Shirdi Sai baba

Shirdi Sai baba

Share

Om sairam Shri Sai Baba's life and teachings are well documented in Sai Satcharitra by Shri Hemadpant in Marathi which was personally blessed by Shri Sai Baba.

Photos from Siridy Sai Baba Tamil Blessing's post 15/04/2018
Photos 11/07/2017

அன்புக் குழந்தையே!
பொறுக்க முடியாத அவதியும் அதையொட்டி உன் மனதில் எழுகின்ற கோணல் சிந்தனைகளும் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கும் எண்ணமும் என்னை மனவருத்தமடைய செய்கின்றன. உனது துக்க குப்பைகளை மூட்டைகட்டி தூர போட்டுவிட்டு எனது பாதங்களை பற்றிக்கொள். நான் அனைவருக்கும் கருணைமயமான அன்னை என்பதையும் ஒரே ஒரு முறை கூவி அழைத்தாலும் ஓடி வந்து அணைத்து உச்சி முகரும் தாய் என்பதையும் மறந்துவிடாதே. உனக்கு என்ன தேவை என்பதை நான் முற்றிலும் நினைவில் வைத்திருக்கிறேன். உன்னை துன்பச் சேற்றில் மூழ்கிவிட ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். உனது துக்கம் நிச்சயமாகவே மகிழ்ச்சியாக மாறும். உனது வாழ்க்கை சீர்படும் காலம் விரைவில் வரும். இதற்கு முன்னால் நீ கடந்துவந்த கடினமான பாதைகளை சற்று நினைத்துப் பார் அதிலெல்லாம் உன்னைத் தூக்கி சுமந்து காப்பாற்றி வந்தேன்.இனியும் அப்படியே உன்னை காப்பாற்றுவேன். உனக்குச் சோதனையாக தெரிகிற இந்த காலத்தை மனதில் வைத்துக்கொள்ளாதே. எனது அற்புதங்கள் இனி உன் வாழ்வில் நிகழ்வதற்காக ஏற்பட்டுள்ள ஒரு வழிதான் இந்த சோதனைகள். வாழ்க்கையில் சலிப்பும் வெறுப்பும் கொள்ளாதே. மனம் புண்ணாகி போனதே என வருந்தாதே .. இதோ என் மென்மையான கரங்களால் உன்னை வருடிக்கொண்டு உன் பக்கத்தில் தான் நான் உனக்காக இருக்கிறேன். மிக விரைவில் உன்னை பொன்னாக்கும் நாள் வந்துகொண்டிருக்கிறது.......................சாயியின் குரல்

Want your restaurant to be the top-listed Restaurant in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address


Colombo
00400