Im fm

Im fm

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Im fm, Media/News Company, Colombo.

05/12/2017

அரசாங்க இயந்திரமும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணைந்து செயற்படுவதில் தவறில்லை

*தேர்தல் திகதியை தீர்மானிக்கும் போது அரசாங்க இயந்திரமும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணைந்து செயற்படுவதில் தவறில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் இன்ன திகதியில் இடம்பெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பதற்கு முன்னதாகவே கருத்து வெளியிடுகின்றனர்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கம் என்ற வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தேர்தல் திகதியை தீர்மானிப்பதில் எந்த தவறும் இல்லை.

யாருக்கு வேண்டுமானாலும் நல்ல நாள் ஒன்றில் தேர்தல் நடத்த யோசனை முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலும் அமைச்சர் இந்த ஊடக சந்திப்பில் கருந்து வெளியிட்டார்.

இந்த மனு எந்த வகையிலும் தேர்தலை தாமதப்படுத்தாது என்று அவர் கூறினார்.

மேலும் சிவனொளிப்பாதமலை வனப்பகுதி தொடர்பில் எதும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால், யாருக்கும் அநீதி ஏற்படாத வகையில் அந்த விடயம் தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
www.solaitv.lk

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Colombo