Tamil Media
Best entertainment page
16/05/2024
கிழக்கு ஆசிரியர் நேர்முகப்பரீட்சையில் நற்சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாத நிலையை ஆளுநர் கவனத்தில் கொள்ள வேண்டும் - இம்ரான் எம்.பி கோரிக்கை -
------------------------------------------—
கிராம உத்தியோகத்தர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாண ஆசிரியர் நேர்முகப்பரீட்சையில் நற்சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாத நிலை விண்ணப்பதாரிகளுக்கு உள்ளது. இதனை கிழக்கு மாகாண ஆளுநர் கவனத்தில் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை (இன்று) வியாழக்கிழமை ஆரம்பமாகி உள்ளது. இதன் போது கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் வதிவிடச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவது முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
தற்போது கிராம உத்தியோகத்தர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த வதிவிடச் சான்றிதழைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு இதற்கான மாற்று எற்பாடுகளைச் செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
02/05/2024
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2024
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo, Western
Colombo
01