IRO
Islamic Research Organization's Official Facebook Fan Page.
02/04/2014
பாகம் 10
தொழுகையில் விளையாட்டு!
A.) ஒரு மனிதனிடத்தில், 'நீ லுஹர் தொழுகையை நிறைவேற்றினால் உனக்கு ஒரு தீனார் உண்டு' என்று சொல்லப்பட்டு அவரும் அந்த எண்ணத்தில் தொழுதால் அவருக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்.
ரத்துல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 447
B.) தொழுபவன் பறவை மீது கல்லெறிந்தால் அவனது தொழுகை வீணாகாது.துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677
C.) ஒருவன் பறவையை விரட்டினால் அல்லது ஏதோ ஒரு சப்தத்தினால் அழைத்தால் அவனுடைய தொழுகை வீணாகாது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677
D.)சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்னும் அல்லாஹ்வை மட்டும் கண்ணியப்படுத்தும் வார்த்தைகளைக் கூறி தொழுகையை ஆரம்பிப்பது மக்ரூஹ‚டன் கூடும்.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 521
E.)கடமையான தொழுகையில் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் தொழுபவன் விரும்பினால் சூரத்துல் பாத்திஹாவை ஓதலாம். விரும்பினால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லலாம். விரும்பினால் மவுனமாகஇருந்துவிடலாம்.
மப்சூத், பாகம்: 1, பக்கம்: 81
மத்ஹபு வாதிகளே! மத்ஹபுக் கிதாபுகள் தொழுகையைக் கேலிக்கூத்தாக ஆக்கிக் காட்டுகின்றன. மேற்கூறிய விளையாட்டுக்களுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள். இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி விளையாடி இருப்பார்களா?
02/04/2014
***சிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) - 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்***
சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியிருக்கும் இந்த நடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
தென்பசிபிக் கடல் ஒட்டிய சிலியின் இக்யூகியூ தீவு பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த நடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பீதியுடன் வீதிகளுக்கு வந்தனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன, 8 முறை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 20. 1 கிலோ மீட்டர் ஆழம் வரை இந்த நடுக்கம் இருந்தது. இந்த நடுக்கம் ஏற்பட்ட போது பலரும் தங்களை காத்து கொள்ள வீதிக்கு வந்த போது கடும் நெரிசல் உருவானது. இதனால் அங்கும், இங்கும் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடுக்கம் குறித்து இக்யூகியூ கவர்னர் கோன்சாயோ பிரிட்டோ கூறுகையில், பல வீடுகள் முழுமையாக சேதமடைந்து இருப்பதாகவும், பலர் காயமுற்று இருப்பதாகவும் தெரிகிறது. பெரு, பொலிவியாவிலும் இந்த நடுக்கம் எதிரொலித்ததை உணர முடிந்தது என்றார்.
அதிபர் பெக்லட் கூறுகையில் இந்த பகுதி பேரழிவை சந்தித்துள்ளது. இதற்கான மீட்பு பணிகள் துவங்கியிருக்கிறோம். நாளை (வியாழக்கிழமை) அங்கு சென்று பார்வையிடவுள்ளேன், என்றார்.
Click here to claim your Sponsored Listing.
Contact the school
Website
Address
No. 11/1 Haig Road, (Bambalapitiya) Colombo 04
Colombo
0094
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |