Alai TV

Alai TV

Share

The official page for AlaiTV - Reporting News & Current Affairs from Sri Lanka to the World in Tamil.

10/07/2026

தனது கழுத்தை தானே கூரிய பிளேட்டினால் அறுத்துக் கொண்ட நபர் இரத்த வெள்ளத்தில் மீட்பு!

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்ட நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், கூரிய பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்துக்கொள்வதை அவதானித்த கல்லடிப் பாலத்தில் கடமையிலிருந்த பொலிஸார், உடனடியாகச் செயற்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இருப்பினும், கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தினால் கல்லடிப் பாலத்தில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த நபர் எதற்காக இவ்வாறான முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

09/07/2026

பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக அறிவித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Photos from Alai TV's post 08/07/2026

காத்தான்குடியில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை தயாரித்த,விற்பனை செய்த உணவகங்கள்,வெதுப்பகங்களில் சுகாதார அதிகாரிகள் பாரிய தேடுதல்!

#பல வர்த்தக நிலையங்கள் மீ்து வழக்குத்தாக்கல்!

T.L. ஜெளபர்கான்

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Colombo