங்களுடைய ரேடியோ வாங்கிகளின் மூலம் கேட்க முடிந்தது.

பூமியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதையில் 1400 தடவைகள் பூமியை சுற்றிய Sputnik 1 சரியாக மூன்று மாதங்களின் பின்னர் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எரிந்து போனது. எப்போது Sputnik 1 ஏவப்பட்டதோ அன்றிலிருந்து ஏழு நாட்களை சர்வதேச விண்வெளி வாரமாக ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர்.

அன்று ஏவப்பட்ட ஒரு கருவி இன்று வானியலில் பல்லாயிரக்கணக்கான மர்மங்களை நமக்கு விலக்கித் தந்திருக்கிறது, பிரபஞ்சத்தை பற்றிய தங்களுடைய அறிவினை மனித இனம் வளர்த்துக் கொள்வதற்கும், வேற்றுலகங்களில் இறங்கி வாழ்வதற்கான வழிகளை தேடுவதற்கும் அடித்தளமிட்டது Sputnik 1 தான்.

1957 ஆம் ஆண்டு இதே நாளில் Sputnik 1 கஸகஸ்தானின் ரஷ்யாவின் இராணுவ ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இது மனிதனுடைய மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று. விண்வெளி ஆய்வினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய Sputnik 1 இனை கொண்டாடுவோம்.

Thank you, Sputnik 1, for paving the way for space exploration!

- Zhiyan Yakoob

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Colombo